

நம்மில் பெரும்பாலானோர் தேனீர் குடிக்கிறோம். ஆனால் நாம் சாப்பிடும் தேநீரில் கணக்கில்லாமல் ப்ளாஸ்டிக் கலந்திருப்பது தெரியாமல் குடிக்கிறோம். இந்த ப்ளாஸ்டிக்கும் பல வழிகளில் நம் உடலுக்குள் வந்து சேர்கிறது. ஆராய்ச்சியாளர்களின் படி பிளாஸ்டிக்கில் மைக்ரோப்ளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் என இரு வகைகள் உண்டு. மைக்ரோ ப்ளாஸ்டிக் என்பது ஒரு மைக்ரோ மீட்டரில் இருந்து 5மில்லி மீட்டர் வரை இருக்கும். நானோ ப்ளாஸ்டிக் என்பது ஒரு மைக்ரோ மீட்டர் கீழ் இருக்கும.
இவ்வளவு சிறிய அளவில் இருக்கும் ப்ளாஸ்டிக் துகள்கள் பலவழிகளில் நம் உடலில் சேர்கிறது. பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் தேனீரில் பாட்டில் மற்றும் பாட்டில் மூடியிலிருந்தும் ப்ளாஸ்டிக் நம்மை வந்து சேரும். மேலும் டீ குடிக்கும் ஸ்ட்ரா அதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் மூலமும் ப்ளாஸ்டிக் சேர்கிறது.
தேனீர் பைகள், தேனீர் பாக்கெட்டுகளில் ப்ளாஸ்டிக் சேர வாய்ப்புண்டு.
பெரும்பாலும் தேனீர் பைகளில் அதிக அளவு ப்ளாஸ்டிக் சேர்வதாக அறியப்படுகிறது. ஏனென்றால் பெரும்பாலான தேனீர் பைகள் பேப்பரால் தயாரிக்கப்படுகின்றன. பல தேனீர் பைகளில் தாவர பொருட்கள் மற்றும் ப்ளாஸ்டிக் கலப்பது தெரியவருகிறது. இந்த தேனீர் பைகளை ஆராய்ச்சி செய்ததில் ப்ளாஸ்டிக் இருப்பது தெரியவந்துள்ளது. 2019-ல் மெக்கில் பல்கலைக்கழகம் (McGill University) நடத்திய ஆய்வில், ஒரு பிளாஸ்டிக் தேனீர் பையை 95°C சுடுநீரில் நனைக்கும்போது சுமார் 11.6 பில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் மற்றும் 3.1 பில்லியன் நானோபிளாஸ்டிக் துகள்கள் வெளியாவதாகக் கண்டறியப்பட்டது.
பெரும்பாலான தேனீர் பைகள் பயோப்ளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுகின்றன. தண்ணீர், மற்றும் டீத்தூள் எல்லாவற்றிலுமே கலப்படம் இருப்பது தெரிகிறது. பலவிதமான ஆராய்ச்சிகளில் பயோபினால் என்ற பொருளின் மூலம் ப்ளாஸ்டிக் உருவாகலாம் என கூறுகிறார்கள் . இது டீ குடிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
விரைவில் கெட்டுப் போகும் உணவுப் பொருட்களைப் போல் தேனீர் பைகள் காலாவதி ஆவதில்லை. ஆனால் அவை சுவை இழந்து பழையதாக ஆகிவிடும். பெரும்பாலான பைகளில் சேமித்து வைக்கப்படும் காலம் அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் சுவை, நறுமணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் தங்கிவிடும். குறிப்பாக அவை காற்று ஒளி வெப்பம் அல்லது ஈரப்பதத்திற்கு ஆளாகிஇருந்தால் அதை தவிர்ப்பது நல்லது.
மைக்ரோநப்ளாஸ்டிக் இல்லாத தேனீர் பை எது?
காகிதப் பைகளில் பிளாஸ்டிக்: "காகிதப் பைகளில் பிளாஸ்டிக் இல்லை" என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் பல காகிதத் தேனீர் பைகள் நீர்ப்புகாமல் இருப்பதற்காகவும், பையை மூடுவதற்கு (Seal) விளிம்புகளில் பாலிப்ரோப்பிலீன் (Polypropylene) போன்ற பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகின்றன. எனவே, காகிதப் பைகளும் முழுமையாக பிளாஸ்டிக் இல்லாதவை என்று கூற முடியாது.
'பிகலோ தேனீர் பை காகிதத்தில் ப்ளாஸ்டிக் இல்லை. அவை மக்கும் தன்மை கொண்டு உரமாகக் கூடியவை. அனைத்து பிகலோ தேனீர் பைகளும் மக்கும் குணம் கொண்டவை' என்கிற ஒரு கருத்து இருந்தாலும், எந்தவொரு "பிளாஸ்டிக் இல்லாத" பிராண்டையும் வாங்குவதற்கு முன், அதன் பேக்கேஜிங் மற்றும் பொருட்கள் குறித்த சமீபத்திய தரவுகளைச் சரிபார்ப்பது நல்லது.
நீங்கள் இந்த ப்ளாஸ்டிக் ஆபத்தைத் தடுக்க, கெட்டில் டீ தயாரிப்பை நாடுவது நல்லது. தேனீர் பையை தவிர்ப்பது நல்லது. மேலும் உதிரித் தேயிலைகள் ரசாயனக் கலப்பு இல்லாமல் இருப்பதால், அதை நாடுவது நல்லது. பீங்கான் அல்லது துருப்பிடிக்காத எஃகு உபகரணங்களில் தேனீரைத் தயாரிக்கலாம்.
மைக்ரோபிளாஸ்டிக்ஸ் உடலில் சேர்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவை உடலுக்குள் சென்றால் என்னவாகும் என்பது குறித்த முழுமையான மருத்துவ முடிவுகள் இன்னும் ஆய்வில் உள்ளன. இருப்பினும், இவற்றைத் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது.
தேனீர் பைகளில் ப்ளாஸ்டிக் அபாயம் இல்லாத ப்ராண்டுகள் உள்ளன. அவற்றை படித்துப் பார்த்து வாங்கவும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.
Reference