மூட்டு வலி தீவிரமாவதைத் தடுப்பது எப்படி? இதோ புதிய வழி!

வயது முதிர்வால் ஏற்படும் எலும்பு மற்றும் தசை பலவீனத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பக்கவாதம் மற்றும் எலும்பு முறிவிலிருந்து முதியவர்களைப் பாதுகாக்கும் ஒருங்கிணைந்த மருத்துவ முறை!
Joint pain Old man with Doctor
Joint pain solutionImage credit: AI Image
Updated on

ஒரு மனிதன் வயதாகும் போது அவரது எலும்புகளின் வலிமை படிப்படியாக குறைய ஆரம்பிக்கிறது. மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுகிறது. தசைகளின் அடர்த்தி குறைகிறது. 

இதனால், தசை எலும்புகளின் அமைப்பு மாறுகிறது. வளைவு தன்மை குறைந்து நாளடைவில் பேலன்ஸ் செய்வதில் சிரமம் தடுமாற்றம் ஏற்படுகிறது. 

இம்மாற்றங்கள் எல்லாம் மெதுவாக நடப்பதால், வயதானால் வரக்கூடிய இயல்பான மாற்றம் இது என்று பெரும்பாலும் இதனை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். ஆரம்ப நிலையில் கவனிக்காமல் விடுவதால் பல சமயங்களில் எலும்பு முறிவு தீவிர ஆர்த்தரைடிஸ் போன்ற பிரச்சனைகள் வந்து செயல்பட முடியாத நிலை ஏற்படுகிறது. 

வலிமையற்ற எலும்புகள், பலவீனமான தசைகள், முழங்கால் மூட்டு முடக்கு வாதம், முதுகுத்தண்டு சிதைவு, பேலன்ஸ் செய்ய தடுமாறுவது விழுந்து விடுமோ என்ற பயம், குற்ற உணர்வு, ஒரே நேரத்தில் பல்வேறு பிரச்சனைகளுடன் முதியவர்கள் இருக்கிறார்கள். மூட்டு வலியை (Joint pain) குறைப்பதற்கான சிகிச்சை மட்டும் செய்தால் பல சமயங்களில் பிரச்சனையின் மூலம் தெரியாமலேயே போய்விடும். 

நோய் வந்தபின் சிகிச்சை என்பதைவிட பிரச்சனைக்கான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதனை தடுப்பதற்கு உண்டான விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

தசை மற்றும் எலும்புகளில் எந்த இடத்தில் பிரச்சனை உள்ளது என்பதை ஒருங்கிணைந்த மருத்துவ முறை மூலம் கண்டறிந்து அதை தவிர்ப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

இந்த மையத்தில் எந்த நிலையில் அமர்வது, எப்படி பேலன்ஸ் செய்வது, எப்படி நிலை தன்மையுடன் இருப்பது போன்றவற்றிற்கு ஆலோசனை வழங்கப்படுகிறது. எக்ஸ்ரே ஸ்கேன் பரிசோதனை மட்டும் செய்து எலும்பு தசைகளின் நிலையை மதிப்பீடு செய்வதில்லை. 

ஆரம்ப அறிகுறிகளை அடிப்படையில் தேவையான பரிசோதனைகள் செய்து, வலியின் தன்மை, நடப்பதில் உள்ள சிரமம், மூட்டுகளில் இறுக்கம் உள்ளதா, எந்த நிலையில் அமரும்போதும் எழுந்திருக்கும் போதும் அசோகரியமாக உள்ளது, என்பது உட்பட அனைத்தையும் தெளிவாக தெரிந்து வாழ்க்கை முறை மாற்றங்களை செய்யும்போது தசை எலும்பு மூட்டு கோளாறுகள் தீவிரமடைவதை தடுக்கலாம். 

இதையும் படியுங்கள்:
சின்ன கொப்புளம் தானே என்று அசால்ட்டாக இருக்காதீங்க...!
Joint pain Old man with Doctor

இவைதான் முதியோர் எலும்பியல் மதிப்பீட்டு மையத்தின் நோக்கமாகும். இந்த ஆலோசனை மையத்தில் தொடர்பு கொண்டு நம் விவரங்களை அவர்களிடம் எடுத்துக் கூறி ஆலோசனை பெறலாம். இந்த மையம் தற்போது சென்னை பீவெல் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று மாவட்டம் தோறும் இந்த மையம் செயல்பாட்டில் உள்ளது. 

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com