பச்சைத் தண்ணீரா? வெந்நீரா? ஆரோக்கியத்திற்கு எந்த குளியல் சிறந்தது?

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் சிறந்த குளியல் முறை எது? தெரிந்து கொள்ளுங்கள்!
Bathing | குளியல் முறை
Bathing | குளியல் முறை
Updated on

புத்துணர்ச்சிக்கு பச்சைத் தண்ணி குளியல்!

உடம்பு வலிக்கு வெந்நீர் குளியல்!

இரண்டும் கிடைக்க எந்த குளியல் முறை?

பார்ப்போமா...

"கூழானாலும் குளித்துக் குடி. கந்தையானாலும் கசக்கி கட்டு " என்பது முன்னோர் வாக்கு. அன்றாட அவசிய செயல்களில் குளியலுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. இதில் பச்சை தண்ணீர் குளியல், வெண்ணீர் குளியல் என இரண்டு வகைகள் இருந்தாலும் எந்த நேரத்தில் எதில் குளித்தால் ஆரோக்கியம் என்பது பலருக்கும் குழப்பமான ஒன்று. பச்சைத் தண்ணீர் குளியல் வெண்ணீர் குளியல் என இரண்டிற்கும் உடல் மற்றும் நரம்பியல் ரீதியாக வெவ்வேறு நன்மைகள் உள்ளன. அவற்றை இப்பதிவில் காண்போம்....

காலை மற்றும் வொர்க் அவுட்டிற்குப் பிறகு சிறந்த குளியல் முறை:

காலை எழுந்ததும் காலை கடன்களை முடித்து வாக்கிங் சென்ற பிறகும், ஜிம்மிற்கு சென்று வந்த பிறகும், வொர்க் அவுட் செய்த பிறகும் 10 டிகிரி முதல் 15 டிகிரி செல்சியஸ் பச்சைத் தண்ணீரில் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் நேச்சுரல் பயாலஜிக்கல் ரீசெட் போல உடல் செயல்பட்டு ஆரோக்கியத்தை வழங்கும்.  

உடனடி சுறுசுறுப்புக்கு பச்சை தண்ணீர் குளியல் 

உடலில் பச்சைத் தண்ணீர் முதலில் பட்டதும் ஷாக் நிலைக்குச் செல்லும். உடலில் இருந்து எண்டோர்பின், அட்ரினல் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இதனால் இதயத்துடிப்பு அதிகரிப்பதோடு அதன் காரணமாக ஆக்சிஜன் உள்வாங்குதல் அதிகமாகி நொடிகளில் சுறுசுறுப்பை வழங்குகிறது. மேலும் தூக்கக் கலக்கம் நீங்கி சுறுசுறுப்பான உணர்வை பெறுவீர்கள்.

Bathing | குளியல் முறை
Bathing | குளியல் முறை

தசை வலி குறைக்கும் பச்சை தண்ணீர் குளியல் 

தசைகளில் லாக்டிக் அமிலம் வொர்க் அவுட் செய்யும் போது சேர்கிறது. ஆகவே வொர்க்அவுட் செய்த பிறகு பச்சைத் தண்ணீரில் குளிக்கும் போது இரத்த குழாய்களை சுருங்கச் செய்து, லாக்டிக் அமிலத்தை வெளியேற்றி தசை வீக்கத்தை குறைக்கும் வேலையை பச்சை தண்ணீர் அருமையாக செய்கிறது.

சருமம் மற்றும் முடிக்கு ஏற்ற பச்சை தண்ணீர் குளியல்

வெந்நீர் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அகற்றுவதைப் போல பச்சை தண்ணீர் செய்யாது. மாறாக முடியின் வேர்க்கால்களை பூட்டி சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும் ஒப்பற்ற மருந்தாக இருக்கும் வேலையை பச்சைத் தண்ணீர் குளியல் செய்கிறது.

மாலை நேரத்திற்கு ஏற்ற வெந்நீர் குளியல் 

மாலை அல்லது இரவு படுக்க செல்வதற்கு முன்பும், உடல் வலி அல்லது உடல் அசதி இருக்கும் போதும் வெதுவெதுப்பான அல்லது சூடான நீரில் குளிப்பது சிறந்தது. ஏனெனில் இது ஹீட் தெரபி போல செயல்பட்டு உடலுக்கு நிவாரணத்தை வழங்குகிறது. 

ஆழமான தூக்கத்திற்கு வெந்நீர் குளியல்

தூங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பாக அதாவது 90 நிமிடங்களுக்கு முன்பு வெந்நீரில் குளித்தால் உடம்பில் உள்ள ரத்த குழாய்கள் விரிவடைந்து, உடல் வெப்பநிலையை குளித்துவிட்டு வந்த பிறகு வேகமாகக் குறைக்கின்றன. தூங்குவதற்கான நேரம் இது என்பதை மூளைக்கு சிக்னல் கொடுப்பதை வெந்நீர் குளியில் கணக்கச்சிதமாக செய்கிறது. 

மூட்டு வலிக்கு நிவாரணம் கொடுக்கும் வெந்நீர் குளியல் 

தசைகள் மற்றும் மூட்டுகளின் இறுக்கத்தைக் குறைத்து ரத்த ஓட்டத்தை அதிகரித்து, நாள்பட்ட வலிகளை வெந்நீர் குளியல் குறைத்து நிவாரணம் அளிக்கின்றன. 

மூக்கடைப்பு நீக்கும் வெந்நீர் குளியல்  

மூக்கின் துவாரங்களை திறந்து சளியை இறுகச் செய்யும் வேலையை வெந்நீரில் இருந்து வரும் நீராவி செய்கிறது. இதனால் மூக்கடைப்பு நீங்கி நிவாரணம் பெற முடிகிறது. 

இதையும் படியுங்கள்:
காசு பணம் செலவு இல்லை; மருந்து மாத்திரை தேவை இல்லை; நிம்மதியா தூக்கம் வர, இந்த குளியல் ஒன்று போதுமே!
Bathing | குளியல் முறை

இரண்டையும் ஒன்றாக்கும் கான்ட்ராஸ்ட் ஷவர் பலன்கள்  

கான்ட்ராஸ்ட் ஷவர் இரண்டு விதமான குளியலையும் ஒன்றாக்கி கொடுக்கிறது. அதாவது முதலில் வெந்நீரில் குளித்துவிட்டு கடைசி 30 லிருந்து 60 வினாடிகள் வரை பச்சைத் தண்ணீரை உடம்பில் ஊற்றிக் கொள்வதால் திடீர் மாற்றத்தின் காரணமாக ரத்த நுண்சுழற்சி அதிகரித்து ( micro circulation)  சருமத்தின் ஈரப்பதம் குறையாமல் வைத்திருப்பதோடு நாள் முழுவதும் ஆற்றலையும் வழங்குகிறது. 

ஆகவே சுறுசுறுப்புக்கு பச்சை தண்ணீரும், தூக்கத்திற்கு வெந்நீர் குளியலையும் குளிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
வெயில் காலத்தில் ஏன் எண்ணெய் குளியல் அவசியம்? காரணம் தெரிந்தால் வியந்து போவீர்கள்!
Bathing | குளியல் முறை
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com