எடமாமே பீன்ஸில் இருக்கும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

எடமாமே பீன்ஸ்
எடமாமே பீன்ஸ்https://trikaya.net
Published on

டமாமே என்பது சோயாபீன்ஸ் காயில் ஒரு வகை. இது தோற்றத்திலும் சுவையிலும் மற்ற பீன்ஸை விட தனித்துவம் கொண்ட லெக்யூம். இக்காயை முழுவதும் முற்றாத நிலையில் பறித்து தோலுடன் வேக வைத்து பின் தோலை நீக்கி அதன் பருப்புகளை சேகரித்து, உப்பு தேங்காய் துருவல் சேர்த்து ஸ்நாக்ஸாக உண்பதுண்டு. எடமாமே பயறிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. எடமாமே உள்ளிட்ட சோயா பீன் வகை உணவுகளை தினசரி உட்கொண்டு வருபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் குறையும். மாதவிடாய் கால வலி குறையும். புரோஸ்டேட் புற்றுநோய் வரும் அபாயம் தடுக்கப்படும்.

2. எடமாமேயில் உள்ள அதிகளவு தாவர வகை புரோட்டீன்கள், இதய நோய், ஸ்ட்ரோக் மற்றும் டைப் 2 வகை டயாபெட் போன்ற நாள்பட்ட வியாதிகள் உண்டாகக் காரணமாயிருக்கும், அதிகளவு கெட்ட (LDL) கொழுப்புகளை குறைக்க உதவி புரியும். இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

3. எடமாமேயில் ஃபொலேட் சத்து அதிகம் உள்ளது. இது DNA உற்பத்திக்கும் செல்களின் முறையான பெருக்கத்திற்கும் உதவி புரியும். உடலில் ஃபொலேட் சத்து குறையும்போது ஹோமோசிஸ்டெய்ன் (Homocysteine) என்ற பொருள் உடலில் அதிகளவில் தேங்கி மன அழுத்தம் உண்டாகக் காரணமாகும். மேலும், மூளைக்குச் சென்றடையும் இரத்தம் மற்றும் ஊட்டச் சத்துக்களின் அளவும் குறையும். ஹோமோசிஸ்டெய்னின் அதிகரிப்பால் நல்ல உறக்கம், மூட், பசியேற்படும் உணர்வு போன்றவற்றிலும் கோளாறுகள் உண்டாகும். எடமாமேயை தினசரி உட்கொண்டு உடலில் ஃபொலேட்டின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கும்போது ஹோமோசிஸ்டெய்னின் அளவு குறைந்து இப்படிப்பட்ட கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு தடுக்கப்படும்.

4. இதிலுள்ள அதிகளவு புரதம், இரும்புச் சத்து மற்றும் ஃபொலேட் போன்ற சத்துக்கள் பெண்களின் கரு முட்டை வெளியேறுவதில் உண்டாகும் குறைபாடுகளைக் களையவும், சுலபமான கருத்தரிப்பிற்கும் உதவி புரியும்.

இதையும் படியுங்கள்:
சூட்சுமமான சக்தியை பெற்று அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் அணில் கூடு!
எடமாமே பீன்ஸ்

5. இது குறைந்த கலோரி அளவு கொண்ட காய். இதிலுள்ள அதிக புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து உடம்பில் எடை அதிகரிக்காமல் சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவும்.

6. இது குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட காய். இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க உதவுகின்றன.

7. எடமாமேயில் உள்ள ஐசோஃபிளவோன்கள் எலும்பு ஆரோக்கியத்தை வலுவடையச் செய்கின்றன.

இத்தகைய ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த இந்தப் பயறை சூப் சாலட்களில் சேர்த்தும் டிப்பாக செய்தும் உபயோகித்து நன்மை பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com