தலைவலி பிரச்சனையா? 'நல்வேளை செடி' இருந்தால் போதும்!

Nalvelai plant
Nalvelai plant
Updated on

நம்மில் பலருக்கும் பெரிய பிரச்சனையாக இருப்பது தலைவலிதான். ஒரு சிலருக்கு தலைவலி எப்பொழுதாவது ஏற்படும். இன்னும் சிலருக்கு உடல் பாதிப்பினால் தலைவலி ஏற்படும். சளி, தலையில் நீர்கோர்த்தல் போன்ற காரணங்களினால் தலைவலி ஏற்படும். மேலும் சிலருக்கு ஒற்றை தலைவலி இருக்கும். ஆனால் இவ்வாறு தலைவலி ஏற்பட்டால் நம்மால் ஒரு வேலையும் சரியாக பார்க்க முடியாது.

ஒரு சிலர் இந்த தலைவலி ஏற்பட்டவுடன் அதற்காக மாத்திரைகள், மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்துவார்கள். அடிக்கடி மாத்திரைகள், மருந்துகள் சாப்பிடுவதால் அது நம் உடலுக்கு நல்லதல்ல. இவ்வாறு நீர் கோர்தல், சளி, ஆகியவற்றால் ஏற்படும் தலைவலியை இயற்கையான முறையில் 'நல்வேளை செடியை பயன்படுத்தி எவ்வாறு குணப்படுத்தலாம்' என்றும், மேலும் உடலில் உள்ள பல நோய்களை இந்த செடியை கொண்டு எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் இந்த பதிவில் காண்போம்.

நல்வேளை செடி: 

பெயருக்கு ஏற்றது போலவே இது நல்ல செடி தான். பல நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுவதால் 'நல்' என்றும், முற்காலத்தில் காலை மற்றும் மாலை வேளையை அறிந்துக்கொள்வதற்கு இந்த செடியை பயன்படுத்தியதால் இதனை 'வேளை' என்றும் அழைத்தார்கள். இதனால் இது  'நல்வேளை' செடி என்று பெயர் பெற்றது.

சிரநோய் வலி குடைச்சல் தீராச் சயித்தியம், உரநோயிவைக மொழியும் உரமேவும்... பசி கொடுக்கும் நல்வேளை தன்னை நவில்” என அகத்தியரின் பாடலில் நல்வேளை செடியை பற்றிய குறிப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்:
இரவில் பழங்கள் சாப்பிடுவதன் நன்மை, தீமைகள்! 
Nalvelai plant

நல்வேளை செடியின் பயன்கள்

நல்வேளை செடி இலை, பூண்டு, நொச்சி, குப்பைமேனி ஆகியவற்றை தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து காய்ச்சி வாரத்திற்கு இருமுறை தலையில் தேய்த்து, தலை குளித்து வந்தால் தலையில் நீர் கோர்த்தல் பிரச்சனை தீரும்.

மேலும் இந்த செடியின் இலையை பறித்து அதனை நன்றாக அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி உடனடியாக நிற்கும். 

இந்த செடி முழுவதையும் பறித்து நன்றாக அரைத்து அதன் சக்கையை தலையில் துணியால் வைத்து கட்டி வந்தால் தலையில் நீண்ட நாட்களாக கோர்திருந்த நீர் முழுவதுமாக வெளியேறிவிடும்.

நல்வேளை செடியின் இலையை அரைத்து சாறு எடுத்து பால் மற்றும் நாட்டு சக்கரையுடன் கலந்து குடித்தால் நீண்ட நாட்களாக இருந்த சைனஸ் பிரச்சனை தீரும்.

இந்த இலையின் சாறை காதில் இரண்டு சொட்டு விட்டால் காதில் உள்ள சீல் வடிதல் பிரச்சனை குணமாகும்.

இதையும் படியுங்கள்:
ABC Juice: தப்பி தவறி கூட இவர்கள் இந்த ஜூஸை குடிக்க கூடாது!
Nalvelai plant

மேலும் நல்வேளை செடியின் இலைகளை பறித்து தீராத காயம், புண், கட்டி ஆகியவற்றின் மீது தடவி வந்தால் உடனடியாக சரியாகிவிடும்.

இந்த செடியின் விதைகளை பொடி செய்து விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து 1 ஸ்பூன் அளவு குடித்து வந்தால் குடல் வாயு, குடற் புழுக்கள் வெளியேறிவிடும்.

நல்வேளை இலையை தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை தீரும்.

மேலும் இதில் β-கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், சிட்டோஸ்டிரால் போன்ற பல வேதிப்பொருட்கள் உள்ளன.

'களை' செடிகள் என்று எண்ணி இது போன்ற மூலிகை செடியின் மகத்துவத்தை நாம் மறந்து வருகிறோம். இந்த செடிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்து வந்தால், உடலில் ஏற்படும் பல நோய்களை நாம் குணப்படுத்தலாம்.

logo
Kalki Online
kalkionline.com