OMAD டயட்டின் சாதகமும் பாதகமும் பற்றி தெரியுமா?

OMAD Diet Pros and Cons
OMAD Diet Pros and Cons
Published on

மீப காலமாக உணவு உட்கொள்ளும் முறையை எடைக் குறைப்பிற்காகவும் மற்றும் தேவைப்படும் சக்தியின் அளவின் அடிப்படையிலும் பல வகைகளாகப் பிரித்து அவற்றிற்கு வெஜிடேரியன், வேகன், ஃபுரூடேரியன், செவன் டே சேலஞ் டயட் மற்றும் ஜெனரல் மோட்டார் டயட் என பலவிதங்களில் பெயரிட்டு, பலரும் பின்பற்றி வருகின்றனர். அவற்றுள் புதிதாய் சேர்ந்து தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளதுதான் இந்த ஓயெம்ஏடி (One Meal A Day) டயட்.

இதைப் பின்பற்ற விரும்புபவர்கள், உட்கொள்ளும் கலோரி அளவைக் கட்டுக்குள் வைக்க ஒரு நாளில் ஒரு வேளை மட்டும் முறையான முழு சாப்பாட்டை (சரிவிகித உணவு) எடுத்துக்கொள்ள வேண்டும். பின் இடைப்பட்ட நேரத்தில் ஒருமுறை அளவோடு ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளலாம் என்பது நியதி. உணவைத் தேர்ந்தெடுப்பது ஒவ்வொரு தனி மனிதரின், உடம்பின் தேவைக்கேற்ப அமையும்.

OMAD டயட் முறையைப் பின்பற்றும்போது உட்கொள்ளும் உணவுகளின் மொத்த கலோரி அளவு குறைவாக இருப்பதால், உடல் எடையில் வேகமான சரிவு ஏற்படுவதைக் காண முடியும். அதிகப்படியாக உள்ள கொழுப்பின் அளவும் குறையும்; உடலில் ஏற்படும் வீக்கங்களும் குறையும். தேர்ந்தெடுக்கப்படும் உணவுகளின் மூலம் LDL என்னும் கெட்ட கொழுப்பின் அளவு உயராமல் பார்த்துக்கொள்ளலாம். இதனால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
கருட தரிசனத்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?
OMAD Diet Pros and Cons

வயிற்றில் ஆகாரமின்றி ஃபாஸ்டிங் இருக்கும்போது நரம்பு மண்டலம் நியூரோ டீஜெனரேஷன் செயல்பாட்டை மெதுவாக நடைபெறச் செய்து, வாழ்நாளை நீட்டிக்க உதவும். எடை குறைப்பில் அதிக கவனம் செலுத்த விரும்புபவர்களுக்கு நல்ல முறையில் உதவி புரியும் டயட் முறை இது. இருந்தபோதும் இதன் மூலம் உண்டாகும் பக்க விளைவுகள் அதிகம் எனலாம். அவை என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விரைவான எடைக் குறைப்பு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வழக்கமான உணவுப் பழக்கத்திற்குத் திரும்பியவுடன் இழந்த எடையை மீண்டும் பெறும் அபாயம் அதிகரிக்கும். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் அதிக உணவை உட்கொள்வது வயிறு மற்றும் செரிமான அமைப்பில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி உடல் கடினமாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்தை உண்டுபண்ணும். இதயமும் குடலுக்கு அதிக இரத்தத்தை அனுப்ப கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதனால் உடலின் இரத்த அழுத்தம் உயரும் அபாயம் உண்டாகும்.

காலை உணவைத் தவிர்ப்பதால் உட்கொள்ளும் கலோரி அளவு மிகவும் குறைந்துவிடும். அதனால் உடல் ஒருமாதிரியான பாதுகாப்பற்ற முறையில் செல்லும். அப்போது உடலின் வளர்சிதை மாற்றம் குறைய ஆரம்பிக்கும். அது நம் உடலுக்கு நீண்ட காலம் தீங்கிழைக்கக்கூடியதாக மாறும். டைப் 2 வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்றதாகாது. அவர்களின் இரத்த சர்க்கரை அளவு குறைந்து ஹைப்போ க்ளைசெமியா என்ற நிலை உருவாக வாய்ப்புண்டாகும்.

இதையும் படியுங்கள்:
யோகாசனம் செய்யும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய 12 விஷயங்கள்!
OMAD Diet Pros and Cons

மேலும், இந்த வகை உணவைப் பின்பற்றும்போது குமட்டல், மந்த நிலை, எரிச்சல், சோர்வு மற்றும் மலச்சிக்கல் போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாகும் சாத்தியக்கூறுகள் அதிகம். உடல் பலவீனமாகவும், நடுக்கமாகவும் உணர வைக்கும். உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதால் உற்பத்தியாகும் ஆற்றலின் அளவு குறையும். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள், பதின் பருவ வயதினர் மற்றும் உண்ணுதல் கோளாறு (Eating disorder) உள்ளவர்கள் OMDA டயட்டை மனதால் நினைப்பது கூட தவறு.

OMDA டயட்டை இரண்டு வாரம் அல்லது நான்கு வாரங்கள் பின்பற்றுபவர் உண்டு. தானாகவே டயட் பிளானில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராமல் மருத்துவ ஆலோசகரை கலந்தாலோசித்த பின் முடிவெடுப்பதே நலம் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com