கறிவேப்பிலை இதயத்தை காக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Did you know that curry leaves protect the heart?
Did you know that curry leaves protect the heart?https://www.youtube.com

ம் உணவில் கறிவேப்பிலை இருந்தால் அதை எடுத்து வீசி விடுவதுதான் நம் பழக்கம். ஆனால், அந்த கறிவேப்பிலையில் எவ்வளவு ஆரோக்கியம் கொட்டிக் கிடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்திற்கும், தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுப்பது மட்டுமல்லாமல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சிறந்த செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது.

நம் உணவு கலாசாரத்தின் தவிர்க்க முடியாத பொருளாக, பெரும்பாலான உணவுகளில் சுவை மற்றும் வாசனைக்காக சேர்க்கப்பட்டு வருகிறது கறிவேப்பிலை. ஆனால், கறிவேப்பிலை நறுமண மூலிகை மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும் கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்ஸ், ஃபைபர், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அமினோ ஆசிட்கள் இதில் அடங்கி உள்ளன.

எனவே, கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்திற்கும், தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுப்பது மட்டுமல்லாமல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சிறந்த செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலை நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும், உடலின் பொதுவான வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

கறிவேப்பிலையின் நன்மைகள்:

நீரிழிவுக்கு உதவும் கறிவேப்பிலை: நமது உடலின் இன்சுலின் செயல்பாட்டில் வேலை செய்வதன் மூலமும், இரத்த சர்க்கரை அளவை குறைத்து கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலமும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கறிவேப்பிலை மேம்படுத்துகிறது. கறிவேப்பிலையில் காணப்படும் ஃபைபர் சத்து செரிமானத்தை மெதுவாக்குவதால் வளர்சிதை மாற்றம் சீக்கிரமாக ஏற்படாது.

வயிற்றுக் கோளறுகளை போக்கும்: செரிமான அமைப்பு சிறப்பாக செயல்பட உதவும் கறிவேப்பிலை வயிறு சார்ந்த பிரச்னைகளை குணப்படுத்தவும் பயன்படுகிறது. குறிப்பாக, கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்த செரிமான ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிடுவது செரிமான நொதிகளைத் தூண்டி குடல் இயக்கம் சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. இதில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்ட்ஸ் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளன.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்: இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த கறிவேப்பிலை உதவுகிறது. இது ஃப்ரீரேடிக்கல்ஸ்களால் கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஷனை தடுப்பதன் மூலம் கெட்ட கொழுப்பு எனப்படும் LDL கொலஸ்ட்ரால் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் HDL எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க கறிவேப்பிலை உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
தோஷம், பாபங்களைப் போக்கும் தைப்பூச விரத வழிபாடு!
Did you know that curry leaves protect the heart?

எடையை குறைக்க உதவும்: செரிமான செயல்முறையை அதிகரிப்பதன் மூலமும், உடல் கொழுப்பை உறிஞ்சும் விதத்தை மாற்றுவதன் மூலமும் எடை இழப்புக்கு கறிவேப்பிலை உதவுவதாகக் கூறப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் நச்சுகளை சுத்தப்படுத்துவதோடு, கலோரிகளை எரித்து கொழுப்பு சேர்வதையும் தவிர்க்க உதவி எடையை பராமரிக்க உதவுகிறது.

இளநரையை தடுக்கிறது: கறிவேப்பிலை இளநரையை தடுக்க மற்றும் முடி நரைப்பதை தாமதப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், பொடுகு பிரச்னை மற்றும் முடி சேதத்தையும் சரி செய்கிறது. முடி கால்களை வலுவாக்கி முடி உதிர்வை கணிசமாகக் குறைக்கிறது.

கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்னை மார்னிங் சிக்னஸ். மார்னிங் சிக்னஸ் மற்றும் வாந்தி போன்றவற்றை சமாளிக்க கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை பெரிதும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com