
நீரிழிவு நோய் இந்தியாவில் பெருகி வரும் சூழலில் இந்நோயினால் உறுப்புகள் பாதிக்காமல் இருக்க சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். சர்க்கரை வியாதி அதிகம் ரத்தக் குழாயையும், நரம்புகளையும் கொண்ட உறுப்புகளை மட்டுமே பாதிக்கும். அவ்வகையில் கண், சிறுநீரகம், கால் பாதம், இருதயம் ஆகிய உறுப்புகள் அடங்கும்.
ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் யாரோ ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பால் கால் எடுக்கப்படுகிறது. நீரிழிவால் கால் பாதிப்புகளுக்கு காரணமாக, கால் நரம்பு பாதிப்பு (Diabetic Neuropathy)கால் அழுத்தம் (Foot pressure)அதிகமாக இருத்தல், இரத்த ஓட்டம் தடைபடும்(peripheral vascular disease), கால் விரல்களின் அமைப்பு(மடிந்து இருப்பது,கோணலாக இருப்பது போன்ற deformities. கால் அடிப் பகுதியில் ஆணி(callus), வெடிப்பு,கால் தட்டையாக இருப்பது(Flat foot) எல்லாவற்றிக்கும் மேலாக சர்க்கரை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை சொல்லலாம்.
கால் பரிசோதனை
தினமும் காலை சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம். வருடம் ஒருமுறை, (Biotherimeter-கால் நரம்பு பாதிப்பை அறிய Vascular Doppler, கால் சிறிய இரத்த குழாய் ஓட்டத்தை அறிய Pedometer foot scan, கால் அழுத்தத்தை கண்டறிய கால் சூடு/குளிர்ச்சியை கண்டறிய Peripheral arterial venous disease என பாத ,காலுக்கான நீரிழிவு பரிசோதனைகளை மேற்கொண்டால் நோயின் தன்மை தெரிந்து மருத்துவம் செய்து கொள்ள உதவியாக இருக்கும்.
சர்க்கரை நோயாளிகள் கால் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும். கால்களை சுய பரிசோதனை செய்து, தினமும் கால் பாதத்தை கழுவி க்ரீம் அப்ளை செய்ய வேண்டும். கால் நகத்தை வெட்டும் போது நேராக வெட்ட வேண்டும். புகை, மதுவை தவிர்க்க வேண்டும். கால் ஆணி இருந்தால் முறையான சிகிச்சை (chiropody),பொருத்தமான காலணி அணிதல், வீட்டில் இருக்கும் போதும் காலணி அணிதல் அவசியம்.
கோயிலுக்கு வெயில் நேரத்தில் பிரகாரம் சுற்றுகிறேன் என போனால் கால் பாதம் கொப்பளிக்க வாய்ப்பு ஏற்படும். புண் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாக்ஸ் அணிந்து கொள்வதால் கால் பாதங்களை பாதுகாக்கலாம்.
சர்க்கரையை கண்ட்ரோல் பண்ணுவதன் மூலம் கால், விரல்கள்,பாதம் என உறுப்புகளை பாதுகாக்கலாம். மருத்துவர் சொல்லும் மருந்துகளை முறையாக எடுத்து, அக்கறையாக உடல்நலன் பேண, ஆரோக்கியம் மேம்படும்.