சோர்வைச் சுருட்டி எறியுங்கள்: இரண்டே நிமிடங்களில் ரீசார்ஜ் ஆக 2 ரகசியங்கள்!

Exercise and rest
Healthy body
Published on

னிதன் ஆரோக்கியமாக வாழ உடல் இயக்கமும், ஓய்வும் இரண்டு கண்கள் போல் அவசியமானவை. இன்றைய இயந்திரமயமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்ற எண்ணம் பலரிடமும் காணப்படுகிறது. ஆனால், உடற்பயிற்சி என்பது கடினமாக வியர்வை சிந்த வேண்டிய ஒன்றாக மட்டுமல்ல. எளிய நடைபயிற்சி, நீட்டிப்புப் பயிற்சிகள் போன்றவையும் உடல்நலத்திற்கு பெரும் பயன் தருகின்றன.

அதே நேரத்தில் அளவுக்கு மீறிய கடின உடற்பயிற்சியும் உடலை சோர்வடையச் செய்யும். உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை நோய்களுக்கு வழிவகுக்கும் போது, போதிய ஓய்வு இல்லாமையும் உடல் மற்றும் மன நலனை பாதிக்கிறது. எனவே, சரியான உடற்பயிற்சியும், தேவையான ஓய்வும் இணைந்த வாழ்க்கைதான் உண்மையான ஆரோக்கிய வாழ்க்கையாகும்.

1. உடற்பயிற்சியின் அவசியம்: ஒரு மனிதனின் வளர்ச்சி என்பது உடல், மனது, அறிவு ஆகியவற்றின் வளர்ச்சியாகும். சிலருக்கு ஏதாவது ஒரு வளர்ச்சி குறைந்திருக்கும். இந்த மூன்று வளர்ச்சியும் ஒன்று போல் இருந்தால்தான் மனித வளர்ச்சி பூரணமடையும். உடல் வளர்ச்சிக்கு(Healthy body) உடற்பயிற்சி மிக அவசியம். உடல் புஷ்டியாகவும், பலமுள்ளதாகவும் இருப்பதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியமாகிறது. தினமும் முறையாகச் செய்யப்படும் உடற்பயிற்சியினால் ஆரோக்கியமும், ஆயுளும் அதிகரிக்கிறது.

2. எளிய உடற்பயிற்சிகள் எவை: முந்தைய காலத்தில் நடந்து சென்று ஆறுகள், ஓடைகள், கோவில் குளங்கள் ஆகியவற்றில் நம் முன்னோர்கள் குளித்தார்கள். நடப்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி. குளத்தில் நீந்துவது, உழைப்பது, வீட்டு வேலைகள் செய்வது ஆகியவையும் உடற்பயிற்சியின் பகுதிகளாகும். முன்பெல்லாம் குழந்தைகள் பந்து விளையாட்டு, சடுகுடு, ஓடி விளையாடுவது என்று பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தார்கள். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் ரத்தக் குழாய்கள் விரிவடைந்து அசுத்தக் காற்றை வெளியேற்றி சுத்தமான காற்றை உள்வாங்குகிறது. இதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகிறது. கால்களுக்கு வலிமை அதிகரிக்கிறது. அந்த காலத்தில் குழந்தைகள் மூன்று நான்கு மைல்கள் நடந்தே பள்ளிக்கு சென்றார்கள். அதனால் உடல் எடை குறைந்தது. அதிக சதை போடுவது தடுக்கப்படுகிறது. செரிமானம் நன்கு நடைபெற்று உணவு ருசிக்கிறது. மனதிற்கு புத்துணர்ச்சி கிடைத்தது.

3. கடின உடற்பயிற்சி தேவையா?

சரியான முறையில் உடற்பயிற்சி செய்வது மன வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். அதே சமயம் கடின உடற்பயிற்சி உடலையும், மனதையும் தளர்த்தி விடும். எளிய உடற்பயிற்சியையே அனைவரும் செய்திடல் வேண்டும். கடின உடற்பயிற்சி அனைவருக்கும் ஆபத்தானதாகும். அதிக உடற்பயிற்சியையும், கடின உழைப்பையும் தவிர்ப்பது தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்லது.

4. உடற்பயிற்சி இல்லாவிட்டால்: உடல் வலிமை பெறுவதில்லை, புத்துணர்வும் கிடைப்பதில்லை எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். என்னால் எதுவும் முடியவில்லை என்ற உணர்வு மேலோங்கி, வலிமை இழந்து நடக்க இயலாத நிலை உருவாகும். எத்தனை வயதானவர்களும், தினமும் சிறிது தூரமாவது நடக்க வேண்டும். காரில் பயணம் செய்வதும், உடற்பயிற்சி இல்லாமையும், அசாதாரண உணவுப் பழக்கங்களும் நமது உடல் ஆரோக்கியத்தை சிதைக்கின்றன.

5. ஓய்வின் அவசியம்: உடற்பயிற்சி போலவே ஓய்வும் நமக்கு மிக அவசியமாகும். சிறிது நேரம் நடந்த பின்னர் ஓய்வெடுப்பது நல்லது. வியர்வையைப் போக்கிய பின்பே வேறு வேலைகள் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
காளான்: புற்று நோயை கட்டுப்படுத்தும் கவசமா? ஆராய்ச்சிகள் சொல்லும் உண்மை அறிவோமா?
Exercise and rest

ஓய்வுக்கு பின்னரே குளிப்பது, உணவருந்துவது, உறங்குவது போன்ற செயல்களைச் செய்திடல் வேண்டும். மனிதனின் வளர்ச்சிக்கு எளிமையான உணவு, எளிமையான உடற்பயிற்சி, மிதமான உழைப்பு, மிதமான ஓய்வு ஆகியவை இன்றியமையாததாகும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com