உணவில் உப்பை சிறிது குறைத்தால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா?

eat less Salt
eat less Salt
Published on

பொதுவாக, எந்த உணவும் உப்பின்றி சுவை தராது. அதேசமயம் பலருக்கும் உப்பை உபயோகிக்கும் அளவு முறை தெரியாததால் அதிகமான உப்பை உட்கொள்கின்றனர். இதனால் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பல உடல் நலக் குறைபாடுகளை எதிர்கொள்கிறார்கள். தினசரி உணவில் உப்பின் அளவை சிறிதளவு குறைத்தால் கூட ஏராளமான நன்மைகள் உண்டாகும்.

உப்பை குறைப்பதன் ஆரோக்கிய நன்மைகள்:

1. நாம் உணவில் சேர்க்கும் உப்பில் முக்கியமாக இருப்பது சோடியம் என்ற தாதுப் பொருளாகும். உப்பை சற்றே அதிக அளவு உட்கொள்ளும்போது அதில் இருக்கும் சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே, உப்பை வழக்கமான அளவை விட குறைவாக உட்கொள்ளும்போது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவியாக இருக்கிறது. இது பின்னாளில் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயங்களையும் சேர்த்துக் குறைக்கிறது.

2. குறைந்த சோடியம் சேர்ந்த உணவுகள் மாரடைப்பு மற்றும் பிற இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. இதயத்தின் அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறது.

3. உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்திற்கான முக்கிய ஆபத்துக் காரணி. எனவே, இரத்த அழுத்தம் இருப்பவர்கள் கண்டிப்பாக உப்பை பாதியாகக் குறைத்து உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். உப்பைக் குறைக்காவிட்டால் நாளடைவில் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

4. அதிகப்படியான உப்பு எடுத்துக்கொள்வது சிறுநீரகங்களின் செயல்பாட்டை சிரமத்திற்கு உள்ளாக்கும். சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து அதிகப்படியான சோடியத்தை வடிகட்டுவதற்கு அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். எனவே, உப்பை குறைத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகங்கள் திறம்பட செயல்பட அனுமதிக்கலாம். மேலும், சிறுநீரக நோய்கள் வரும் அபாயத்தையும் குறைத்துக் கொள்ளலாம்.

5. அதிக சோடியம் உட்கொள்ளல் சிறுநீரில் கால்சியம் வெளியேற்றத்தையும் அதிகரிக்கும். உடலில் உள்ள கால்சியம் அதிகமாக வெளியேறும்போது எலும்புகளின் அடர்த்தி குறையும். மூட்டுத் தேய்மானம், முழங்கால் வலி உள்ளிட்ட எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

6. வழக்கத்தை விட சற்று அதிகமாக உப்பு எடுத்துக்கொள்பவர்களுக்கு உடலில் தண்ணீர் தேங்கி, வீக்கம் ஏற்படும். உடல் பருமனும் அதிகரிக்கலாம். உப்பை குறைத்துக் கொள்ளும் போது அது உடல் மெலிவிற்கு வழி வகுக்கும். நல்ல எடை மேலாண்மைக்கும் உதவும்.

7. சில ஆய்வுகள் அதிகளவு உப்பு உட்கொள்ளல் வயிற்றுப் புற்றுநோயின் அதிக ஆபத்திற்கு வழிவகுக்கிறது என்று கூறுகின்றன. எனவே, அவசியம் உப்பைக் குறைத்தாக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
துலா ஸ்நானத்துக்கு மட்டும் ஏன் இத்தனை மகிமை?
eat less Salt

8. உணவில் உப்பைக் குறைப்பதன் மூலம் நாம் உண்ணும் உணவுகளின் இயற்கையான சுவைகளை நாம் அறிந்து கொள்ள முடியும். இது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு வழிவகுக்கும். மேலும், சமைக்காத உணவுகளான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உண்பதற்கு ஒரு வழிமுறையாக அமையும்.

9. உடலில் உப்பின் அளவு குறைவாக உள்ள நபர்கள் ஆரோக்கியமான உடலைப் பெற்றிருப்பார்கள். அவர்களுக்கு நோய்களின் அபாயம் குறைவாக இருக்கும். அவர்கள் உண்ணும் உணவின் ஊட்டச்சத்து உடலால் நன்றாக உறிஞ்சப்படும்.

10. குறைவாக உப்பு உட்கொள்ளும்போது உடலில் மேம்பட்ட திரவ சமநிலை உண்டாகும். உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும், நீரிழப்பு அபாயமும் குறைகிறது. குறிப்பாக, வெயில் காலங்களிலும் உடற்பயிற்சி நடைப்பயிற்சி செய்து முடிக்கும்போதும் உடலில் இருந்து அதிக அளவு வியர்வை வெளியேறும். குறைவாக உப்பு உட்கொள்ளும் நபர்களுக்கு நீரிழப்பு ஏற்படுவதில்லை.

எனவே, உணவில் உப்பின் அளவை பாதியாக குறைத்து உண்பது நல்லது. அதற்காக 60, 70 வயது வரைக்கும் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை 30, 40களிலேயே உப்பை குறைக்க ஆரம்பித்து விடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com