இதயத்துக்கும் மூளைக்கும் பாதுகாப்பு! இந்த கொழுப்பு குறைந்தால்... அச்சச்சோ... பாதிப்பு!

இதயத்தையும் மூளையையும் பாதுகாக்கும் ஒரு கொழுப்பை பற்றி அறிவீர்களா? அதன் குறைபாடு எந்த அளவிற்கு பாதிப்பை தரும் தெரியுமா?
omega 3 rich foods
omega 3 Img credit: AI Image
Published on

ஒமேகா–3 (omega 3)கொழுப்பு அமிலங்கள் உடல் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உடல் சீராக இயங்க ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் எந்த அளவுக்கு அவசியமானதோ, அதே அளவுக்கு ஆரோக்கியமான கொழுப்புகளும் மிகவும் அவசியமாகும். ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களில் மிகவும் முக்கியமானது ஒமேகா-3 (omega 3) ஆகும். நம் உடல் இந்த கொழுப்பு அமிலத்தை இயற்கையாக உருவாக்குவது இல்லை என்பதால், இந்த கொழுப்பு சத்தை நாம் உணவின் மூலமாகவோ அல்லது ஊட்டச்சத்து மருந்துகளின் மூலமாகவோ பெற முடியும்.

​ஒமேகா-3 ஏன் முக்கியமானது?

​ஒமேகா-3 என்பது வெறும் கொழுப்பு மட்டுமல்ல, அது செல்களின் சவ்வு கட்டமைப்பிற்கு அடிப்படை தேவையாகும். இந்த கொழுப்பு அமிலங்களில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவை ALA, EPA மற்றும் DHA ஆகும். முதலில் ​ALA (Alpha-linolenic acid) வகை கொழுப்பு அமிலம் தாவர உணவுகளில் காணப்படுகிறது. ​EPA (Eicosapentaenoic acid) கொழுப்பு அமிலம் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. ​DHA (Docosahexaenoic acid) வகை கொழுப்பு அமிலம் மூளை மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.

ஒமேகா-3 இன் ஆரோக்கிய நன்மைகள்:

இதயம்: சுருக்கமாக கூறினால் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயத்தையும் மூளையையும் பாதுகாக்கும் ஒரு கவசமாக செயல்படுகின்றன. ஒமேகா-3 இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடு அளவைக் குறைத்து, இதயத் துடிப்பு சீராக இருக்க உதவுகிறது. மேலும், இது இதயத் தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுத்து, இரத்த நாளங்களை மென்மையாக வைத்திருக்கும் எண்டோடெலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

மூளை: மூளையின் பகுதிகள் 60% கொழுப்பால் ஆனது. அதில் பெரும்பகுதி DHA ஆகும். ஒமேகா-3 செரோடோனின் மற்றும் டோபமைன் ஆகிய ஹார்மோன்களை தூண்டி விடுகிறது. இந்த மகிழ்ச்சி ஹார்மோன் சுரப்பு மனநலத்தை மேம்படுத்தும். இதனால் ஞாபகமறதி நோய் (Alzheimer's) தாக்கும் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். மேலும், இது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
ஒரு வெள்ளை முடியைப் பிடுங்கினால் பத்து வெள்ளை முடிகள் வளருமா?
omega 3 rich foods

புற்றுநோய்: ஒமேகா-3 இயற்கையாகவே வீக்கத்தைக் கட்டுப்படுத்த தொடங்குகிறது. உடலில் ஏற்படும் நாள்பட்ட வீக்கமே புற்றுநோய் மற்றும் மூட்டுவலிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இவற்றில் இருந்து ஒமேகா –3 நிவாரணம் அளிக்கிறது.

ஒமேகா 3 பற்றாக்குறையால் ஏற்படும் நோய் அபாயங்கள்:

சர்வதேச அளவில் 80% மக்கள் ஒமேகா-3 ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், சருமத்திற்கு ஓமேகா–3 (omega 3) கொழுப்பு கிடைக்காமல் வறண்ட சருமம், முடி உதிர்தல் ஆகியவை ஏற்படுகின்றன. இது இதய பாதிப்பையும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. விழித்திரை படல ஆரோக்கியத்திற்கும் இந்த கொழுப்பு அவசியமானது. பற்றாக்குறையாக இருந்தால் கண்பார்வையும் குறையத் தொடங்கும்.

ஒமேகா-3 குறைபாட்டை எவ்வாறு அறிவது?

இரத்தப் பரிசோதனையில் ஓமேகா 3 இண்டெக்ஸ் சோதனை செய்வதன் மூலம், உடலில் உள்ள ஒமேகா–3 கொழுப்பு அமிலத்தின் அளவை கண்டறியலாம். இந்த சோதனையில் இரத்த சிவப்பணுக்களில் உள்ள EPA மற்றும் DHA அளவு கணக்கிடப்படுகிறது. இதில் 8% அல்லது அதற்கு மேல் இந்த கொழுப்பு அமிலங்கள் இருப்பது பாதுகாப்பானது. இந்த அளவு 4%க்குக் கீழ் இருந்தால், அந்த நபர் இதயம் மற்றும் மூளை நோய்க்கான அபாயத்தில் இருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
புற்றுநோயைக் கண்டுபிடிக்க இனி ஸ்கேன் தேவையில்லை... காது மெழுகு ஒன்றே போதும்!
omega 3 rich foods

​ஒமேகா 3 கொழுப்பை பெறுவது எப்படி?

உணவில் வாரத்திற்கு இருமுறை மீன் சாப்பிடலாம். சால்மன், மத்தி மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளவும். தினசரி ஒரு கைப்பிடி அளவு ஒமேகா–3 (omega 3) நிறைந்த ஆளிவிதை, வால்நட்ஸ், சியா விதைகள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் பெறலாம். மருத்துவரின் பரிந்துரைப் படி மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதன் மூலமும் பெறலாம். ஒமேகா-3 என்பது ஒரு சத்து மட்டுமல்ல, அது நீண்ட கால ஆரோக்கியத்திற்கான முதலீடு. இதன் மூலம் உங்களின் இதயம் மற்றும் மூளையைப் பாதுகாக்க முடியும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com