மன அழுத்தத்தால் அவதியா? உங்கள் கவலையை விரட்டும் எளிய ரகசியம்!

ஓவியம் வரைவது, எழுதுவது மற்றும் இசை போன்ற படைப்பாற்றல் செயல்கள் எவ்வாறு டோபமைனைச் சுரக்கச் செய்து கவலையைப் போக்குகின்றன?
Creative ability | படைப்பாற்றல் திறன்
Creative ability | படைப்பாற்றல் திறன்Image credit: ChatGPT
ச. நாகராஜன்

ச.நாகராஜன், மங்கையர் மலர், தினமணி, ஆனந்த விகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தி இந்து உள்ளிட்ட 46 இதழ்களில் 6000-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். புஸ்தகா, நிலாச்சாரல் உள்ளிட்ட பதிப்பகங்கள் வழியாக இதுவரை 219 நூல்களை வெளியிட்டுள்ளார்.

Updated on: 

இன்றைய நவீன உலகில் கவலையும் மன அழுத்தமும் இல்லாத மனிதரையே பார்க்க முடியாது.

  • அலைபாயும் மனம்

  • வேகமாகத் துடிக்கும் இதயத் துடிப்பு

  • அமைதியின்மை

  • தசைகளில் டென்ஷன்

  • எதிலும் கவனம் செலுத்த முடியாத தன்மை

இதுவே இன்றைய வாழ்க்கையின் நிலைமை – ஒவ்வொருவருக்கும்.

நிலைமை மோசமாகும் போது சிகிச்சைக்காக ஓடுகிறோம் – CBT – Cognitive Behavioral Therapy நிபுணர்களிடம்.

இதை நீக்க ஒரு எளிய வழி உங்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிப்பது தான்!

உலகின் ஆகப் பெரிய உளவியல் நிபுணரான மிகாலே சிக்ஸேன்மிகாலே (Mihaly Csikszentmihalyi) தன் ஆய்வின் மூலம் ஃப்ளோ (FLOW) என்ற வார்த்தையை படைப்பாற்ற; மனநிலையை விவரிக்கக் கண்டுபிடித்தார். ஒரு மனிதன் தன்னை மறந்து ஒரு செயலில் ஈடுபடும்போது அவன் ஃப்ளோவில் இருக்கிறான் என்று அர்த்தம். நல்ல இசை, எழுதுவது, நடனம் ஆடுவது போன்ற செயல்கள் ஒருவரை ஃப்ளோவில் கொண்டு விடுகிறது. இது இயல்பான செலவே இல்லாத மகிழ்ச்சி தரும் கவலையைப் போக்கும் வழியாகும்.

இதனால் மூளையில் பயத்தை ஏற்படுத்தும் அமிக்தலா அமைப்பு தனது செயலை நிறுத்திக் கொள்கிறது. இதனால் மன அழுத்தமும் கவலையும் ஏற்படுவதே இல்லை.

படைப்பாற்றல் மூலம் ஒரு ஓவியத்தை சிருஷ்டித்தாலோ, ஒரு கவிதை அல்லது கட்டுரையை எழுதி முடித்தாலோ, ஏன் ஒரு புதுவித உணவு பதார்த்தத்தை நாமே செய்தாலோ ஏற்படும் மகிழ்ச்சியே தனி தான்! அப்போது டோபமைன் உடலில் வெளிப்படுகிறது. இதுதான் திருப்தியை அளித்து மகிழ்ச்சியை அளிக்கும் ஹார்மோன்.

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பயமுறுத்தும் செயல்களை ஒதுக்கி விட்டு நிகழ்காலத்தில் வாழ வழி வகுப்பது இந்த படைப்பாற்றல் திறன் தான்.

கிரேக்கர்களும் இந்தியர்களும் பழைய காலத்தில் இசை, கவிதை, ஓவியம், நாடகம் ஆகியவற்றில் போதுமான அளவு மனதைச் செலுத்தி வாழ்க்கையை அனுபவித்தனர்.

