'தங்க இரத்தம்'! : மிரள வைக்கும் உண்மைகள்!

சாதாரண இரத்தம் பற்றி எல்லோருக்கும் தெரியும். தங்க இரத்தம் மிக அரிதானது. இதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Rh-null: the golden blood
Rh-null blood group
Published on

உலகில் உள்ள 43பேர்களுக்கு மட்டுமே தங்க இரத்தம் உள்ளது‌ உலகளவில் ஏ, பி, ஏபி மற்றும் ஓ ஆகியவை பொதுவாகக் காணப்படும் இரத்த வகைகளாகும். சாதாரண இரத்தம் பற்றி எல்லோருக்கும் தெரியும். தங்க இரத்தம் மிக அரிதானது. இதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

RhNull இரத்த வகை மிக அரிதான இரத்த வகையாகும். 1961இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரத்த வகை 'தங்க இரத்தம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த இரத்தத்தைத் தானம் செய்யக்கூடியவர்கள் உலகிலேயே 8 நன்கொடையாளர்கள் மட்டுமே உள்ளனர்.

தங்க இரத்தத்தின் தோற்றம் 'ஓ' பாசிடிவ், 'ஓ' நெகடிவ், 'பி' பாசிடிவ, 'பி' நெகடிவ், 'ஏபி' பாசிடிவ் மற்றும் 'ஏபி' நெகடிவ் உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட இரத்தவகை கொண்டவர்களிடம் இருந்து வேறுபட்டது.

நரம்புகள் வழியாக ஓடும் இரத்தமானது சிவப்பு இரத்த அணுக்கள், ப்ளாஸ்மா மற்றும் ஆன்டிஜென்களால் ஆனது. அவை சுமார் 342 எண்ணிக்கையில் உள்ளன.

உங்கள் இரத்த வகையை தீர்மானிக்க வேலை செய்கின்றன. 342 ஆன்டி ஜென்களில் 160 பொதுவாகக் காணப்பட்டாலும் இந்த ஆன்டிஜென்னை தவறவிட்ட வர்கள் அரிதான இரத்த வகையைக் கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
தண்ணி குடிச்சதும் பாத்ரூம் ஓடுறீங்களா? சாதாரணமா நினைக்காதீங்க... இது பெரிய நோயின் அறிகுறி!
Rh-null: the golden blood

Rhமைப்பில் 61 சாத்தியமான ஆன்டிஜென்கள் இல்லாவிட்டால் அந்த இரத்தம் Rh Null என்று கருதப்படுகிறது‌. இது 6 மில்லியன் மக்களில் ஒருவருக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆன்டிஜென் ரத்தத்தில் இல்லாதவர்கள் தங்கள் இரத்தத்தில் தங்கத்தை சுமந்து செல்லும் அதிர்ஷ்டசாலிகள் என்று கருதப்படுகிறது.

நம்மைப் போலவே Rh இரத்த வகையை சுமப்பவர்கள் உயிருக்கு பெரிய ஆபத்தில்லாத சாதாரண ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்தும் திறன் கொண்டவர்கள். இருப்பினும், RBC எண்ணிக்கை சற்று குறைவாக இருப்பதால் அவர்களுக்கு சில ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தங்க இரத்தம் உள்ளவர்களின் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் இவர்கள் அனைத்து இடங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையைப் பின்பற்ற வேண்டும்‌

இதையும் படியுங்கள்:
'ஜூஸ் விரதம்': இது புதுசா இருக்கே! உடலில் உள்ள நச்சுகள் நீங்குமாமே!
Rh-null: the golden blood

இந்த வகை இரத்தம் உள்ளவர்கள் பாதிக்கப்டுவதாக இருந்தாலும் மருத்துவ சிகிச்சையின்போது அவர்களுக்கு உதவக்கூடிய நன்கொடையாளரைக் கண்டு பிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம். இத்தகைய அரிதான சந்தர்ப்பங்களில் இரத்தத்தைக் கொண்டு செல்வது கடினமானது. இந்தவகை இரத்தம் இருப்பவர்கள் தங்கள் இரத்தத்தை காப்பீடு செய்யவும் அல்லது வங்கியில் தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

இரத்த வகைகள் எவ்வாறு உருவாகின?

குரூப் பி சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிவப்பு இரத்த அணுக்களின் மேற்பரப்பில் உள்ள சர்க்கரைகளில் ஏற்பட்ட மரபணு மாற்றத்தில் இருந்து உருவாக்கப்பட்டது. 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இரத்த அணுக்களில் கொண்டிருக்கும் சர்க்கரை வகைக்குள் மரபணுவில் மற்றொரு பிறழ்வு காரணமான 'ஓ' வகை உருவாக வழிவகுத்தது‌. அதன் செல்கள் இரத்தவகை ஏ மற்றும் பி உருவாவதற்கும் காரணமான சர்க்கரையை கொண்டிருக்கவில்லை. சில ஆண்டுகளில் இரண்டு சர்க்கரையின் வெளிப்பாடு ஏபி என அறியப்படும் இரத்தவகையை உருவாக்கியது.

இதையும் படியுங்கள்:
தேனை சுடுநீரில் கலந்து சாப்பிடலாமா? தெரிஞ்சுகோங்க friends..!
Rh-null: the golden blood

1961 ல் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு பெண்ணிடம் தங்க இரத்தம் கண்டறியப்பட்டது. அப்போது தான் இந்த வகை இரத்தம் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது‌. இந்தியாவில் 2022ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு இந்த வகை இரத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இது மிக விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது‌. இந்த இரத்த வகையில் நோயெதிர்ப்பைத் தூண்டக்கூடிய ஆன்டிஜென்கள் எதுவும் இல்லை‌. ரீசஸ் நோயைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் இம்யுனோக்ளோபுலின் அடிப்படையிலான மருந்துகளை உருவாக்குவதில் இது பயனுள்ளதாக இருக்கிறது. இது மருத்துவ ஆராய்ச்சிகளில் முக்கிய பங்கை வகிக்கிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com