ஒரு கப் தேங்காய் பாலில் என்னென்ன பலன்கள் இருக்கு தெரியுமா?

உலக தேங்காய் தினம் - செப்,2
ஒரு கப் தேங்காய் பாலில் என்னென்ன பலன்கள் இருக்கு தெரியுமா?

லரும் தேங்காய் பால் அருந்துவதால் உடல் எடை கூடும் என்று நினைக்கின்றனர். அது தவறு. விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பாலை விட தேங்காய் பாலில் கொழுப்புச் சத்து குறைவு. ஆரோக்கியமான சத்துக்கள் அதிகம் கொண்ட தேங்காய் பாலை அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும். வளரும் இளம்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் அவர்களுக்கு இரும்புச் சத்து கிடைக்கிறது.

தேங்காய் பால், எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு உதவுகிறது. கால்சியம் சத்தோடு, பாஸ்பர சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

தேங்காய் பாலில் செலினியம் அதிகம் உள்ளது. தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மாதத்துக்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்துக்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்திவந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் நீங்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.

அடிக்கடி தேங்காய் பால் குடித்து வருபவர்களுக்கு அவ்வளவு சீக்கிரத்தில் சரும சுருக்கங்கள் ஏற்படாது. மேலும், சரும பளபளப்பு கூடி, வயதானபோதும் இளமையான தோற்றம் நீடிக்க வழி செய்யும்.

தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே, அடிக்கடி தேங்காய் பால் அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். தேங்காய் பாலில் மாங்கனீசு சத்து அதிகம் நிறைந்திருப்பதால், அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகளும் வெகுவாகக் குறைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com