விளையாட்டு வீரர்கள் வாழைப்பழம் விரும்பி சாப்பிடுவது ஏன் தெரியுமா?

Dhoni, Kohli who eats banana
Dhoni, Kohli who eats bananahttps://tamil.asianetnews.com

வாழைப்பழம் ஒரு அதிசய பழம். ஒவ்வொரு வாழைப்பழமும்100 கிராம் எடையுடன் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 12 கிராம் புரதச்சத்தும், 400 மி.கி. நார்ச்சத்தும், 88 மி.கி. பொட்டாசியம் சத்தும், 7 மி.கி. வைட்டமின் சி சத்தும், 38 மி.கி. பாஸ்பரஸ் சத்தும் உள்ளன. வாழைப்பழத்தில் வைட்டமின் டி சத்தும், தாதுச்சத்தும் நிறைய உள்ளன. இதில் உள்ள இரும்பு சத்தும், பொட்டாசியமும் உடனடியாக உடலில் சேரக் கூடியது.

நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அடுத்த 15 நிமிடங்களுக்குள் ஜிவ்வென்று 35 சதவீதம் அதிகரிப்பதால் உடலும் மனமும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. மற்ற உணவு என்றால் இன்னும் அதிக நேரம் ஆகும். இந்த சக்தி அடுத்த 40 நிமிடங்கள் வரை உடலில் இருக்கும் என்கிறார் ஜேன் கிரிஃபின். இவர் பிரிட்டிஷ் நாட்டின் ஒலிம்பிக் வீரர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகளை பரிந்துரைக்கும் நிபுணர். இதனால்தான் டென்னிஸ் வீரர்கள் முதல் நம்மூர் செஸ் வீரர் பிரக்ஞானந்தா வரை தங்களது ஆற்றலுக்கு வாழைப்பழம் சாப்பிட்டு வருகிறார்கள்.

இன்று உலகின் உணவு விஞ்ஞானிகள் மற்றும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம்தான் என்கிறார்கள். இதிலுள்ள புரதமும், கால்சியமும் நரம்புகள் தளராமல் இருக்க உதவுகிறது. இரத்த சோகையைத் தடுக்கும் இரும்புச்சத்து, இதயம் சீராக சுருங்கி விரிவடைய மக்னீசியம், பாக்டீரியாக்களை அழிக்கும் ஹைடிரோ அமிலம், சோடியம் உப்பு, இரத்தத்தைத் திரவ நிலையில் இருக்க உதவும் பொட்டாசியம், மூளை வளர்ச்சிக்கும், பார்வைத் திறனுக்கும் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி இவை எல்லாம் வாழைப்பழத்தில் உள்ளது.

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும், எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்கள் இருப்பதால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இரத்தக் கொதிப்பையும் தவிர்க்க உதவுகிறது. தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டால் இரத்த கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தலாம். காய்ச்சல் வருவது போல தெரிந்தால் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடும்போது அது மறையும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும், சோடியமும் இருந்தால்தான் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருட்கள் சமநிலையில் இருக்கும். விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா, தோல்வியா என நிர்ணயிப்பது, அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான். பொட்டாசியம் அளவு குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் கூட கடைசி நொடியில் முதல் ஆளாக ஒடி வந்து வெற்றி பெற்று விடுவார். விளையாட்டு வீரர்களுக்கும், தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியுள்ளவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழமாக இருப்பது வாழைப்பழம்தான் என்கிறார்கள் சத்துணவு நிபுணர்கள்.

வாழைப்பழத்தில் செரோடோனின் என்கிற முக்கியமான ஹார்மோன் உள்ளது. இது நமது நல்வாழ்விற்கும் சந்தோஷத்திற்கும் தேவையான மனநிலை மற்றும் உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்கும். வைட்டமின் B6ன் மூலமாகவும் இது உள்ளது. மேலும், மூளையில் இயற்கையாக செரோடோனின் உருவாக இது வழி செய்கிறது. பிரிட்டிஷ் ஜார்னல் ஆப் நியூட்ரிஷன் ஊட்டச்சத்து இதழில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வில், அதிக பொட்டாசியம் சத்துள்ள உணவினால் மனச்சோர்வின் அறிகுறி, பதற்றம் இவற்றிலிருந்து பங்கேற்பாளர்கள் விடுபட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் அமினோ ஆசிட் ட்ரிப்டோபான் அதிகம் உள்ள உணவு. இதை உட்கொள்வதன் மூலம் நம் உடலின் செரோடோனின் அளவை மேம்படுத்த முடியும். இதற்கு வாரத்திற்கு நான்கு வாழைப்பழம் சாப்பிடுவதை பரிந்துரை செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
திருச்சி மலைக் கோட்டையின் பெருமை தெரியுமா?
Dhoni, Kohli who eats banana

காலை உணவுடன் ஒரு வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் கலோரிகள் குறைவு. ஆகவே, காலை உணவாக வாழைப்பழத்தை சாப்பிட்டால், பல மணி நேரம் பசி எடுக்காமல் இருக்கும். மேலும் அசிடிட்டி , கால்களில் ஏற்படும் பிடிப்பைத் தடுக்கவும் வாழைப்பழம் உதவுகிறது.

ஹைப்போ தைராய்டிசம் என்பது உடல் போதுமான தைராய்டு ஹார்மோன்களை உருவாக்காத ஒரு நிலை ஆகும். வாழைப்பழம் ஹைப்போ தைராய்டிசம் நிலையை சீராக்குகிறது. இதனால் உங்கள் மனநிலை மேம்படும். மேலும், மதிய நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டால் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். குறிப்பாக, கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் சந்திக்கும் காலைச் சோர்வின்போது, வாழைப்பழத்தை சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கி சோர்வில் இருந்து விடுவிக்கும்.

வாழைப்பழத்தில் உள்ள நொதிகள், குடலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும். வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது. குடலியக்கம் சிறப்பாக இருந்தால், செரிமான பிரச்னைகளான மலச்சிக்கல் வருவது தடுக்கப்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். மேலும், வாழைப்பழத்தில் குறைந்த அளவு பிரக்டோஸ் உள்ளது, இது ஐ.பி.எஸ். எனும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறியை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com