.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
இஞ்சி இல்லாத சமையல் இல்லை. இது சுவைக்கு மட்டுமன்றி ஆரோக்கியத்திற்கும் பெரும் பங்காற்றுகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்றது. இஞ்சி சாறு உடலின் அனைத்துப் பிரச்சனைகளையும் போக்கி இதமளிக்கிறது.
ஆஸ்துமாவிற்கு இஞ்சியை சாறு எடுத்து அதனுடன் துளசிச் சாறு, தேன் கலந்து அருந்தி வர நல்ல நிவாரணம் தரும்.
செரிமானத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கிருமிகளை போக்கும் சக்தி கொண்டது.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து அருந்த சளி மற்றும் தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
தேன், இஞ்சி சாறை ரெகுலராக குடித்து வர புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
இஞ்சி சாறை கொத்தமல்லி சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடிக்க பசியின்மை, பித்தத்தை போக்கும்.
இஞ்சி சாறுடன் உப்பு சேர்த்து அருந்த மலச்சிக்கல் தீரும்.
இஞ்சி சாறை உப்புடன் சேர்த்து வெதுவெதுப்பாக கொப்பளிக்க பல் கூச்சம் இல்லாமல் இருக்கும்.
வாய்துர்நாற்றத்தை போக்க இஞ்சி சாறு, புதினா இலை சாறு கலந்து அருந்திடலாம்.
இஞ்சி சாறுடன் துளசி சாறை கலந்து அருந்த வாயுத் தொல்லை நீங்கும்.
இஞ்சி சாறு, வெல்லம் கலந்து அருந்தி வர வாத நோய்கள் குணமாகும்.
இஞ்சியை டீ வைத்து குடிக்க பலவித நன்மைகளைக் கொடுக்கும்.
இஞ்சி டீ நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
சுவாசக் கோளாறுகள் மற்றும் மூட்டு வலியிலிருந்து குணம் பெற உதவும்.
உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதய வலியிலிருந்து நிவாரணம் தரும்.
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிற்று பொருமலை சரிசெய்யும்.
இவ்வாறு பல நன்மைகள் கொண்ட இஞ்சியை உணவில் சேர்த்து உடல்நலம் பேணுவோம்.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை/நிபுணரை அணுகவும்.