அது என்னங்க 'கிரேக்க தயிர்'? Greek Yogurt - நாம் வீட்டில் செய்யும் தயிரை விட இது பவர்ஃபுல்லா?

Greek Yogurt Benefits
Greek Yogurt Benefits
Published on

இப்பொழுது மிகவும் ட்ரெண்டான விஷயம் என்ன தெரியுமா? ஆரோக்கியத்திற்காக கிரேக்க தயிர் Greek Yogurt சாப்பிடுவது என்பதுதான். சாதாரண தயிரில் இருந்து இது எப்படி வேறுபடுகிறது? இதில் கால்ஷியம் பொட்டாசியம், புரோபயாடிக்குகள், வைட்டமின் பி 12 நிறைந்து இருக்கிறது. பால் பொருட்களில் காணப்படும் லாக்டோஸை விட குறைந்த அளவே இதில் காணப்படுகிறது.

இதனால் நம் ஆரோக்கியம் எப்படி பேணப்படுகிறது (Greek Yogurt Benefits) என்பதை பார்ப்போம் .

1. இதில் இருக்கும் புரோ பயாடிக்குகள் நம் குடல் வழியாக செல்வதால் குடலின் செயல்திறன் சீராக இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுகின்றன.

2. செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. அதுவும் இல்லாமல் உடலில் கெட்ட பாக்டீரியாக்கள் நல்ல பாக்டீரியாக்கள் என்று இரு வகைகள் உள்ளன. இதில் நல்ல பாக்டீரியாக்களை மேலும் பெருகச் செய்கிறது.

3. கிரேக்கத் தயிரில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால், அதை உட்கொண்டால் எப்பொழுதும் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படும். அதனால் உணவு உட்கொள்வது குறைவாக இருக்கும். உடல் எடையைக் குறைக்க முற்படுபவர்களுக்கு பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

4. இந்தத் தயிரியில் கால்சியம் அளவு அதிகமாக இருப்பதால் கொழுப்பு உற்பத்தியைத் தடுக்கிறது. இதில் இருக்கும் அயோடின், தைராய்டு செயல்பாடு சீராக இருப்பதற்கு மிகவும் உதவி புரிகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரு வாரம் ஆனாலும் தயிர் புளிக்காது... இதோ பாட்டி காலத்து ரகசியம்!
Greek Yogurt Benefits

5. இந்தத் தயிரில் உள்ள பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ஒரு கப் கிரேக்க தயிரில் 240 மி.கி. பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசியம் இரத்த நாளங்கள் சுருங்குவதைத் தடுக்கிறது. ஏனென்றால் இந்த நாளங்கள் சுருங்குவதால் தான் இரத்த அழுத்தம் கூடுகிறது.

6. இதில் உள்ள வைட்டமின் பி12 மூளை செல்களை பாதுகாக்கிறது. இதனால் நினைவாற்றல் குறையாமல் சீராக இருக்கிறது.

7. நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக உருவாவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா?

8. இந்த தயிரில் கால்சியம் இருப்பதால், இதை உட்கொண்டால் எலும்பு பராமரிப்புக்கு மிகவும் உதவி செய்கிறது. வயதான காலத்தில் எலும்பு முறிவு அடிக்கடி ஏற்படுவது உண்டு. இதன் மூலம் அதைத் தவிர்க்கலாம்.

சரி எல்லாமே கூறியபடி விட்டதே. அது என்ன கிரேக்கத் தயிர் என்று தானே யோசனை செய்கிறீர்கள்? நாம் உபயோகிக்கும் பாரம்பரிய தயிரை பலமுறை வடிகட்டி அதில் உள்ள வே (whey) என்னும் திரவப் பொருளை வெளியேற்றி, மிகவும் கெட்டியான தயிராக உபயோகப்படுத்துவதை தான் கிரீக் யோகர்ட் என்று கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சுவையான தயிர் சாண்ட்விச் செய்வது எப்படி?
Greek Yogurt Benefits

தமிழில் கிரேக்க தயிர் என்று கூறப்படுகிறது. இந்தத் தயிரை ஒரு பெரிய கப் அளவு தினமும் காலையில் சிற்றுண்டிக்குப் பதிலாக உலர் பழங்களுடனோ, கொட்டைகளுடனோ எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். முயற்சிக்கலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com