நீங்கள் டீயில் பிஸ்கட் அல்லது ரஸ்க்கை நனைத்து சாப்பிடுபவரா? அச்சச்சோ ஜாக்கிரதை!

Tea biscuit danger
Tea biscuit danger
Published on

ந்தியாவில் பலர் ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு டீ குடிக்கும் பழக்கமுடையவர்களாக உள்ளனர். அவர்கள் காலையிலும் மாலையிலும் டீயுடன் பிஸ்கட், ரஸ்க், சமோசா, கச்சோரி, நம்க்கீன், ஆலூ புஜியா போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை சேர்த்து உண்பதை தினசரி  வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது அவர்களுக்கு புத்துணர்வும் சக்தியும் அளிப்பதாக நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு மாறாக இவை யாவும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாகவே உள்ளன.

இவற்றில் கலோரி அளவு அதிகம். ஊட்டச் சத்துக்கள் குறைவு. அவை சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகள், அதிக சர்க்கரை, அதிகளவு உப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்புகள், மாசு படிந்த எண்ணெய் போன்றவற்றை உபயோகித்தே தயாரிக்கப்படுகின்றன.

இவற்றை அடிக்கடி உட்கொள்வதால் எடை அதிகரித்தல், நீரிழிவு நோய், ட்ரைகிளிசெரைட்ஸ் மற்றும் கெட்ட கொழுப்பின் அளவு கூடுவது, இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களின் செயல்களில் சிக்கல் ஏற்படுவது போன்ற உடல் நலக் கோளாறுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:
காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?
Tea biscuit danger

சமோசா, பகோடா போன்ற பொரித்த உணவுகளில் கலோரி, கொழுப்பு, சோடியம் ஆகியவை மிகவும் அதிகம். கடைகளில் வாங்கப்படும் குக்கீஸ், பிஸ்கட், ரஸ்க் போன்றவற்றில் சர்க்கரையும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளும் அதிகம். கலோரி அளவு ஜீரோ. சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் சோடியம், சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம். இவற்றின் மூலம் கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் மட்டுமே கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.

இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச் (ICMR) வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவின் 56.4 சதவிகித நோயாளிகளின் நோய் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்களால் வந்தவை எனத் தெரிய வருகிறது.

மேலும், இந்தியர்கள் மாதம்தோறும் ஆரோக்கியம் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளுக்காக செலவிடுவதை விட, பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஸ்நாக்ஸ் மற்றும் காஃபின் நிரம்பிய டீ, காபி போன்றவற்றிற்காக அதிகம் செலவிடுவதாக ஒரு சர்வே கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
எண்ணெய் தேய்த்து குளிக்கும் தினத்தில் இதையெல்லாம் செய்யாதீர்கள்!
Tea biscuit danger

எனவே, டீ பிரியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைக்கு மேல் டீ அருந்தாமலும், டீயுடன் மேற்கூறிய ஆரோக்கியமற்ற உணவுகளை சேர்த்து உண்ணாமல் இருக்கவும் பழகிக்கொண்டால் அவர்கள் ஆரோக்கியம் மேம்படும். ஆரோக்கியமற்ற ஜங்க் உணவுகளுக்குப் பதில் வறுத்த மக்கானா, பொட்டுக் கடலை, ஏர் ஃபிரைட் பாப்கார்ன், வறுத்த கருப்புக் கொண்டைக் கடலை போன்றவற்றை உட்கொள்வது உடலுக்கு அதிக நன்மை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com