ஜிம்முக்கு போகாமலேயே எடையைக் குறைக்க இதோ ஒரு 'சிவப்பு' மேஜிக்!

Red banana and Weight loss
Red banana and Weight loss
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on: 

பொதுவாக வாழைப் பழங்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்று தான் நாம் நினைக்கிறோம். அந்த வகையில் பல வகைகளிலும் உடல் எடையை குறைக்க எல்லோரும் பாடு படுகிறோம். பெரும்பாலும் வாழைப் பழத்தைத் தவிர்த்து விடுவது உண்டு. இது எடையை அதிகரிக்கச் செய்யுமா? என்ற பயம் தான் காரணம்‌. வாழைப்பழம் உடனடி ஆற்றல் வழங்கும்‌ தவறாமை கொண்டது‌. குறிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் வாழைப்பழம் உண்பது நல்லது.

நீங்கள் எடையைக் குறைக்க வேண்டுமென்றால் கவலைப்படாமல் செவ்வாழைப் பழம் (Red Banana) சாப்பிடலாம். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஆன்டி ஆக்சிடண்ட்ஸ், நார்சத்து போன்றவை அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளன. ஏனவே எடைக்குறைக்க விருமாபுவர்க்கு செவ்வாழை சிறந்தது‌ இது உடலுக்கு ஏராளமான நன்மை வழங்குகின்றன‌.

1. செவ்வாழையில் உள்ள சத்துக்கள்

100 கிராம் செவ்வாழையில் 9‌ .0 கலோரிகளும், 2.1 கிராம் புரதமும், 0.3 கி கொழுப்பும், 22.8 கிராம் கார்போஹைட்ரேட் மும், 350மிகி பொடாசியமும், 2.6.மிகி நார்ச்சத்தும் 13.6 மிகி பி9 சத்தும், 5மிகி கால்சியமும், 1.3மி.கி. சோடியமும், மற்றும் 22மி.கி பாஸ்பரசும் உள்ளன.

2. நோயெதிர்ப்பு

செவ்வாழையில் உள்ள பொடாசியமும் மக்னீசியமும் இரத்த அழுத்தத்தக் குறைக்கும்‌. முக்கியமாக இதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். இதன் பி. சத்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்கும். கொலாஜனையும் அதிகமாக உற்பத்தி செய்யும்.

3. கண்களுக்கு நல்லது

இது சிகப்பாக இருப்பதற்குக் காரணம் கரோடினாய்டுகள்‌. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் லுடின் மற்றும் பீடாகரோடினாய்டுகள் போன்ற கரோடினாய் டுகள் நிறைந்த செவ்வாழையை உட்கொண்டால் கண் பார்வை சிறப்பாக இருக்கும்.

4. ஆற்றல் சிறப்பாக இருக்கும்

எப்போதும் உடலில் ஆற்றல் இல்லாதது போன்று உணர்கிறீர்களா? தினமும் காலை உணவின் போது உட்கொள்ள இதில் உள்ள இயற்கை சர்க்கரைகளான ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் க்ளூகோஸ் போன்றவை உடனடி ஆற்றல் தரும்‌. ஜிம்மில் கடும் பயிற்சி செய்பவர்கள் இதை உண்ண ஆற்றல் அதிகமாகும். சோர்வைத் தடுக்கும்.

இதையும் படியுங்கள்:
கோடை கால நோய்களில் இருந்து தப்பிப்பது எப்படி? ஒரு முழுமையான ரிப்போர்ட்!
Red banana and Weight loss

5. எடையை குறைக்கும்

அதிகப்படியான எடையைக் குறைக்க செவ்வாழை பெரிதும் உதவும்‌. இதில் நார்சத்து அதிகம். இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. கொழுப்பு குறைவு. இதை உண்ணும்போது வயிறு நிரம்பிய உண்ர்வு ஏற்படும் மற்ற உணவின் மீது நாட்டம் ஏற்படாது‌. இதன் நார்சத்து உடல் வீக்கத்தைக் குறைக்கிறது. தினமும் செவ்வாழை சாப்பிட எடை குறையும்‌.

6. மனநிலை சிறப்பாக இருக்கும்

செவ்வாழையில் உள்ள வைட்டமின் பி6 ட்ரிப்டோபேனை செரடோனினாக மாற்ற உதவுகிறது‌. செரடோனின் நல்ல மனநிலையைக் தரும். அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்கள் செவ்வாழை மை உண்டால் அதிலிருந்து விடுபடலாம். இந்த கோடையில் தினமும் செவ்வாழை உண்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உடலைக் குறைக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு பலன் பெறலாம். உடலை வருத்தி பயிற்சி செய்வதை விட இது உங்களுக்கு விரும்பிய பலன் தரும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com