நாம் சாப்பிடும் உணவு வகைகளில் மிகவும் பிரதானமாக அனைவராலும் பரிந்துரைக்கப்படுவது கீரை வகைகள் ஆகும். அந்த வகையில் நாம் நமது ஊரில் உள்ள முருங்கை கீரை, பசலைக் கீரை, சிறு கீரை, அகத்தி கீரை ஆகியவற்றை உணவாக சமைத்து சாப்பிடுகிறோம்.
இந்த சயா கீரை என்பது சயா இலைகள் (Chaya leaves) அல்லது மரவள்ளிக்கீரை. இது ஒரு சத்துள்ள கீரையாகும். இது மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது. இந்த கீரையை மாயன் கீரை என்றும் அழைக்கிறார்கள்.
இது புரதம், வைட்டமின்கள், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ஒரு கீரையாகும். இதை சமைப்பதற்கு முன் கவனமாக கையாள வேண்டும், ஏனெனில் இதிலுள்ள நச்சுத்தன்மையை நீக்க வேண்டும்.
சயா இலைகளை சமைக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
சயா இலைகளில் நச்சுத்தன்மை உள்ளது. எனவே அவற்றை பச்சையாக சாப்பிடக்கூடாது.
இலைகளை நன்கு வேகவைத்து அல்லது வதக்கி சமைக்க வேண்டும், இதன் மூலம் நச்சுத்தன்மை நீங்கும்.
சமையலுக்கு பயன்படுத்துவதற்கு முன் இலைகளை நறுக்கி, நன்கு கழுவ வேண்டும்.
சயா கீரை அல்லது மாயன் கீரை என்றழைக்கப்படும் இந்த கீரை இலைகளை நாம் சாப்பிடும் அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டுமென மருத்துவ அறிவியலாளர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்.
இந்த கீரை இலைகளில் புரதம். வைட்டமின் சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அடங்கியது. இதை உணவில் சேர்த்து சாப்பிட்டால் நமது உடலின் சக்தியை அதிகப்படுத்துகிறது. கூடுதலாக இந்த கீரையில் வைட்டமின் ஏ சத்தும் அடங்கியுள்ளது.
உடலின் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும், சரும ஆரோக்கியத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் சிறப்பானதாகும். மேலும் கண் பார்வை கூடுதல் திறனுக்கு உறுதுணையாகவும் இருக்கிறது. உடலின் செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரிகின்றது.
இந்த கீரை இலைகள் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த நோய்களும் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இது இன்னமும் ஆய்வில் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதால், இதை நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தங்களது குடும்ப நல மருத்துவரை கலந்து ஆலோசித்த பின்னர் இந்த கீரை உணவை சேர்த்து கொள்ளலாம்.
இந்த கீரை சாப்பிடுவதால் உடல் எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் வலிமைக்கும், உடலில் இரத்தத்தில் ஆக்ஸிஜன் சேர்ந்து உடல் முழுவதும் பரவி செல்வதற்கும் பயனுள்ளதாக உள்ளது.
சயா கீரை இலைகளில் ஆக்ஸிஜேனற்ற தடுப்பி அதிகமுள்ளதால் ஸ்ட்ரெஸ் அதிகமாயிருந்தால், அதனை சரிப்படுத்த ஏதுவாகிறது. மேலும் நீண்டகால நோய் ஏதாவது இருந்தாலும் அவற்றை எளிதில் குணமாக்குகிறது.
இந்த சயா கீரை உணவு எளிதில் சமைக்க கூடிய வகையில் உள்ளது. சாலட் ஆகவும் சமைத்து சாப்பிடலாம். உங்கள் தேவைக்கேற்ப உணவுகளில் சேர்த்தும் சமைப்பது எளிதானது என்பது இந்த கீரையின் சிறப்பாகும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)