

கொலஸ்ட்ரால் உடலுக்கு மிகவும் முக்கியமான கொழுப்புகளில் ஒன்று.. பலரும் நினைப்பது போல கொலஸ்ட்ராலை ஒரு கெடுதலான விஷயமாக பார்க்க கூடாது.. கொலஸ்ட்ரால் ஒருவரது உடலில் இயற்கையாகவே உற்பத்தி ஆகிறது.. மற்றும் உணவுகள் மூலம் கிடைக்கிறது.. உடலுக்கு குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப் படுகிறது..
நாம் உயிர் வாழ அது அவசியம் ஆகும்.அதே சமயத்தில் அது அதிகமாக இருப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.. இதயம் மற்றும் ரத்த நாளப் பிரச்சனைகளுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது... lipid profile என்ற ரத்த பரிசோதனை இதயத்தைப் பாதுகாப்பதற்கான சிகிச்சையை வழங்க உதவும்..
HDL கொலஸ்ட்ரால் என்பது ஒரு நல்ல கொலஸ்ட்ரால் என்றும் இது உங்கள் தமனிகளைப் பாதுகாக்க உதவும் என்றும் LDL கொலஸ்ட்ரால் ஒரு கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அது அதிகமாக இருந்தால் இதயம் பாதிக்கப்பட்ட வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது..
கொலஸ்ட்ராலை குறைக்கும் 10 உணவுகளைப் பார்ப்போமா?
1. ஓட்ஸ் மற்றும் பார்லி
இவற்றில் உள்ள betaglucan என்ற கரையக் கூடிய நார்ச்சத்து கெட்ட கொழுப்பை உறிஞ்சி உடலில் இருந்து வெளியேற்றுகிறது..
2. பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
காராமணி கொண்டைக்கடலை, துவரம்பருப்பு போன்ற பருப்பு வகைகளில் நார்ச்சத்து மற்றும் தாவரபுரதம் நிறைந்துள்ளது..இவை கொழுப்பை குறைக்க உதவும்..
3.. நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், அக்ரூட்,ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகளில் இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன
4. மீன் வகைகள் (அசைவம் சாப்பிடுபவர்களுக்கு)
சால்மன் மத்தி போன்ற மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன..இவை டிரைகிளிசரைட் அளவை குறைக்க உதவும்..
5. அவகேடோ
Avacado வில் உள்ள monosaturated கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்து கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகின்றன..
6. ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் பழங்கள்
pectin எனப்படும் கரையக் கூடிய நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் திராட்சை எலுமிச்சை போன்ற பழங்கள் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கின்றன..
7. காய்கறிகள்
கத்திரிக்காய் மற்றும் வெண்டைக்காய் குறைந்த கலோரியும் அதிக நார்ச்சத்தும் கொண்டவை..இவை ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்..
8. பூண்டு
பூண்டு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது..கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது..
9. சோயா உணவுகள்
Tofu soya milk, மற்றும் சோயா பீன்ஸ் போன்றவை உட்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.
10. ஆலிவ் எண்ணெய்
சமையலுக்கு ஆலீவ் எண்ணெய் மிகவும் சிறந்தது. அது கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?
முழு கொழுப்புள்ள பால், வெண்ணெய், சீஸ், பேக்கரி உணவுகள், கேக், சாக்லேட் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்..
கொலஸ்ட்ராலை குறைப்பதில் நடைபயிற்சி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இது கெட்ட கொழுப்பை குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் செய்கிறது. தினமும் முப்பது நிமிடங்கள் வேகமாக நடப்பது நல்லது. மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி உணவு முறை மாற்றங்களுடன் இந்த நடைப்பயிற்சியும் செய்யும் போது கொலஸ்ட்ரால் அளவு சரிவிகிதத்தில் இருக்கும்.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
அதாவது முந்தைய வேளையில் உண்ட உணவு செரித்து விட்டது என்பதை அறிந்து அதன் பின் ஆரோக்கியமாக உண்பவருக்கு உடலில் எந்த மருந்தும் தேவையில்லை. இந்த வள்ளுவர் வாக்குப்படி நம் உடலுக்கு நன்மை தரும் உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference