தொப்பைக்கு டாட்டா சொல்லும் சீரகத் தண்ணீர்!

சீரக தண்ணீர்
சீரக தண்ணீர்

சீரகம் மிகவும் எளிமையாகக் கிடைக்கும் பொருள். வயிற்றுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனே நம் நினைவுக்கு வரும் ஒன்றுதான் சீரகம். சீரகத்தில் எண்ணற்ற மருத்துவப் பயன்கள் உள்ளன. சீரகத் தண்ணீரை தினமும் காலையில் குடிப்பதால் நமது உடலில் இன்சுலின் உற்பத்தி தூண்டப்படுகிறது. அதோடு க்ளைகோஸ்லேடேட் ஹீமோகுளோபின் அளவையும் குறைக்கிறது.

ஆண்கள், பெண்கள் என பலருக்கு இருக்கும் பெரிய பிரச்னையில் தொப்பையும் ஒன்று. என்னதான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும் தொப்பையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று பலரும் தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். குப்பையில் போட வேண்டிய சில பொருட்களையும் நம் வயிற்றுக்குள் போடுகிறோம். இதனால் வயிற்றில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து தொப்பை உருவாகிறது.

சமீப காலமாக பலரும் தங்களது தொப்பையைக் குறைக்க தினமும் சீரகத் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சீரகத் தண்ணீர் நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மெட்டபாலிஸத்தையும் அதிகப்படுத்துகிறது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இதன் காரணமாகவே நமது உடலில் கொழுப்பு சேர்வதை தடுத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவும் உணவுகள்!
சீரக தண்ணீர்

சீரகத்திலுள்ள தைமோகுயினோனின் நமது கல்லீரலை பாதுகாக்கிறது. இது நொதிகளை உற்பத்தி செய்ய கனையத்தைத் தூண்டுகிறது. இதன் காரணமாக செரிமானம் எளிதாகிறது. செரிமானம் ஆரோக்கியமாக இருந்தால் வயிற்றில் சேரும் கொழுப்பும் குறைகிறது. ஒரு தம்ளர் சீரகத் தண்ணீர் குடிப்பதால் கார்போஹைடரேட்ஸ், குளுகோஸ், கொழுப்புகள் போன்றவை துண்டு துண்டாக உடைக்கப்படுகின்றன. இதனால் அஜீரணப் பிரச்னை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

எப்போது குடிக்கலாம்?

சீரகத் தண்ணீர் குடிக்க நேரம் எதுவும் இல்லை. பொதுவாக, தண்ணீர் குடிப்பதற்கு பதிலாகவே சீரகத் தண்ணீரை தொடர்ச்சியாகக் குடித்து வந்தாலே அது சிறந்த பலனைத் தரும். உணவு சாப்பிடும்போதுகூட குடிக்கலாம். இதனால் உடலில் கொழுப்பு சேராமல் கரைந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com