நமது உடலுக்கு பாலிஃபினால்கள் ஏன் அவசியம் தேவை தெரியுமா?

Foods rich in polyphenols
Foods rich in polyphenols
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

பாலிஃபினால்கள் என்பவை ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ஆகும். இவை பழங்கள் காய்கறிகள் மற்றும் முழு தானியங்களில் உள்ள தாவரக் கலவையாகும். உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய பாலிஃபினால்களின் அவசியம் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

பாலிஃபினால்கள் உள்ள உணவுகள்: ஆப்பிள்கள், திராட்சைகள், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூ பெரி, பிளம்ஸ் போன்றவற்றில் பாலிஃபினால்கள் நிறைந்துள்ளன. கேரட், புரோக்கோலி, உருளைக்கிழங்கு, கீரை, வெங்காயம் போன்ற காய்கறிகள், ஓட்ஸ், பழுப்பு அரிசி, பருப்பு வகைகள், கொட்டைகள், மூலிகைகள், கிரீன் டீ, காபி போன்ற பானங்களிலும் தானியங்களிலும் பாலிஃபினால்கள் உள்ளன.

பாலிஃபினால்கள் உடலுக்கு வழங்கக்கூடிய நன்மைகள்:

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்: பாலிஃபினால்கள் நன்மை செய்யும் குடல் பாக்டீரியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. அதே சமயத்தில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்கின்றன. குடலில் உள்ள வீக்கத்தை குறைக்க இவை உதவுகின்றன. இதனால் குடல் புறணிக்கு ஏற்படும் சேதம், நோய் எதிர்ப்பு மண்டலக் கோளாறுகள் போன்றவை தடுக்கப்படும்.

இளமைத் தோற்றம்: பாலிஃபினால்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் அது இளமை தோற்றத்தை தக்க வைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சருமம் பளபளப்பாகவும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கின்றன. சரும நெகிழ்ச்சி மற்றும் நீரேற்றத்தை மேம்படுத்துவதோடு புற ஊதா கதிர்வீச்சிலிருந்தும் பாதுகாக்கும்.

இதய ஆரோக்கியம்: இவை எண்டோடெலியல் கோட்பாட்டை மேம்படுத்துகின்றன. கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியமும் மேம்படுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் இரத்தக் கட்டிகளை தடுக்கவும், இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும் உதவுகிறது. இருதய அமைப்பில் வீக்கத்தையும் தடுக்கிறது.

நீரிழிவு நோய் கட்டுப்பாடும், தடுப்பும்: பாலிஃபினால்கள் நிறைந்த உணவுகள் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்தைக் குறைக்கிறது. மாவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணும்போது அவற்றின் செரிமான செயல்பாட்டைத்தை மெதுவாக்கவும் குறைக்கவும் உதவுகின்றன.

இன்சுலின் உற்பத்தி செய்யும் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை பாதுகாக்கின்றன. இன்சுலின் சர்க்கரையை செல்களுக்குள் இவை கொண்டு வருவதால் நாள் முழுவதும் உற்சாகமாக பணி செய்ய தேவையான ஆற்றலை அளிக்கிறது.

மூளை ஆரோக்கியம்: பாலிஃபினால்கள் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, அல்சைமர் மற்றும் பார்க்கின்சன் நோய் போன்ற நரம்பியல் பிரச்னைகளை தடுக்க பாலிஃபினால்கள் உதவக் கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. கிரீன் டீ பாலிஃபினால்கள் நிறைந்த பானமாகும். எனவே, இது மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
வெறும் வயிற்றில் பால் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?
Foods rich in polyphenols

ஹார்மோன் சமநிலை: இவை ஈஸ்ட்ரோஜன் அளவை மாற்றி அமைத்து ஹார்மோன் தொடர்பான உடல்நலக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைத்து நன்மையை வழங்குகின்றன. எனவே, பெண்கள் அவசியம் பாலிஃபினால்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

புற்று நோய் தடுப்பு: இவை புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ஏனென்றால், பாலிஃபினால்கள் நிறைந்த பல உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை புற்றுநோயை தடுக்க உதவுகின்றன. திசு சேதத்தை தடுத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தையும், உடலில் உள்ள அழற்சி குறிப்பான்களையும் ஒழுங்குப்படுத்துகிறது. புற்றுநோய் கட்டிகளின் செல் வளர்ச்சியை நிறுத்துகிறது. எனவே, புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்க உதவுகின்றன.

எடை மேலாண்மை: இவை கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் எடை மேலாண்மையை வழங்குகிறது.

logo
Kalki Online
kalkionline.com