ஒரு பைசா செலவழிக்காமல் ஆரோக்கியம் பெறலாம்! எப்படி தெரியுமா?

Sunlight - vitamin D
Sunlight - vitamin Dhttps://www.facebook.com

ற்போது விதவிதமான நோய்கள் நம்மை பயமுறுத்தி வருகின்றன. சாதாரணக் காய்ச்சல், சளி என்றாலே மருத்துவமனையில் சில ஆயிரங்களை எடுத்து வைக்கும் காலம் இது. இதற்கு தீர்வே இல்லையா? ஏன் இல்லை? காசு தராமலேயே ஆரோக்கியம் பெற எளிதான வழி ஒன்று இருக்கிறது. எப்படி தெரியுமா? தினமும் பத்து நிமிடம் சூரிய ஒளியில் நின்று பயிற்சி எடுப்பதுதான். உடலில் சூரிய ஒளி படும் பட்சத்தில் நமது உடலின் சருமத்துக்கு அடியில் உள்ள செல்கள் தாமாகவே வைட்டமின் டியை உருவாக்கிக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.

முன்பு மக்கள் விடியற்காலையில் எழுந்து சிறிது நேரம் வெயிலில் வேலை செய்வார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைத்தது. ஆனால், தற்போதைய பணி சூழலில் பெரும்பாலும் ஏசி அறைகளுக்குள்ளும், வெளியே வராமல் வீட்டுக்குள் இருப்பதுமே இதன் காரணம். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி கிடைக்காததால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.

வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய செக்கோஸ்டிராய்ட் குழுவின் ஒரு பகுதியாகும். இது குடலில் உள்ள பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு அவசியமாகிறது. இது சூரிய ஒளியிலிருந்து மற்றும் அச்சத்து அடங்கிய உணவில் இருந்தும் நமக்கு கிடைக்கிறது. நமது சருமம் நேரடியாக சூரிய ஒளியில் படும்போது இந்த வைட்டமின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் வைட்டமின் டி ஆய்வில் 40 முதல் 99 சதவீதம் வரை குறைபாடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது விட்டமின் டி. இது உடலில் குறைந்தால் பல்வேறு உபாதைகள் ஏற்படும். அப்படி என்ன பிரச்னைகள் வரும் தெரியுமா?

இதையும் படியுங்கள்:
விநாயகருக்கு Red Fanta படைக்கும் விசித்திர கலாச்சாரம் கொண்ட மக்கள்!
Sunlight - vitamin D

வைட்டமின் டி குறைபாட்டினால் வயது வித்தியாசம் இன்றி எலும்புகளின் வலிமையைக் குறைக்கும். மல்டிபிள் ஸ்களீரோசிஸ், இருதய பாதிப்பு, மனநிலை மாற்றம் , நீரிழிவு வகை 2 போன்றவை வைட்டமின் டி குறைபாட்டால் ஏற்படுகின்றன. மேலும் தசை வலி, முடி கொட்டுதல், காயங்களை மெதுவாக ஆற்றுதல், குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு, உடல் பருமன் போன்ற பல பிரச்னைகள் வரும் வாய்ப்புள்ளது.

இவற்றை விரட்டி வலுவான உடலைப் பெற்று ஆரோக்கியமான வாழ்க்கை வாழ ஓரு பைசா செலவின்றி நம் வீட்டு மாடி அல்லது பூங்காக்களில் காலை நேரத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வெயிலில் இருந்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வைட்டமின் டி குறைபாட்டை அகற்றவே அதிகாலை ‘சூரிய நமஸ்காரம்’ என்ற பெயரில் வெயிலில் நிற்க பெரியவர்களும் , மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். அதுமட்டுமின்றி, பால், நெய், வெண்ணெய், மோர் போன்ற பால் பொருட்களை உட்கொள்வதால் உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிடுவதன் மூலமும் வைட்டமின் டி பெறலாம்.

சிறு குழந்தை முதலே சூரிய ஒளியில் விளையாட வைப்பது அவசியமாகிறது. வைட்டமின் டி நிறைவினால் ஆரோக்கியமான எதிர்காலம் படைப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com