ஃபுல் மீல்ஸ் Vs. அன்லிமிடெட் மீல்ஸ்: எது நல்லது? டயட்டீசியன்ஸ் பரிந்துரைப்பது என்ன?

full meals vs unlimited meals
full meals vs unlimited meals Img credit: AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஃபுல் மீல்ஸ் என்பது ஒரு குறிப்பிட்ட அளவு சாதம், குழம்பு, பொரியல், கூட்டு, அப்பளம், பாயசம் என அனைத்தும் அடங்கிய நிலையான உணவு தொகுப்பு. ஃபுல் மீல்ஸ் என்பது அளவானது. எண்ணெயில் பொரித்த அப்பளம், அதிக இனிப்பு நிறைந்த பாயசம், உப்பு, புளிப்பு, காரம் நிறைந்த புளிக்குழம்பு, சாம்பார் போன்றவை இவற்றில் அளவாக பரிமாறப்படும்.

அன்லிமிடெட் மீல்ஸ் என்பது ஒரு குறிப்பிட்ட விலையில், அதே கூட்டு, பொரியல் வகைகளை எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டு வாங்கிக் கொள்ளும் வசதி கொண்டது. அளவிற்கு அதிகமாக கிடைப்பதால் வயிறு நிறைய சாப்பிடக்கூடிய வகை இது.

சுருக்கமாக சொல்வதென்றால், அளவோடு சுவைக்க ஃபுல் மீல்ஸ்; தாராளமாக வயிறு முட்ட சாப்பிட அன்லிமிடெட் மீல்ஸ்.

ஃபுல் மீல்ஸ் vs அன்லிமிடெட் மீல்ஸ்:

ஃபுல் மீல்ஸ் (கட்டுப்பாடான அளவு) பொதுவாக ஆரோக்கியமானது. அன்லிமிடெட் மீல்ஸ் (அளவற்ற உணவு) என்பது அதிக கலோரிகள் மற்றும் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும்.

ஆரோக்கியத்திற்கு அளவு முக்கியமல்ல. அதிலுள்ள சத்துக்கள் குறிப்பாக நார்ச்சத்து, புரதம் மற்றும் சமச்சீர் தன்மையே முக்கியம்.

ஃபுல் மீல்ஸில் சத்தான பொருட்கள் பருப்பு, காய், தானியங்கள் போன்றவை சரியான விகிதத்தில் கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்துடன் எடை மேலாண்மைக்கும், சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவும். அதுவே அன்லிமிடெட் மீல்ஸில் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது அவை தேவையற்ற கலோரிகளாக மாறி கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. அளவு தெரியாமல் அதிக கலோரி மற்றும் அரிசி உணவை அதிக அளவு உட்கொள்ள வழி வகுப்பதால் உடல் பருமன் (obesity), செரிமான பிரச்னைகளை உண்டாக்கும்.

இதையும் படியுங்கள்:
காசு பணம் செலவு இல்லை; மருந்து மாத்திரை தேவை இல்லை; நிம்மதியா தூக்கம் வர, இந்த குளியல் ஒன்று போதுமே!
full meals vs unlimited meals

அதிகப்படியான உணவு செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தி, வயிறு உப்புசம் (Bloating), வாயுத் தொல்லை, அமிலத்தன்மை (acidity) மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். அதிகப்படியான கார்போஹைட்ரேட் மற்றும் கலோரி நிறைந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை (Blood Sugar Spikes) திடீரென அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அடிக்கடி அதிகப்படியான உணவை உட்கொள்வது உடலின் இயற்கையான பசி உணர்வை (Hunger Cues) சிதைப்பதுடன் மெட்டபாலிசத்தையும் பாதிக்கலாம்.

எனவே எப்போதாவது ஒருமுறை அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிடுவது பெரிய பாதிப்பு ஒன்றையும் ஏற்படுத்தாது என்றாலும், அதை ஒரு பழக்கமாக மாற்றுவது நல்லதல்ல. வெறும் வயிற்றை நிரப்புவதை விட சத்தான உணவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், பசித்து புசிப்பதும், சரியான நேரத்தில், தேவையான அளவில், சீரான உணவை, ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்பதே சிறந்தது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com