நாம் நோய் நொடி இல்லாமல் இருக்க பசி உணர்வு இருப்பது அவசியம். அதே போல நல்ல தூக்கமும் இருப்பது அதைவிட அவசியம்.
வேளாவேளைக்கு தவறாமல் உணவு சாப்பிடவேண்டும். பலர் வேலைப்பளு மட்டுமல்லாது ஏனைய பிற காரணங்களுக்காக சரியான நேரத்தில் சாப்பிடுவதில்லை. அதேபோல தூங்குவதும் இல்லை. இதனால் ஏற்படும் ஆரோக்கியக்கேடு பலவித நோய்களுக்கான அஸ்தி வாரமே!
மிக முக்கியானது உடற்பயிற்சி
ஒவ்வொரு மனிதனும் தினசரிகாலை உடற்பயிற்சி யோகா பிராணாயாமம் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், தோட்ட வேலை, இப்படி ஏதாவது ஒரு உடற் பயிற்சியையாவது மேற்கொள்வது அவசியம்.
நேரம் தவறாத உணவு உட்கொள்ளுதல்
மனிதனுக்கு மிக முக்கியமானது உணவு, அதை சரிவர வேளாவேளைக்கு சாப்பிடவேண்டும்.
காலையில் கூடுமான வரையில் காபி, சாப்பிடுவதை தவிா்த்து, நோய் எதிா்ப்பு தன்மை கொண்ட கஷாயம், சீனி போடாத டீ, அல்லது சத்துமாவு கஞ்சி சாப்பிடலாம் .
அதேபோல காலை உணவை 9 மணி தாண்டாமல் சாப்பிடுவதே மிகவும் நலம் பயக்கும்.
மதிய உணவு உட்கொள்ளுதல்
என்னதான் வேலைப்பளு இருந்தாலும் மதியம் ஒருமணிமுதல் இரண்டு மணிக்குள் சரிவிகித உணவை முறையான அளவில் சாப்பிட வேண்டு்ம்.
தினசாியோ, அல்லது இரண்டு நாளைக்கு ஒருமுறையோ, பூண்டு, வெங்காயம் கட்டாயம் சோ்ப்பது நல்லது.
மதிய உணவு சாப்பிட்டதும் பூவன் வாழைப்பழம் அல்லது ஏதேனும் ஒரு வகை பழம் சாப்பிடலாம். சொிமானம் ஆகும். நல்ல சத்தான உணவே மருந்தாகும். வயதானவர்களைத்தவிர ஏனையோா் மதிய உறக்கம் தவிா்ப்பது நல்லது.
மாலை நேர ஸ்நாக்ஸ்
மாலை நேரம் அதிக எண்ணைய் இல்லாத ஸ்நாக்ஸ், மற்றும் இஞ்சி டீ, அல்லது சுக்குகாபி அருந்தலாம். கொண்டக்கடலை சுண்டல் நவதானிய ஸ்நாக்ஸ் நல்லபலனே!
இரவு நேர உணவு
இரவு நேர உணவாக எளிதில் சீரணம் ஆகக்கூடிய சத்துமிகுந்த உணவாக சாப்பிடுவது நல்லதே. மேலும் இரவில் எண்ணையில் தயாரான பதாா்த்தங்கள் தவிா்ப்பது சிறப்பு.
சாப்பிட்ட உடன் தூக்கம் தவிா்ப்பது அதைவிட அதிக ஆரோக்கியமே! அதேநேரம் ஒருமணிநேரம் நடப்பது அல்லது, மனதிற்கு ரிலாக்சான விஷயங்களை பேசுவது போன்றவற்றில் ஈடுபடுவது பலன்களைத் தரும்.
இரவில் பால் சாப்பிடலாம், மஞ்சள் பொடி கலந்தும் அருந்துவது நல்லதே!
வேளாவேளைக்கு மாத்திரை சாப்பிட வேண்டியவர்கள் நேரம் தவறாமல் மாத்திரை சாப்பிட வேண்டும் .
நிறைய தண்ணீா் குடிப்பது நல்ல விஷயமே!
வாரம் ஒருமுறை கேரட், பீட்ரூட், ஆப்பிள், மாதுளை, ஜூஸ் ஐஸ் சோ்க்காமல் நாட்டுசர்க்கரை கலந்துசாப்பிடலாம்.
பழவகை சாலட்கள் காய்கறிவகைகள் அவரவர் சக்திக்கேற்ப சாப்பிடலாம்.
தினசரி மூன்று லிட்டருக்கு குறையாமல் தண்ணீா் அருந்துவது அவசியம்.
ஆழ்ந்த உறக்கம் அமைதி தருமே
உடலும் உள்ளமும் நன்றாக இயங்க யோகா, உடற்பயிற்சி, போலவே உறக்கமும் மிகவும் முக்கியமானது. காற்றோட்டம் நிறைய உள்ள இடம் நல்லதே!
படுக்கை அறை, இயற்கையான சூழலில் அமையவேண்டும், இரவு தூங்கப்போகும்போது காப்பி, டீ தவிா்ப்பது நல்லது. செல்போன் டிவி பாா்ப்பதில் அளவு நிா்ணயம் தேவை. தேவையில்லாத மன அழுத்தங்களை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.
நல்ல சிந்தனை தேவை
மனைவியிடம் சண்டை போடுதல் வாக்குவாதங்கள் தவிா்ப்பதும் நல்லதே! தேவையில்லாமல் எதையாவது நினைத்துக்கொண்டு சம்பந்தமில்லாமல் கற்பனை எண்ணங்களுக்கு குட்பை சொல்லி உறங்க வேண்டும்.
தூக்கம் வராமல் தவித்தால் இறைவன் நாமாவளிகளை பாராயணம செய்யலாம்.
குறைந்த அளவு 7 மணி நேர தூக்கம் கடைபிடிப்பதே சிறப்பான ஒன்று. இப்படி காலை முதல் மாலை வரை டென்ஷன் இல்லாமல் எதையும் நம்மால் சமாளிக்க முடியும் என்ற உந்து சக்தியோடு நல்ல ஆரோக்கியமான உணவு வகைகளை சரிவிகித உணவு வகைகளை உட்கொண்டாலே நமக்கு தேவையில்லாத நோய்கள் வராது. இதை சரிவர கடைபிடியுங்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடுங்கள்"!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)