ஏலக்காய்: வாசனைக்கு மட்டும்தானா? யார் சொன்னது? இது தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Cardamom
Cardamom
Published on

பொதுவா நம் அனைவரின் வீடுகளிலும் 'கார்டமம்' (Cardamom) எனப்படும் ஏலக்காய் எப்பொழுதும் இருப்பதுண்டு. இது காலங்காலமாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு மூலிகைப் பொருள். இதில் பல வகையான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இருந்தபோதும் ஏலக்காயை நாம் ஒரு வாசனைப் பொருளாகவே, விசேஷ நாட்களில் தயாரிக்கப்படும், புலவ் மற்றும் பாயசம் போன்ற உணவுகளில் சேர்த்து வருகிறோம்.

ஏலக்காயிலிருந்து வேறு என்னென்ன ஆரோக்கிய நன்மைகளை நாம் பெற முடியும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

பற்பாதுகாப்பு:

ஏலக்காய் இயற்கையிலேயே ஆன்டி பாக்ட்டீரியல் குணம் கொண்டது. இதை வாயில் போட்டு மெல்வதால் வாயிலிருக்கும் கெட்ட பாக்ட்டீரியாக்கள் அழிக்கப்படும். மேலும் வாய் துர்நாற்றம் நீங்கும். பலராலும் இது, இயற்கை முறையில் வாய்க்குள் புத்துணர்வு கொண்டு வர பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நச்சு நீக்கி:

ஏலக்காயில் டை-யூரிக் குணம் உள்ளது. இது உடலிலுள்ள அதிகளவு நச்சுக்களை வெளியேற்ற கிட்னிக்கு உதவி புரிந்து கிட்னி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

ஜீரண மண்டல ஆரோக்கியம் காக்க:

ஏலக்காய் இரைப்பை குடல் பகுதியில் உள்ள வீக்கங்களைக் குறைக்க உதவும். பித்த நீர் சுரப்பை அதிகரிக்கச் செய்து, கொழுப்புகள் சுலபமாக உடைக்கப்பட்டு ஜீரணமாவதற்கும் உதவி புரியும்.

இரத்த அழுத்த மேலாண்மை:

ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள், இயற்கை முறையில் உயர் இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவுகின்றன.

இனப்பெருக்க செயல்:

பாரம்பரியமாக, ஏலக்காய் ஒரு பாலுணர்வூக்கியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் ஏலக்காய் உதவி புரியும்.

மூளையின் ஆரோக்கியம் காக்கும்:

ஏலக்காயின் சுகந்தமான வாசனை மனம் அமைதி பெற உதவும். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் மன வருத்தம் மற்றும் குறைந்த அளவிலான மன அழுத்தம் போன்றவற்றை குறைப்பதற்குப் பயன்படும்.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்டு குழந்தைக்கு Attention Deficit Disorder (ADD) இருக்கா? இந்த கல் அணிவது உதவுமாமே...
Cardamom

சுவாசப் பாதை ஆரோக்கியம் காக்கும்:

ஏலக்காயில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் ஆஸ்த்மா நோய் உண்டாகும் அறிகுறிகளை நீக்கி, தேவையான ஆக்ஸிஜன் சுலபமாக நுரையீரலுக்கு சென்றடையவும், அசுத்தம் கலந்த காற்று வெளியேறவும் உதவி புரியும்.

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் தரக்கூடிய ஏலக்காயை தினசரி நம் உணவுடன் சேர்த்து உட்கொண்டு நலம் பல பெறுவோம்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com