நாம் உயிருடன் இருக்க ஆக்ஸிஜன் தேவை. இந்த உயிர் காக்கும் ஆக்ஸிஜனைத்தான் உடலுக்குள் இருக்கும் தீய ஆக்ஸிஜனின் சிறிய நுண் கூறுகள் அழித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த நுண் கூறுகளுக்கு ‘பிரிரேடிக்கல்ஸ்’ என்று பெயர். இந்த நுண் கூறுகள் உடலில் சேர சேர செல்களுக்கு போதியளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் உடல் முதுமையடைகிறது அல்லது உடல் உறுப்புகள் கெட்டுப் போய்விடுகின்றன. இவற்றைத் தடுக்கும் ஆற்றல் மிக்க நஞ்சு முறிவு மருந்துகளாக சில உணவு வகைகள் உள்ளன.
அதில் முதன்மையானது எதிர் நஞ்சு மருந்தான ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த வைட்டமின் ‘சி' உணவுகள். இதய நோய்கள், புற்றுநோய், இரத்த அழுத்தம், கண்களில் ஏற்படும் காட்ராக்ட் போன்றவை வராமல் தடுக்கும் நோய்களை எதிர்த்துப் போராடும் இரத்த வெள்ளை அணுக்களை இதுதான் உற்பத்தி செய்கிறது. ஆஸ்துமா, இரத்த அழுத்தம் போன்ற நோயாளிகள் வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், முருங்கைக் கீரை, தேங்காய், முட்டைக்கோஸ், சோளம், பட்டாணி போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் அல்லது வைட்டமின் சி நிறைந்த மாத்திரைகள் சாப்பிடலாம்.
ஜலதோஷம் முதல் புற்றுநோய் வரை எல்லா நோய்களையும் தடுக்கவல்ல சக்தி ‘அஸ்கார்பிக் அமிலம்’ எனும் வைட்டமின் சியில் உள்ளதாக அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வைட்டமின் சி உடலில் சேமிப்பில் இருக்காது. எனவே, இவற்றை சிட்ரஸ் பழங்கள் மற்றும் தக்காளி, திராட்சை, நெல்லி, பப்பாளி போன்ற பழங்களை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டே இருந்தால் மரபணுக்கள் கெடுவது, டி.என்.ஏ. உடைவது, முதுமைத் தோற்றம் உண்டாவது முதலியன இயற்கையாகவே தடுக்கப்படுகிறது என்கிறார்கள்.
மூட்டு வலி, மூட்டு எலும்பில் ஏற்படும் அழற்சி காரணமாக ஏற்படும் எலும்பு தடம் மாறும் நோய்களுக்கு தினமும் 120 மில்லி கிராம் வைட்டமின் சி அவசியம் என்கின்றனர். பப்பாளிப் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. புற்றுநோய்க்கு காரணமான கார்ஜினோஜென்களின் விளைவுகளைக் கட்டுப்படுத்தும் போலசின் என்ற பொருள் பப்பாளியில் உள்ளது.
பக்கவாதம் வராமல் தடுப்பதில் வைட்டமின் ‘ஈ’ சிறந்த நச்சு முறிவு மருந்தாக செயல்படுகிறது. இது சூரியகாந்தி எண்ணெய், பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்றவற்றில் உள்ளது. இதன் தினசரி தேவை 200 சர்வதேச அலகு. நம்முடைய நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு அவசியமான கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமினான, வைட்டமின் ஈ ஒரு சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்டாக நம்முடைய செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் தொற்றுகளுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவுகிறது.
மக்னீசியம் குறைவாக இருந்தால் மாரடைப்பு ஏற்படும். சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்களாக செலினியம், மக்னீசியம், பொட்டாசியம் உப்புக்கள் செயல்படுகின்றன. மக்னீசியம் திராட்சைப் பழத்தில் அதிகம் உள்ளது. இந்த உப்புக்கள் திசுக்களும் அதைச் சுற்றியுள்ள சவ்வு பகுதிகளையும் பாதுகாக்கிறது. இதனால் முதுமையை தள்ளிப்போட உதவுகிறது. தினை மாவு, பாசிப்பருப்பு, பார்லி அரிசி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சாத்துக்குடி, வாழைப்பழம், திராட்சைப் பழம், சோயா பீன்ஸில் இந்த சத்து அதிகமுள்ளது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘நல்ல’ பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும் ப்ரோபயாடிக்ஸ் தயிரில் காணப்படுகின்றன. நம்முடைய நோயெதிர்ப்பு உயிரணுக்களில் கணிசமான சதவீதம் செரிமான மண்டலத்தில் காணப்படுவதால், ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு குடல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஆபத்தான தொற்றுகளுக்கு எதிராக உடலின் பாதுகாப்பை ப்ரோபயாடிக்ஸ் பலப்படுத்துகின்றன. மேலும் தயிரில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் உள்ளது. இது ஒரு நிலையான ஆற்றலை அளிக்கிறது.