பசி எடுக்கலையா? செரிமானப் பிரச்னையா? உங்கள் கிச்சனில் இருக்கும் இந்த 'அற்புத கிழங்கு' பற்றித் தெரியுமா?

Radish
Radish health benefits
Updated on

நாம் அன்றாட உணவு வகைகளில் உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு,  பனங்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இஞ்சி போன்ற பல்வேறு கிழங்குகளை உணவில் சோ்த்து வருகிறோம்.

இதில் ஒவ்வொன்றிலும் பலவித மருத்துவ குணங்களும் அடங்கி உள்ளன.

அவை மட்டுமல்ல ஏனைய கிழங்கு வகைகளிலும் பலவிதமான விட்டமின் சத்துகள் நிறைந்துள்ளன. அவற்றில் முள்ளங்கி கிழங்கையும் (Radish health benefits) சோ்த்துக்கொள்ளலாம். பலரும் விரும்பி சாப்பிடும் கிழங்கு வகைகளில் முள்ளங்கி கிழங்கையும் சோ்த்துக் கொள்ளலாம். இந்த கிழங்கானது குத்துச்செடி வகையைச்சோ்ந்தது.

முள்ளங்கி கிழங்குகளில் வெள்ளை முள்ளங்கி, சிவப்பு முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி என மூன்று வகைகள் உள்ளன.

முள்ளங்கி கிழங்கில் கால்சியம் சத்தும், விட்டமின் சத்துகளும் உள்ளன. இது வயிற்றில் பல தொல்லைகளை குணப்படுத்த வல்லது. இது பசியை அதிகமாக்குவதோடு பசி உணர்வைத் தூண்டக் கூடியது.

அதோடு மலச்சிக்கலையும் போக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. வெள்ளை முள்ளங்கி மற்ற கிழங்குகளைவிட குளிா்ச்சித்தன்மை நிறைந்தது. இதனால் மூல நோய் உள்ளவர்களும், உடல் உஷ்ணம் உள்ளவர்களும் இதை உணவில் அடிக்கடி சோ்த்துக் கொள்ளலாம்.

தலைவலி, சுவாசக்கோளாறு, வயிற்றில் எரிச்சல் உள்ளவர்கள் முள்ளங்கியைப் பயன்படுத்தலாம். வாய்வுத் தொல்லையையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

சிறுநீாில் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. வெள்ளை முள்ளங்கியைப்போல சிவப்பு முள்ளங்கியிலும் மருத்துவ குணங்கள் (Radish health benefits) நிறையவே உள்ளன.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி நகம் வெட்டுபவரா நீங்கள்... அப்போ உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
Radish

வெள்ளை முள்ளங்கியில் இருப்பது போல காரத்தன்மை அதிகம் இருக்காது. சிவப்பு முள்ளங்கியிலும் குடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைய உள்ளன.

மஞ்சள் முள்ளங்கியை காரட் முள்ளங்கி எனசொல்வது வழக்கம். இதை அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம். கண்கள் தொடர்பான நோய்கள் குணமாகும். பற்களால் கடித்து சாப்பிடுவதால் பற்களுக்கு உறுதி ஏற்படும். சாப்பிட்ட உணவு எளிதில் சீரணமாகும் குணம் உள்ளது.

கர்ப்பமான தாய்மாா்கள் சாப்பிடுவதால் எலும்புகள் உறுதியாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கும் இதை கொடுப்பதால் உடலில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகமாகும்.

ஆக, முள்ளங்கியில் சகல மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளதால் சிறியவர்கள் முதல் பொியவர்கள் வரை அடிக்கடி உணவில் சோ்த்துக் கொள்ளலாம்.

ஆக, இயற்கை உணவுகளை புறந்தள்ளாமல் அடிக்கடி உணவில் சோ்த்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாமல்லவா!

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com