நல்ல ரோஸ் நிறத்தில் இருக்கும் இது பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் மற்றும் இரும்பு நிறைந்தது. இது உடலை நீரேற்றமாக வைக்கிறது. பிஹெச் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
துத்தநாகம், இரும்பு, மக்னீசியம் நிறைந்தது செரிமானத்திற்கு ஏற்றது. சுத்திகரிக்கப்படாத கடல் உப்பை வாங்க வேண்டும்.
க்ரே நிறத்தில் இருக்கும் இதில் எலெக்ட்ரோலைட் அதிகம் இருக்கும். மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் நிறைந்தது. தசை பிடிப்புகளை போக்கக் கூடியது. சக்தியை அதிகரிக்கக் கூடியது.
கடல் உப்புடன் வால்கானிக் சிவப்பு களிமண் சேர்ந்தது இந்த சிவப்பு உப்பு. இது செரிமான மண்டலத்தை சரி சேர்க்க கூடியது. இரத்த விருத்தியை அதிகரித்து நோயெதிர்ப்பையும் மேம்படுத்துகிறது
சல்ஃபர் அதிகம் உள்ள இது ஆயுர் வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் சல்ஃபர் உள்ளதால் முட்டை வாடை அடிக்கும். நெஞ்செரிச்சல் வயிறு உப்புசத்தை தடுக்கக் கூடியது. மற்ற உப்புகளைவிட இதில் சோடியம் அளவு குறைவாக உள்ளது.
இங்கிலாந்தில் காணப்படும் பிரமிட் வடிவ உப்பாகும். இதில் ஊட்டச்சத்து அதிகம் இல்லாவிட்டாலும் சோடியம் அளவைக் குறைக்கக் கூடிய பண்பு பெற்றது.
அரிசி வடித்த கஞ்சியில் கருப்பு உப்பை சேர்த்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.
அரிசிக் கஞ்சி நீர் சாதாரண நீரைவிட உடலை அதிக நீரேற்றத்துடன் வைக்கும். இது வயிற்றின் அமிலத் தன்மையைக் குறைக்கும்.
கருப்பு உப்பில் சல்ஃபர் மற்றும் பொட்டாசியம் உள்ளதால் உடல் நச்சுக்களை நீக்கும்.
கஞ்சி நீரில் அழற்சி எதிர்ப்பு உள்ளதால் அல்சரை போக்கும்.
இக்கலவையில் உள்ள சோடியம் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் எலெக்ட்ரோலைட்டை அதிகப்படுத்தி தசைகளை வலுவாக்கும்.
இதில் கரையும் நார்சத்து இருப்பதால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த தீர்வு. செரிமானத்திற்கு சிறந்தது.
கருப்பு உப்பு சோடியம் அளவைக் குறைத்து இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
இந்த நீர் சருமத்தை வறட்சியைப் தடுத்து நீரேற்றமாக வைக்கிறது.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும், பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)