ஹாஷிமோட்டோஸ்: நோயா? உணவுமுறையா? தெரிஞ்சுக்கலாம் வாங்க...

Hashimoto's diet
Hashimoto's diet
Published on

பொதுவாக பெண்களையும், நடுத்தர வயதினரையும் ஹாஷிமோட்டோஸ் என்கிற நோய் தாக்குகிறது. இது ஏற்படுத்தும் உடல் ரீதியான சிக்கல்களை சமாளிக்க ஹாஷிமோட்டோஸ் உணவுமுறையை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. ஹாஷிமோட்டோஸ் உணவுமுறையைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

ஹாஷிமோட்டோஸ் நோய் என்றால் என்ன?

தைராய்டு சுரப்பி என்பது நம் கழுத்தில் உள்ள சிறிய உறுப்பு. இது உடலுக்குத் தேவையான ஹார்மோன்களை உருவாக்கி உடலின் ஆற்றலையும் பிற செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும். ஹாஷிமோட்டோஸ் என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும்.

இது தைராய்டு சுரப்பியை தவறாகத் தாக்கி அதை பலவீனமாக்குவதால் ஹைப்போதைராய்டிசம் எனப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் உடல் எடை கூடுதல், மூட்டு வலி, தசை வலி, மலச்சிக்கல், வறண்ட சருமம், முகம் வீங்கிப் போதல், முடி கொட்டுதல் போன்றவை ஏற்படும். பொதுவாக இது பெண்களுக்கும், நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

ஹாஷிமோட்டோஸ் உணவுமுறை:

ஹாஷிமோட்டோஸ் உணவுமுறை என்பது முழு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதையும்,

சர்க்கரை சேர்த்த உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், பசையம் மற்றும் சோயா, பால் பொருட்கள் கொண்ட உணவுகளை தவிர்ப்பதையும் வலியுறுத்துகிறது.

வண்ணமயமான பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேடுகள், மெலிந்த புரதங்கள் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை தைராய்டு ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. ஏனென்றால் இவற்றில் செலினியம், துத்தநாகம், அயோடின் போன்ற சத்துக்கள் உள்ளன.

1. பழங்கள் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்: சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, இலைக் கீரைகள், சீமை சுரைக்காய், கேரட் ப்ராக்கோலி ஆகியவை நார்ச்சத்துக்களை கொண்டவை உடலுக்கு ஆக்சிஜனேற்றிகளை வழங்குகின்றன.

2. ஆரோக்கியமான கொழுப்புகள்: அவகேடோ, ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், இனிக்காத தேங்காய் துருவல்கள் மற்றும் விதைகள் போன்றவை ஆரோக்கியமான கொழுப்புச்சத்தை கொண்டிருக்கின்றன. உடலின் வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
தேங்காயின் பலன்கள்: பூஜையறையில் இருந்து பொருளாதாரம் வரை!
Hashimoto's diet

3. மெலிந்த விலங்கு புரதம்: சால்மன் மீன் வகைகள், முட்டை, வான் கோழி இறால் போன்ற உணவுவகைகளில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

4. பசையமில்லாத முழு தானியங்கள்: பழுப்பு அரிசி, குயினோவா மற்றும் பசையம் இல்லாத ஓட்ஸ் ஆகியவை சிறந்தவை.

5. கொட்டைகள் மற்றும் விதைகள்: சூரியகாந்தி விதைகள் மற்றும் பாதாம்.

6. பால் மாற்றுப் பொருள்கள்: பாலுக்குப் பதிலாக தேங்காய், பாதாம் மற்றும் முந்திரிப் பால் அல்லது தயிர் போன்றவை கால்சியம் மற்றும் விட்டமின் டி சத்துக்கள் நிறைந்தவை.

7. பீன்ஸ் மற்றும் பயறு வகைகள்: இவை நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. ஆனால் சிலருக்கு உணர்திறனை ஏற்படுத்துகின்றன.

8. மசாலா மற்றும் மூலிகைகள்: மஞ்சள், துளசி ரோஸ்மேரி மற்றும் குடைமிளகாய் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1. சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகள், கேக்குகள், சோடாக்கள், மிட்டாய்கள் போன்றவை வீக்கத்தை அதிகரித்து இந்த நோயின் அறிகுறிகளை மோசமாக்கும்.

2. துரித உணவு மற்றும் வறுத்த உணவுகள், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்தை சீர்குலைத்து உடல் வீக்கத்தை ஊக்குவிக்கும்.

இதையும் படியுங்கள்:
IPL 2026: புதிதாக 5 முக்கிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தும் பிசிசிஐ?
Hashimoto's diet

3. சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், வெள்ளை ரொட்டி, பாஸ்தா, பன்றி இறைச்சி போன்ற பொருட்களை குறைவாக உண்பது அல்லது தவிர்ப்பது நல்லது.

4. பசையம் கொண்ட தானியங்களான கோதுமை, பார்லி, கம்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

5. சோயா பொருட்கள் மற்றும் சோயா பால், டோஃபு, தக்காளி உருளைக்கிழங்கு கத்திரிக்காய் போன்ற காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.

பால் பொருள்களை தவிர்ப்பது வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சனைகளைக் குறைக்கும். வெண்ணெய், அதிகமாக பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைக் குறைக்க வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com