பீ போலன் தரும் ஆரோக்கிய நன்மைகள்!

Bee Pollen
Bee Pollenhttps://supplements.selfdecode.com
Published on

பீ போலன் (Bee Pollen) என்பது தேனீ மகரந்தம் எனக் கூறப்படுகிறது. தேனீக்களின் மிக முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று மகரந்தச் சேர்க்கை. இதன் மூலம் தேனீக்கள், தாவரங்கள் மகரந்தச் சேர்க்கை பெற உதவுகின்றன. தேனீக் கூட்டத்தின் உயிர் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் மகரந்தம் மிகவும் முக்கியமானதொரு பொருள். அது ஏராளமாக இருக்கும்போது தேனீக்களைத் தொந்தரவு செய்யாமல் தேன் கூட்டிலிருந்து மகரந்தத்தை மனிதர்கள் சேகரிக்கின்றனர். இது ஒரு இயற்கைப் புரதமாகும். இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விதவிதமான வைட்டமின்கள், மினரல்கள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் என்சைம்கள் போன்ற ஊட்டச் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவு இந்த பீ போலன். இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி வைரல் குணங்களானவை நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்ய உதவுகின்றன. பீ போலனில் உள்ள பினோலிக் அமிலங்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க வல்லவை.

இது உடலிலுள்ள தேவைக்கு அதிகமான கொழுப்புகளின் அளவைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. மேலும் இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவரில் பிளேக்குகளால் உண்டாகும் தடிப்பைத் (Atherosclerosis) தடுக்கவும் உதவி புரிகிறது. பீ போலன் கல்லீரலின் செயல்பாடுகளை மேம்படுத்தி நச்சுக்களை முறைப்படி முழுவதுமாக உடலிலிருந்து  வெளியேற்ற உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
அறிவுசார் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் கன்னிமாரா நூலகம்!
Bee Pollen

இதில் உள்ள என்சைம்கள் குடல் இயக்கத்தை சீர்படுத்தி செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகின்றன. இந்தத் தேனீ மகரந்தத்தில் அழற்சி எதிர்ப்புப் பண்புகளும், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய செல்களை எதிர்த்துப் போராடும் குணமும், காயங்களை ஆற்றும் குணமும், மெட்டபாலிச செயலில் உதவும் பண்பும் நிறைந்துள்ளன.

எந்த விதமான பதப்படுத்தல்களுக்கும் உள்ளாகாமல் இயற்கை முறையிலேயே கிடைக்கும் பீ போலனை நாமும் உபயோகித்து உடல் நலம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com