
புற்றுநோய் என்ற பெயரைக் கேட்டாலே மக்களுக்கு பயம் இருக்கும். இருப்பினும், ஆரம்பத்திலேயே புற்றுநோயைக் கண்டறிந்து சரியான சிகிச்சையை எடுத்துக் கொண்டால், அதை குணமாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே உண்டு. எனினும், தற்போது சந்தையில் விற்கப்படும் ஆரோக்கியமற்ற சில உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலமாக நமக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. இன்னும் சில உணவுகள் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது. அந்த உணவுகள் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. கேனில் அடைக்கப்பட்ட பானங்களில் பிஸ்பெனால் ஏ என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இதை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
2. உணவுகளின் வாழ்நாளை அதிகரிப்பதற்காக ஹைட்ரஜனேற்ற எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது பிரீரேடிகளை வெளியிடுகிறது. இதனால் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
3. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை எடுத்துக்கொள்வதின் மூலமாக இன்சுலின் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதனால் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி ஏற்படும்.
4. சிவப்பு இறைச்சி என்று சொல்லப்படும் இறைச்சியை அதிகம் எடுத்துக்கொள்வதால், குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மேலும் பதப்படுத்திய இறைச்சி வகைகள் கெடாமல் இருக்க பிரிசர்வேட்டிவ் மற்றும் நைட்ரேட்கள் சேர்க்கப்படுகின்றன. இவையும் நல்லதல்ல.
5. ஊறுகாய்யை பலரும் உணவுடன் தொட்டுக்கொள்ள விரும்புவார்கள். ஆனால், ஊறுகாயில் அதிக அளவு சோடியம் உள்ளதால் தொடர்ந்து இதை சாப்பிடுவதால், வயிற்றில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். உணவில் உப்பிட்டு அதை பதப்படுத்தும் வழக்கம் நம்மிடம் உள்ளது. உப்பிட்டு பதப்படுத்திய கருவாடு போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
6. புகையிட்ட உணவுகளான இறைச்சி, மீன் போன்றவற்றில் பாலிசைக்கிளிக் என்ற மணம் நிறைந்த ஹைட்ரோகார்பன் உள்ளன. இதை அதிகம் சாப்பிடுவதால் வயிறு புற்றுநோயை ஏற்படுத்தும்.
எனவே, இனி ஆரோக்கியமான இயற்கையான உணவுகளை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாழுங்கள்.