
ஆரோக்கியமற்ற உணவுகள் அதிகமாக கிடைக்கும் இந்த காலக்கட்டத்தில், ஆரோக்கியமான உணவுகளை கட்டாயத்தினால்தான் சாப்பிடுகின்றனர். எங்கு உடல் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தினாலே, அதிகமானோர் ஆரோக்கிய உணவுகளை நோக்கி செல்கின்றனர். ஆனால், அதில் இருக்கும் சிக்கல்களை அறிந்து கொள்வதில்லை. புரியும்படி சொல்ல வேண்டுமானால், தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கிய உணவுகளைச் சரியான முறையில் சாப்பிடுவது மிகவும் அவசியம்.
தினசரி ஆரோக்கியமாக வாழ்வதற்கும், உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். அதில் முக்கியமாக அதிக நன்மைகளை வழங்கும் பழங்களை எடுத்துக்கொள்ளும்போது, பெரும்பாலான நபர்கள் அறியாமல் செய்யும் தவறு பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது. சில பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் அருந்தக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
எந்த பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தக் கூடாது?
ஆப்பிள்:
உடல் நலம் பாதித்தவர்களுக்கு ஆப்பிள் கொடுக்கலாம். ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வழங்குகிறது. அதனால் தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், இதில் பெக்டின் என்ற நார்ச்சத்து இருக்கிறது. எனவே ஆப்பிளை சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் வயிறு கோளாறு ஏற்படலாம்.
ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை உடலிற்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. ஆனால், ஆரஞ்சு பழத்தில் அதிக அமிலத்தன்மை இருப்பதால், இதை சாப்பிட உடன் தண்ணீர் அருந்தினால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.
அன்னாசி பழம்:
அன்னாசி பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல், வயிற்று போக்கு, குடல் எரிச்சல், இரத்த கட்டு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் நீங்கும். அதே சமயம், இதில் உள்ள ப்ரோமிலைன் என்ற பொருள், அன்னாசி பழத்தை சப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் அது செரிமானத்தை தடுத்துவிடும்.
பப்பாளி பழம்:
பப்பாளியில் இருந்து வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்களை பெற முடியும். ஆனால், இதில் இருக்கும் பாப்பைன் என்ற சத்துப்பொருளால், பாப்பாளி சாப்பிட்டுவிட்டு நீர் அருந்தும்போது வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம் ஆகிய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாழைப்பழம்:
தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். ஆனால், வாழைப்பழத்தில் மாங்கனீசு சத்து உள்ளதால் இதனை சாப்பிட உடன் தண்ணீர் அருந்தினால் உடல் நலம் பாதிக்கலாம்.
ஆரோக்கியத்தைப் பெற நினைத்து அவஸ்தைப் படுவதை தவிர்க்க மேற்க்கூறிய பழங்களை சாப்பிட உடன் தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.