

கருணைக்கிழங்கில் நார்சத்து , மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதன் நன்மைகள் ஏராளம்.
இன்றைய உணவுப் பழக்கங்களில் பழமையான கிழங்குகள் எனப்படும் இயற்கை மருத்துவச் செல்வங்களை நாம் மறந்து விட்டோம். நம் முன்னோர்கள் அன்றாட உணவில் அவற்றைச் சேர்த்திருந்ததன் பின்னால் ஆழமான அறிவும் அனுபவமும் இருந்தது. வேகமான வாழ்க்கையில் மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்றவற்றால் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இக்கிழங்கின் நார்சத்து குடல் கழிவுகளை நீக்கி சுத்தப்படுத்துகிறது. உடல் எடை, இதய ஆரோக்கியம், பெண்கள் ஹார்மோன் சமநிலை, மூலம் மற்றும் பித்தப் பிரச்னையை இயற்கையான முறையில் குணப்படுத்தும் சக்தி கொண்டது கருணைக்கிழங்கு. இதை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன அமைதியும், நீண்ட ஆயுளும் கிடைக்கும். இதில் நார்சத்து, வைட்டமின்சி , வைட்டமின் பி , ரைபோஃப்ளேவின் போன்றவை நிறைந்துள்ளன.
பெருங்குடல் சுத்தம் செய்து புற்றுநோயைத் தடுக்கிறது :
பெருங்குடலில் தேங்கும் கழிவுகள் நஞ்சாக மாறி புற்றுநோயை உண்டாக்கும். கருணைக்கிழங்கு குடல் சுவர்களை நச்சில்லாமல் வைத்து ரத்தச் சுத்திகரிப்பை மேம்படுத்துகிறது. இதனால் குடல் புற்று வராமல் தடுக்கப்படுகிறது. அதிகமாக வறுத்த உணவு, பால், மைதா போன்றவற்றை சாப்பிடுபவர்களுக்கு குடல் சுவர்கள் நச்சுப்பொருட்களால் மூடப்பட்டிருக்கும். இக்கிழங்கு அவற்றை சுத்தம் செய்து குடல் ஆரோக்கியத்தைக் காக்கிறது. கருணைக்கிழங்கு ஒரு இயற்கை டீ டாக்ஸ் உணவாகும்.
இதயத்தின் காவலன் :
இதன் பொட்டாசியம் இரத்தத் துடிப்பை சீராக்குகிறது. இதனால் மாரடைப்பு, இதயக் கோளாறுகள் தடுக்கப்படுகின்றன. இது இரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு அடைப்பை தடுத்து இதயத்தை பலப்படுத்த சிறந்தது. வாரம் மூன்று அல்லது நான்கு முறை கருணைக் கிழங்கை சமைத்துச் சாப்பிடுகிறவர்களுக்கு இதய ஆரோக்கியம் மேம்படும். இதய நோய் மருந்துகளில் உள்ள பக்க விளைவுகளைத் தவிர்த்து இயற்கையாக இதயத்தை வலுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு அருமையான உணவு.
உடல் எடை குறைப்பு - பலர் எடையை குறைக்க முயலும் போது அவசியமான சத்துக்களை இழக்கிறார்கள். ஆனால் கருணைக்கிழங்கு அதை சமப்படுத்துகிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் சர்க்கரையை கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கிறது. பசியைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் இது உண்மையான இயற்கைக் கட்டுப்பாட்டாக செயல்பட்டு எடைக் குறைப்புக்கு உதவுகிறது.
மூலம்,குடல்புண் நிவாரணம்
மூலநோய் உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதம். புண் மற்றும் ஆசனவாயில் புண்களை குணமாக்குகின்றன. மூலநோயால் அவதிப்படுபவர்கள் நீண்டகால மருந்துகளால் அலுத்துக் போகிறார்கள். ஆனால் இக்கிழங்கு இப்பிரச்சனைக்கு இயற்கை தீர்வாக உள்ளது. இதன் நார்ச்சத்து புண்களை குணப்படுத்துகிறது. இது குடலின் இயக்கத்தை சீராக வைப்பதோடு நெடுநாள் மலச்சிக்கலையும் தீர்க்கிறது.
பெண்களின் ஹார்மோன் சமநிலை
மாதவிடாய காலங்களில் ஏற்படும் வலி ஒழுங்கின்மை, மனநிலைமாற்றம் போன்றவைகள் ஹார்மோன் சமநிலையின்மையால் வருகிறது. இதன் இரும்புச்சத்து, மாங்கனீஸ் ஹார்மோனை சமநிலையில் வைக்கிறது. மாதவிடாய் பிரச்சனைகள் கருப்பை அழற்சியை தடுக்கிறது.
பித்தக் கற்களை தடுக்கிறது
பித்தம் அதிகரிக்கும்போது அமிலத்தன்மை, கல்லீரல் கற்கள் உருவாகும். இது பித்தத்தைக் கட்டுப்படுத்தி கல்லீரல் பித்தப்பையை ஆரோக்கியமாக வைக்கிறது. இதில் உள்ள தாதுக்கள் பித்தக்கற்கள் உருவாகாமல் தடுக்கின்றன.
மன அமைதி
இதன் பண்புகள் மனத்திற்கு அமைதியைத் தருகிறது. அயர்ச்சி, சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவற்றை குறைக்கும் உணவாக உள்ளது. சமைத்த கிழங்கில் சிறிது மஞ்சள், எலுமிச்சை, உப்பு சேர்த்து உட்கொள்வது மன அமைதியைத் தரும்.
வாரம் மூன்று முறை சாப்பிட நல்ல ஆரோக்கியம் பெறலாம். இன்றைய வேகமான வாழ்க்கையில் கருணைக்கிழங்கு போன்ற இயற்கை உணவுகளை தட்டில் சேர்க்கும் காலம் வந்து விட்டது. சிறந்த குடல் ஆரோக்கியம், இதய வலிமை, சுத்தமான ரத்தம், சமநிலை பெற்ற மனம் அனைத்தையும் தரும் ஒரே கிழங்கு இது. நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கிய மருந்துகள் இந்த மண்டலத்தில் தான் இருக்கின்றன. கருணைக்கிழங்கு அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.