குழந்தைகளிடம் காணப்படும் 'செரிப்ரல் பால்சி': எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அறிகுறிகள்!

செரிப்ரல் பால்சி (பெருமூளை வாதம்) - தசைகளில் விறைப்பு, விழுங்குவதில் சிரமம் மற்றும் ஆரம்பக் கால நரம்பியல் பிரச்சனைகள்.
Cerebral Palsy - செரிப்ரல் பால்சி - பெருமூளை வாதம்
Cerebral Palsy - செரிப்ரல் பால்சி - பெருமூளை வாதம்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

செரிப்ரல் பால்சி (Cerebral Palsy) அல்லது பெருமூளை வாதம் என்பது குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அல்லது சேதத்தால், அவர்களின் உடல் இயக்கம், தசை கட்டுப்பாடு மற்றும் சமநிலை ஆகியவை பாதிக்கப்படும் ஒரு நிலையாகும். இது பொதுவாக பச்சிளம் பருவத்திலோ அல்லது குழந்தை பருவத்திலோ கண்டறியப்படுகிறது.

செரிப்ரல் பால்சி அறிகுறிகள்:

ஒரு குழந்தையினுடைய தசை இயக்கம், உடல் சமநிலை மற்றும் உடல் தோரணையை பாதிக்கும் இந்த நரம்பியல் குறைபாடுகளின் அறிகுறிகள் சில;

  • குழந்தைகளின் வளர்ச்சி நிலைகளில் மற்றும் தசைகளில் சில அறிகுறிகள் காணப்படும்.

  • தசைகளில் அதிகப்படியான விறைப்பு (Stiff muscles) அல்லது தளர்வு (Floppy muscle tone). தசைகள் மிகவும் கடினமாகவும் இறுக்கமாகவும் மாறுவது மிகவும் பொதுவான அறிகுறி ஆகும். சில குழந்தைகளுக்கோ தசைகள் மிகவும் தளர்ந்து பலவீனமாக இருக்கலாம்.

  • குழந்தை சரியான பருவத்தில் குப்புற விழுவது, தாமாக உட்காருவது, ஊர்ந்து செல்வது, நடக்கவோ அல்லது எழவோ காலதாமதம் ஏற்படுதல்.

  • தாய்ப்பால் குடிப்பது, உணவை விழுங்குவது மற்றும் உமிழ்நீர் வடிதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுவது.

  • உடலின் ஒரு பக்கத்தை மட்டும் அதிகமாகப் பயன்படுத்துவது.

  • கை கால்களை அசைப்பதில் சிரமம் மற்றும் சமநிலைக் குறைபாடு. கை விரல்களால் சிறிய பொருட்களைப் பிடிப்பதில் கடினம்.

  • சமநிலை இழப்பு, கைகள் அல்லது கால்கள் நடுக்கம் அடைவது அல்லது தன்னிச்சையான கட்டுப்பாடற்ற இயக்கங்கள்.

  • பேச்சு குறைபாடுகள், பார்வை அல்லது கேட்டல் குறைபாடு மற்றும் வலிப்பு போன்ற நரம்பியல் பிரச்சனைகள்.

பெருமூளை வாதத்தை ஏற்படுத்தும் மூளைக் கோளாறு காலப்போக்கில் மாறுவதில்லை. அறிகுறிகள் பொதுவாக வயதாக ஆக மோசமடைவதில்லை. இருப்பினும் குழந்தைக்கு வயதாக ஆக, சில அறிகுறிகளை எளிதாகக் கண்டறிய முடியும். தீவிரமாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தசைச் சுருக்கம் மற்றும் தசை விறைப்பு மோசமடையக் கூடும்.

செரிப்ரல் பால்சி வர காரணங்கள்:

  • பிறப்பதற்கு முன், பிறக்கும் பொழுது அல்லது பிறந்த பிறகு மூளையில் ஏற்படும் காயங்கள் அல்லது வளர்ச்சிக் குறைபாடே இதன் முக்கிய காரணமாகும்.

  • கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் காய்ச்சல் அல்லது கடுமையான தொற்றுகள் மற்றும் கருவின் மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டம் அல்லது ஆக்சிஜன் குறைபாடு.

  • பிறக்கும் போது ஏற்படும் தாமதம் அல்லது பிரசவத்தின் பொழுது மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போவது.

  • பச்சிளம் பருவத்தில் ஏற்படும் மூளைக் காய்ச்சல், தலைக்காயங்கள் அல்லது நச்சுத்தன்மை.

Cerebral Palsy - செரிப்ரல் பால்சி - பெருமூளை வாதம்
Cerebral Palsy - செரிப்ரல் பால்சி - பெருமூளை வாதம்

செரிப்ரல் பால்சி தீர்வுகள் (Treatments and Solutions):

செரிப்ரல் பால்சியை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், முறையான சிகிச்சைகள் மூலம் குழந்தையின் வாழ்வுத்தரத்தை மேம்படுத்த முடியும்.

பிசியோதெரபி:

தசை விறைப்பைக் குறைக்கவும், நடை மற்றும் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. இது வலிமை, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுகிறது. குழந்தைகள் உட்கார, படுக்க, நிற்க மற்றும் தசை விறைப்பைக் குறைக்க இந்த உடல் சிகிச்சை பெரிதும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டும்போது செய்யக்கூடாத தவறுகள்!
Cerebral Palsy - செரிப்ரல் பால்சி - பெருமூளை வாதம்

தொழில்சார் சிகிச்சை (Occupational Therapy):

குழந்தைகள் தங்களின் அன்றாடப் பணிகளான தாங்களாகவே சாப்பிடுவது, உடை அணிவது போன்ற அன்றாட வேலைகளைத் தாங்களாகவே செய்யப் பயிற்சி அளிக்கிறது.

பேச்சுப் பயிற்சி (Speech Therapy):

பேசுவதில் சிரமம் உள்ளவர்களுக்கு தொடர்பு கொள்ளும் திறனை வளர்க்கிறது. பேசுவதற்கும், உணவை விழுங்குவதற்கும் பயிற்சி அளிக்கிறது.

மருந்துகள்:

தசை இறுக்கத்தைக் குறைக்க மற்றும் வலிப்பு போன்ற நரம்பியல் சிக்கல்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுகின்றன.

அறுவை சிகிச்சைகள்:

தசைப்பிடிப்பைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் அல்லது தீவிர நிலைகளில் தசை இறுக்கம் மற்றும் எலும்பு பாதிப்புகளை சீரமைக்க எலும்பியல் அல்லது நரம்பியல் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

மற்ற சிகிச்சைகள் பலனளிக்காத பொழுது அல்லது தீவிர தசை இறுக்கம் மற்றும் எலும்பு மாற்றங்கள் ஏற்படும்பொழுது மட்டுமே அறுவை சிகிச்சை பரிசீலிக்கப்படுகிறது.

உதவி உபகரணங்கள்:

குழந்தைகள் எளிதாக நடப்பதற்கும் நகர்வதற்கும் ஏதுவாக பல்வேறு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கால்கள் மற்றும் கைகளின் வடிவத்தைச் சீராக வைக்க உதவும் பிரேஸ்கள் (Braces) அல்லது பிளவுகள் (Splints). நடப்பதற்கு உதவும் வாக்கர்கள், சக்கர நாற்காலிகள் (Wheelchairs), ஊன்றுகோல்கள் (Crutches) அல்லது சிறப்பு காலணிகள் பயன்படுத்தப்படலாம்.

இதையும் படியுங்கள்:
மாத்திரை அட்டையில் சிவப்பு கோடு இருக்கா? உஷார்! இல்லனா உயிருக்கே ஆபத்து!
Cerebral Palsy - செரிப்ரல் பால்சி - பெருமூளை வாதம்

Reference:

logo
Kalki Online
kalkionline.com