நல்லெண்ணெயின் நலம் தரும் 10 அற்புத நன்மைகள் தெரியுமா?

Do you know the 10 amazing health benefits of Sesame Oil?
Do you know the 10 amazing health benefits of Sesame Oil?https://www.transplantecapilarbrasilia.com

மையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் என கால மாற்றங்களில் பல வகைகள் வந்தாலும் நிறைவான ஆயுளைத் தருவது நல்லெண்ணெய்தான். அதனால்தான் அதற்கு பெயரே நல்ல எண்ணெய். நல்லெண்ணையின் ஒவ்வொரு துளியிலும் உடல் ஆரோக்கியம் காக்க என்னென்ன அற்புதங்கள் இருக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

1. இதய நோய்: மரச்செக்கு நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே, இதனை உணவில் அதிகம் சேர்க்கும்போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

2. நீரிழிவு: மரச்செக்கு நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்துப் போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

3. வலுவான எலும்புகள்: மரச்செக்கு நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளும். எனவே, எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், மரச்செக்கு நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் மரச்செக்கு நல்லெண்ணையை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

4. செரிமான பிரச்னை: மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய் எண்ணெயை விட, மரச்செக்கு நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும்போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமான பிரச்னை வராமல் இருக்கும்.

5. சுவாசக் கோளாறு: மரச்செக்கு நல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

6. இரத்த அழுத்தம்: மரச்செக்கு நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் மரச்செக்கு நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

7. பளிச் பற்கள்: தினமும் காலையில் எழுந்து மரச்செக்கு நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

8. புற்றுநோய்: மரச்செக்கு நல்லெண்ணெயில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்து உள்ளதால், அதனை உணவில் சேர்க்கும்போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

இதையும் படியுங்கள்:
தம்பதியரில் ஐந்து வகை உண்டு; அதில் நீங்கள் எந்த ரகம் தெரியுமா?
Do you know the 10 amazing health benefits of Sesame Oil?

9. அழகான சருமம்: மரச்செக்கு நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் மரச்செக்கு நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

10. புரோட்டீன்: எண்ணெயில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம்தான். ஆனால், மரச்செக்கு நல்லெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமாக 4.5 முதல் 5 கிராம் புரோட்டீன் சத்து நிறைந்துள்ளது.

இனியாவது, தினமும் சமையலில் மூன்று வேளையும் நல்லெண்ணையை சேர்ப்போம்; நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com