கார்ல் ஜங் என்ற பிரபல விஞ்ஞானி இதைத் தன் சிகிச்சையில் ஒரு பகுதியாகவே அறிமுகப்படுத்தினார்.

என்ன செய்யலாம்? இதை நீங்களே முடிவு செய்யலாம்.

  • ஏதேனும் ஒரு கலை அல்லது ஓவியத்தில் ஈடுபடுவது

  • நாட்குறிப்பு எழுதுவது அல்லது கதை, கட்டுர, கவிதை படைப்பது

  • இசை, நடனம் ஆகியவற்றில் மனதைச் செலுத்துவது

  • தையல், பின்னல் வேலை, சமைத்தல் உள்ளிட்டவற்றில் ஆர்வம் உள்ளோர் அதில் ஈடுபடுவது

  • நடிப்பில் ஈடுபாடுள்ளவர்கள் அதில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவது

உங்களை யார் என்று அடையாளம் காட்டுவது இந்தச் செயல்களே.

Creative ability | படைப்பாற்றல் திறன்
Creative ability | படைப்பாற்றல் திறன்

இது பல்வேறு ஆய்வுகளின் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டு விட்டது.

2016ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இது போல 45 நிமிடம் கலை ஓவியம் ஆகியவற்றில் ஈடுபடுவதானது, முன் அனுபவம் இல்லாமல் ஈடுபட்டாலும் கூட, அது கார்டிஸால் அளவைக் குறைக்கிறது என்பது காணப்பட்டது.

ஜேம்ஸ் பென்பேகர் ஆய்வின் முடிவின் படி தனது உணர்வுபூர்வமான டயரியை ஒவ்வொரு நாளும் 20 நிமிடம் எழுதுவதானது மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சலா? பயம் வேண்டாம்... மருத்துவர் ஆலோசனை!
Creative ability | படைப்பாற்றல் திறன்

இதே போல இசை சிகிச்சையானது மன அமைதியைத் தருவதையும் மனதை ஒருமுகப்படுத்துவது பின்னல் வேலை உள்ளிட்டவற்றில் ஈடுபடும் போது ஏற்படுவதையும் நிபுணர்கள் கண்டனர்.

ஆழ்மனதில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்தி பகுத்தறிவை ஒரு பக்கமாக ஒதுக்கி வைப்பது இந்த படைப்பாற்றல் செயல்களே தான்!

தன்னைத் தானே மோசமாக விமர்சித்துக் கொள்ளாமல் மனம் மகிழும் வேலையில் ஈடுபட்டு இதே போல ஒத்த மனதுடன் படைப்பாற்றலில் ஈடுபடுவருடன் இணைவது வாழ்க்கையை ஒரு புதிய திசையில் நடைபோட உதவும்.

இத்துடன் தியானம், மைண்ட்ஃபுல்நெஸ் பயிற்சிகளும் சேர்ந்தால், பிறகென்ன, கவலை ஓடி விடும்.

மன உறுதி அதிகரிக்கும். தவறுகளைக் கண்டு அவற்றைத் தவிர்க்க உதவும்.

பிறரின் பாராட்டுகள் குவியும் போது மனம் மகிழும். நம்பிக்கை அதிகரிக்கும்.

உணர்வு நிலைகளிலும் மனநிலைகளிலும் ஒரு கட்டுப்பாடு ஏற்பட்டு குடும்பத்தினரிடையேயும், நண்பர்கள், உறவினரிடையேயும் உற்சாகமாகப் பழகும் சூழ்நிலை ஏற்படும்.

என்ன சார், வேகமாக பேப்பர், பேனாவை எடுக்க ஓடுகிறீர்கள், அட, ஒரு புது படைப்பாளி பிறந்து விட்டார் போலும்!

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு மறுநாள் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பா? தப்பிக்க 5 வழிகள்!
Creative ability | படைப்பாற்றல் திறன்

Reference: