‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலி வருவதற்கான காரணம் தெரியுமா?

ஒற்றைத் தலைவலி
Migraine
Published on

லைவலி என்றாலே அது போகும் வரை கஷ்டப்படுவோம். அதிலும் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி காலையிலேயே ஆரம்பித்து விடும். மதிய வாக்கில் அதிகரித்து மீண்டும் மாலையில்தான் சற்று குறையும்.

அதேசமயம், எல்லா நேரங்களிலும் இந்தத் தலைவலி வருவதில்லை. நம் உடல், வயது, வாழ்க்கை, உணவு முறை போன்ற அறிகுறிகளால் ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி மூளை மற்றும் இரத்த நாளங்களின் அதிகப்படியான அழுத்தத்தால் ஏற்படுகிறது.

இதற்கு சில காரணங்களாக டென்ஷன், அஜீரணம், நீண்ட நேரம் வெயிலில் நிற்பது, காரமான உணவுகளை சாப்பிடுவது, சோர்வு, பயணத்தால் வருவது என பல காரணங்கள் உள்ளன. சாதாரண தலைவலி போல் இல்லாமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் மைக்ரேன் மீண்டும் மீண்டும் வருகிறது. இந்த வலி வந்தாலே டென்ஷனாவது இயல்பு.

ஆண்களை விட பெண்களையே இந்தத் தலைவலி அதிகம் பாதிக்கிறது. பெண்கள் பருவமடைதல் மற்றும் மாதவிடாய் நிறுத்தம் ஆகியவை இந்தத் தலைவலி வரும் காலங்களாக சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை பரம்பரையாக வரும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நேரம் உணவு உண்ணாமை, கவலைப்படுவதும் மைக்ரேன் ‌வர காரணமாகிறது.

தீவிர மைக்ரேன் தலைவலியின் போது தலைவலி, பார்வை மங்குதல், பதற்றமாக இருத்தல், குமட்டல் போன்றவை உண்டாகும். இதைத் தவிர்க்க அதிக ஒலி, ஒளி படும் இடங்களை தவிர்க்க வேண்டும். இந்த மைக்ரேன் பிரச்னையைத் தரும் சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும். சில வகை உணவுப் பொருட்கள், மது, புகை, உலர்ந்த உணவுகள், மலச்சிக்கல், கோபம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையாக நமது ஆற்றல்களை அதிகரிப்பது எப்படி தெரியுமா? 
ஒற்றைத் தலைவலி

பின்பற்ற வேண்டியவைகளாக தியானம் மற்றும் மூச்சுப்பயிற்சி, நல்ல தூக்கம், பசிக்கும்போது நன்றாக சாப்பிடுவது, தண்ணீர் சரியாக அளவில் குடிப்பது போன்றவற்றை செய்தாலே மைக்ரேன் தலைவலி வராது. இதற்கு நிவாரணமாக காற்றோட்டமான இடத்தில் இருந்தால் மனமும், உடலும் புத்துணர்வைப் பெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com