

டீ, காபியில் சேர்க்கக் கூடாத பொருட்கள் குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். சுவைக்காக செய்யும் சில பழக்கங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
காலையில கண் விழித்த உடனே ஒரு கப் சூடான டீயோ அல்லது ஃபில்டர் காபியோ குடிக்காமல் பலருக்கு அன்றைய நாளே தொடங்காது. நம்மில் பலர் அந்த பானத்தை இன்னும் சுவையாக்கவும், ஆரோக்கியமாக்கவும் மற்ற சில பழக்கங்களைப் பின்பற்றுகிறோம். ஆனால், நல்லதுக்காகத்தான் செய்கிறோம் என்று நினைக்கும் சில விஷயங்களே, அந்த டீ அல்லது காபியின் நன்மைகளைக் குறைக்கக்கூடும் என ஆய்வுகளும், நிபுணர்களின் கருத்துகளும் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கோடிக்கணக்கான டீ, காபி பிரியர்கள் தினமும் செய்யும் இந்த மூன்று பழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வது அவசியம் என்கிறார்கள்.
சூடான டீயில் எலுமிச்சை சேர்க்கிறீங்களா?
இப்போதெல்லாம் வெயிட் லாஸ் பண்ணனும்னு நினைக்கிறவங்க பலரும் 'லெமன் டீ' குடிக்கிறது fashion ஆ வச்சிருக்காங்க ஆனா பல பேர் செய்கின்ற தவறு என்னவென்றால், கொதிக்கும் டீயிலேயே எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து அருந்துவார்கள். அதான் தவறான செயல்!
எலுமிச்சை பழத்தில் இருக்கும் வைட்டமின் C (vitamin c) அதிகப்படியான சூட்டைத் தாங்காது. கொதிக்கின்ற டீயில் அச்சாற்றை ஊற்றும் போது அதிலுள்ள வைட்டமின் C முழுவதும் அழிந்து பின் அசிடிக்காக (Acidic) மாறி நெஞ்செரிச்சலையும், அல்சரையும், உண்டாக கூடும். அதனால் டீயை நாற்றாக ஆற வையுங்கள், பின்பு டீ வெதுவெதுப்பாக மாறியவுடன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். லெமன் டீயை இவ்வாறு பருகுவது தான் உடலுக்கு மிகவும் நல்லது.
காபியில் தேன் கலப்பது நல்லதா?
சர்க்கரை உடம்புக்குக் கெடுதல்னு சொல்லிட்டு, இப்போ காபி அல்லது பிளாக் காபியில் சர்க்கரைக்கு பதிலா 'தேன்' (Honey) கலந்து குடிக்கிற பழக்கம் அதிகரிச்சிருக்கு. ஆயுர்வேதம் மற்றும் நவீன அறிவியல் என்ன சொல்கிறது தெரியுமா?
தேனை எப்போதும் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சூடாக்கக் கூடாது. கொதிக்கின்ற காபியில் தேனைக் கலக்கும்போது, 'ஹைட்ராக்ஸிமெதில்ஃபர்ஃபுரல்' (HMF) என்னும் ஒரு நச்சுப் பொருளாக மாறி, உடம்பிலுள்ள ஜீரண சக்தியைக் கெடுத்து விடும்.
பிளாஸ்டிக் ஸ்பூன் பயன்படுத்துறீங்களா?
அலுவலகங்கள் அல்லது பேக்கரிகளில் டீ, காபி குடிக்கும் போது, சர்க்கரையை கலக்குவதற்கு குட்டி பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது பிளாஸ்டிக் கப்புகளைத் தருகிறார்கள்
கொதிக்குற டீ/காபிக்குள்ள அந்த பிளாஸ்டிக் ஸ்பூனை வைத்து நாம் கலக்கும்போது, வெறும் 10 வினாடிகளில் லட்சக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உருகி அந்த பானத்தோடு கலந்து விடுகிறது. அதை நாம் தினமும் குடிக்கும் போது, அது நேராக நம் குடலில் போய் தங்கி பெரிய உபாதைகளை ஏற்படுத்துகிறது. மரக்கரண்டி (Wooden stirrer) உபயோகிப்பதால் இவ்வாறெல்லாம் நடைபெறாது. உடலுக்கு மிகவும் நல்லது.
டீ, காபி குடிப்பது தவறில்லை. உண்மையில், அது பலரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால், அந்த பானத்தை இன்னும் ஆரோக்கியமாக்குகிறோம் என்று நினைத்து நாம் பின்பற்றும் சில பழக்கங்களே, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சுடச்சுட டீயில் எலுமிச்சை சேர்ப்பது, கொதிக்கும் காபியில் தேன் கலப்பது, பிளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது போன்ற சிறிய விஷயங்கள் கூட கவனிக்கப்பட வேண்டியவை என்கிறார்கள்.
அதனால், சுவை மட்டுமல்லாமல், சரியான முறையிலும் இந்த பானங்களை அருந்துவதில் கவனம் செலுத்துவது அவசியம். ஒரு சிறிய முன்னெச்சரிக்கையும், சில நல்ல பழக்கங்களும் இருந்தால், தினமும் ரசித்துக் குடிக்கும் அந்த ஒரு கப் டீயோ, காபியோ உடலுக்கு புத்துணர்ச்சியை மட்டுமல்ல, ஆரோக்கியமான அனுபவத்தையும் வழங்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.