எலும்புகளை வலுவாக்கும் 6 பானங்கள் எவை தெரியுமா?

எலும்பை வலுவாக்கும் பானங்கள்
எலும்பை வலுவாக்கும் பானங்கள்
Published on

டலுக்கு ஒரு தோற்றப் பொலிவையும் அன்றாட வேலைகளைச் செய்வதற்கு அவசியமான பலத்தையும் தருவதில் உடல் எலும்புகளின் பங்கு மகத்தானது. அந்த எலும்புகளை வலுவானதாகவும் ஆரோக்கித்துடனும் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அப்படி எலும்புகளுக்கு பலத்தைத் தரும் 6 ஆரோக்கிய பானங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆரஞ்சு சாறு: ஆரஞ்சு சாற்றில் (Orange Juice) ஏராளமான கால்சியம் மற்றும் வைட்டமின் சி மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும் பிற வைட்டமின்கள் உள்ளன. தினமும் ஆரஞ்சு சாற்றை உட்கொண்டால் எலும்புகளின் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும்.

பால்: எலும்புகளை வலுப்படுத்த பாலை (Milk) விட சிறந்த பானம் எதுவும் இருக்க முடியாது. பாலில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் டி ஆகியவை எலும்புகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகின்றன.

ஸ்மூத்தி: எலும்புகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் கீரை உள்ளிட்ட பச்சைக் காய்கறிகளில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இந்த பச்சை காய்கறிகளை வைத்து ஸ்மூத்தி (Smoothie) செய்து குடிக்கலாம். இதை உட்கொண்டால் எலும்புகள் வலுவானதாக இருக்கும்.

பாதாம் பால் மற்றும் பேரிச்சம்பழம்: பாதாம் பால் மற்றும் பேரீச்சம்பழம் கலந்து பானமாக தயாரித்து தினமும் குடிக்கலாம். இதில் ஏராளமான பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளது. இது எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டையும் அரண்மனை போன்று மாற்ற சில யோசனைகள்!
எலும்பை வலுவாக்கும் பானங்கள்

அன்னாசிப் பழச்சாறு: அன்னாசிப்பழத்தில் ஏராளமான கால்சியம் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் சாற்றை (Pineapple Juice) தினமும் காலையில் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும்.

அவுரிநெல்லி சாறு: அவுரிநெல்லிகள் ஒரு ஊட்டச்சத்து மூலமாகும். இதில் ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் பல்வேறு நன்மை பயக்கும் கலவைகள் உள்ளன. அவற்றில் அந்தோசயானின் போன்ற ஆண்டி ஆக்சிடெண்டுகள் நிரம்பியுள்ளன. இவை அவற்றின் துடிப்பான நீல நிறத்தை அளிக்கின்றன. தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து, அழுத்தத்தைக் குறைத்து உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கூடுதலாக, அவுரிநெல்லிகளில் உள்ள அந்தோசயினின்கள் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்கள் உணவில் அவுரிநெல்லிகளை சேர்த்துக்கொள்வது வீக்கத்தைக் குறைப்பதற்கும் மூட்டு வலி அறிகுறிகளைப் போக்குவதற்கும் உதவும்.

- ம.வசந்தி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com