இன்றைய காலத்தில் பலருக்கு தசை வளர்ச்சி என்பது மிகப்பெரிய இலக்காக இருக்கிறது. உடற்பயிற்சி, சரியான உணவுமுறை ஆகியவை இதற்கு முக்கியமான காரணிகளாகும். இந்த செயல்பாட்டில் புரோட்டீன் பவுடர் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என பலர் நம்புகின்றனர். ஆனால், புரோட்டீன் பவுடர் உண்மையில் தசை வளர்ச்சிக்கு அவசியமா? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
புரோட்டீன் என்றால் என்ன?
புரோட்டின் என்பது நம் உடலுக்குத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்களில் ஒன்று. இது நம் உடலில் அனைத்து செல்களையும், குறிப்பாக தசைகளைக் கட்டமைக்க பயன்படுகிறது. புரோட்டீன்கள், அமினோ அமிலங்கள் எனப்படும் சிறிய மூலக்கூறுகளால் ஆனவை. இந்த அமினோ அமிலங்களை நம் உடலால் தானாகவே உற்பத்தி செய்ய முடியாது. எனவே, நாம் அவற்றை உணவின் மூலமாகவே பெற வேண்டும்.
தசை வளர்ச்சிக்கு ப்ரோட்டீன் ஏன் முக்கியம்?
புரோட்டீன், தசை செல்களை கட்டமைக்கவும், பழுதுபார்க்கவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் கிழிந்து போகும். இந்தக் கிழிந்த திசைகள் புரோட்டீன் மூலமாகவே மீண்டும் கட்டமைக்கப்பட்டு வலிமையாகின்றன. போதுமான அளவு புரோட்டீன் உட்கொள்வது தசை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது தசை செல்கள் பெரிதாக உதவுகிறது. உடற்பயிற்சிக்குப் பிறகு தசைகள் மீள்வதற்கு புரோட்டீன் அவசியமானது. இது தசை வலியையும் குறைக்கும்.
புரோட்டீன் பவுடர்: புரோட்டீன் பவுடர் என்பது தூய்மையான புரோட்டீனை மட்டுமே கொண்ட ஒரு தூள். இது பொதுவாக பால், சோயா, முட்டை அல்லது பட்டாணி போன்ற தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. புரோட்டீன் பவுடரை பொதுவாக பானங்கள், ஸ்மூத்திகள் அல்லது உணவுகளில் கலந்து உட்கொள்ளலாம். இதை உட்கொள்வது நிச்சயமாக தசை வளர்ச்சிக்கு உதவும். குறிப்பாக தினசரி உணவில் போதுமான அளவு புரோட்டின் கிடைக்காதவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடற்பயிற்சி செய்பவர்கள் தசை வளர்ச்சியை வளர்க்க விரும்புபவர்கள் தங்கள் புரோட்டீன் தேவையை பூர்த்தி செய்ய புரோட்டீன் பவுடரை பயன்படுத்தலாம்.
நன்மைகள்:
தசை வளர்ச்சிக்கு உதவும்.
சில ஆய்வுகளில் எடை இழப்புக்கும் உதவும் என கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சிக்குப் பிந்தைய மீட்சிக்கு உதவும்.
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, அதிக கலோரிகளை எரிக்க உதவும்.
தீமைகள்:
புரோட்டீன் பவுடர்கள் விலை உயர்ந்தவை.
சிலருக்கு ப்ரோட்டீன் பவுடர் வயிற்றுப்போக்கு, வாயு, மலச்சிக்கல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
சந்தையில் கிடைக்கும் அனைத்து ப்ரோட்டீன் பவுடர்களும் தரமானவை அல்ல.
இதை அதிகமாக உட்கொள்வது சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
புரோட்டீன் பவுடர் தசை வளர்ச்சிக்கு உதவும் உணவாக இருந்தாலும், இது ஒரு அதிசய மருந்து அல்ல. தசை வளர்ச்சிக்கு சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான ஓய்வு ஆகியவை மிகவும் முக்கியம். நீங்கள் புரோட்டின் பவுடரை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.