பட்டர் பீன்ஸ் தரும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

Do you know the health benefits of butter beans?
Do you know the health benefits of butter beans?https://m.indiamart.com

‘லீமா பீன்ஸ்’ எனப்படும் பட்டர் பீன்ஸில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளன. பட்டர் பீன்ஸில் அடங்கியுள்ள சில ஆரோக்கிய நன்மைகளை இந்தப் பதிவில் காண்போம்.

பட்டர் பீன்ஸில் தாவர வகை புரோட்டீன் அதிக அளவில் உள்ளது. இது திசுக்களின் கட்டமைப்பிற்கும், சேதமடைந்த திசுக்களை புதுப்பிப்பதற்கும் உதவுகிறது; நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், தசைகளின் அடர்த்தியை (Muscle Mass) வலுவாக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது.

இதிலுள்ள கரையக்கூடிய நார்ச் சத்தானது செரிமானம் நல்ல முறையில் நடைபெறவும், மலச்சிக்கல் நீங்கவும் உதவி புரிகிறது. நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து, உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்துவதால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு குறைகிறது. இதில் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. இது இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பாதுகாத்து இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கிறது.

இதையும் படியுங்கள்:
உடலில் எங்கே மச்சமிருந்தால் என்ன அதிர்ஷ்டம் தெரியுமா?
Do you know the health benefits of butter beans?

இந்த பீன்ஸ் குறைந்த அளவு க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளது. அதனால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க முடிகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் தீங்கு விளைவிக்கும் ஃபிரி ரேடிக்கல்களை அழித்து ஆரோக்கியம் காக்கிறது. ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது வீக்கத்தைத் தடுத்து, நாள்பட்ட நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது.

பட்டர் பீன்ஸில் உள்ள புரோட்டீன், நார்ச்சத்து, இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் B, HDL என்னும் நல்ல கொழுப்பு, ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஆகிய அனைத்தும் இதயத்தையும் இரத்த நாளங்களையும் நோயின்றிப் பாதுகாப்பதுடன், உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் உறுதுணை புரிகின்றன. இதை அடிக்கடி உணவுடன் உட்கொண்டு நல்ல ஆரோக்கியம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com