நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே நாம் எதிர் கொள்ளும் வியாதிகளுக்கு தீர்வு கிடைக்க வழி செய்யலாம். இதோ அதற்கான குறிப்புகள்:
1. 20 கிராம் வெள்ளை வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து தினமும் சாப்பிட்டு வர ரத்தமூலம் நீங்கும்.
2. சர்க்கரை வியாதி உள்ளவர்கள், உணவில் அடிக்கடி கோவக்காயை சேர்த்து வந்தால் சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும்.
3. வெங்காயச்சாற்றில் மஞ்சள் பொடியைக் குழைத்து தடவினால் அடிபட்ட காயம் விரைவில் ஆறும்.
4. ஆறாத புண்களுக்கு விராலி மஞ்சளைச் சுட்டு சாம்பலை, தேங்காய் எண்ணையில் குழைத்துத் தடவ, விரைவில் குணமாகும்.
5. வேப்ப எண்ணெயை மஞ்சள் சேர்த்துக் குழைத்து பித்த வெடிப்பு மீது தடவி வர விரைவில் குணமாகும்.
6. பாகற்காயின் தளிர் இலைகளை சாப்பிட்டு வந்தால் இருமல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு போன்றவை சரியாகும்.
7. வெந்தயத்தை ஊற வைத்து, அதனுடன் மருதாணி, கற்றாழை சேர்த்து அரைத்து தலையில் தடவினால் பூச்சி வெட்டு குறையும்.
8. மஞ்சள், நெல்லி வேப்பிலையை பொடியாக்கி தினம் இருவேளை நீரில் கலந்து சாப்பிட்டு வர இளநரை மறையும்.
9. வாய் திக்குபவர்கள் வில்வ இலையைப் பொடியாக்கி தினமும் காலையில் மென்று தின்று வரவும்.
10. தலைசுற்றல், தலைவலிக்கு இஞ்சியுடன், வெங்காயத்தை அரைத்து பற்றுப் போட்டால் சரியாகி விடும்.
11. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியைப் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்துக் குடித்து வர ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.
12. பச்சை கறிவேப்பிலையை அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண் ஆறி விடும்.
13. உடல் பருமன் உள்ளவர்கள் பாலை தண்ணீர் விட்டுக்காய்ச்சி சிறிது இஞ்சி போட்டுக் கொதிக்க வைத்துக் குடித்து வர உடலில் தேவையில்லாத கொழுப்பு குறையும்.
14. வயிற்றில் புண் உள்ளவர்கள் பூசணி, முட்டைக்கோஸ், ஆப்பிள் போன்ற உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
15. சுத்தமான கடலை எண்ணெய் ஒரு ஸ்பூன், எலுமிச்சைச்சாறு கலந்து கண்களின் கீழ் பூசி வந்தால் கருவளையம் மறையும்.
16. கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் காபிப்பொடியையைப் போட்டு ஆவி பிடித்தால் ஜலதோஷம் நீங்கி விடும்.
17. குடிப்பதற்கு வெந்நீர் வைக்கும் போது அதில் ஒரு துண்டு சுக்கைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் வாயுத்தொல்லை விலகி விடும்.
18. இரத்தசோகை நோய் உள்ளவர்கள் தேநீருக்குப் பதிலாக எலுமிச்சைச் சாறு பருகவும். இதனால் இரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு அதிகமாகி இரத்த சோகை நோய் நீங்கி விடும்.
19. தினமும் நெல்லிக்காய்ப்பொடித் தூள் அரை ஸ்பூன் சாப்பிட்டு வர உடல் சதைப்பிடிப்பு கூடும்.
20. தேங்காய் எண்ணெயில் வெங்காயச்சாற்றைப் பிழிந்து, தலைக்குத் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லை ஒழிந்துவிடும்.
21. தொண்டை வலி, தொண்டைக்கட்டு இருந்தால், தேயிலைத் தூள் போட்டுக் கொதிக்க வைத்த வெந்நீரைக்கொண்டு வாய் கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
22. 500 கிராம் நல்லெண்ணெயில் 50 கிராம் ஜீரகம் போட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி எடுத்து, தினமும் தலைக்குத் தடவி வந்தால், சுகநித்திரை உண்டாகும்.
23. எக்காரணத்தினால் உடம்பு இளைத்திருந்தாலும், ஒரு நாளைக்கு கொஞ்சம் பேரீச்சம்பழங்களை உணவுக்கு முன் சாப்பிட்டு வர உடல் தேறும்.
24. மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளும். இதற்கு பசும்பாலில் கொஞ்சம் ஓமத்தைப் போட்டுக் காய்ச்சி வடி கட்டிக் கொடுத்தால் சளி கரைந்து விடும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)