Bryophyllum pinnatum என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படும் ஒரு இலைதான் ரணக்கள்ளி. இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்துப் பார்ப்போம்.
ரணக்கள்ளி இலைகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை நாம் சாறாகவோ அல்லது ஸ்மூதிஸாகவோ எடுத்துக்கொள்ளலாம். இதலிருந்து கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகளைப் பார்க்கலாம்.
1. ரணக்கள்ளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்பு ஆரோக்கியம், தசை செயல்பாடு போன்றவற்றிற்கு இது உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கிறது.
2. இதன் இலைகள் ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது. தோல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் இது நன்மைப் பயக்கிறது.
3. மேலும் காயங்கள், வெட்டுகள் போன்றவற்றில் இருந்து விரைவில் குணமுடைய இந்த இலைகள் பயன்படுத்துப்படுகிறது. இந்த இலைகள் வரலாற்றில் அதிகம் அறியப்பட்ட ஒன்றாகும்.
4. அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட இது வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
5. இது செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலைப் போக்கவும் குடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
6. நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி நோய்களிலிருந்து குணப்படுத்துகிறது.
7. இவை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை நிர்வகிப்பதற்கும் இது உதவுகிறது.
8. முக்கியமாக இந்த இலைகள் எடை குறைவிற்கு மிகவும் பலனளிக்கும். அடிக்கடி பசி எடுப்பதைத் தடுக்கும்.
9. இது சுவாச பிரச்னைகளை போக்குகிறது. மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்னைகளையும் தடுக்கிறது.
10. காதுவலிக்கு ரணக்கள்ளி மூலிகையின் இலைகளை கசக்கி காதில் இரண்டு சொட்டுகள் விட, காது வலி உடனே குணமாகும்.
ரணக்கள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். ரணக்கள்ளி மற்றும் வெற்றிலை அரைத்து சேர்த்து புண்களில் வைக்கலாம். முதல் நாள் மிகச்சிறிய இலையில் இருந்து தான் சாபிட ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் சற்று பெரிய இலை, அதற்கு அடுத்த நாள் அதைவிட சற்று பெரியது இப்படி படி படியாகதான் சாப்பிட வேண்டும்.
சிறுநீரகக் கற்களை கரைக்க ரணகள்ளி இலைகளைத் தொடர்ந்து 7 நாட்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் எவ்வளவு பெரிய சிறுநீரகக் கற்களையும் கரைத்து விடலாம்.
ரணக்கள்ளியை முதலில் சிறிய இலைகளாக எடுத்துக்கொன்டு படிபடியாக பெரிய இலைகளை எடுத்துக்கொள்ளலாம். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டாலும் வயிற்று வலி, நெஞ்செரிச்சல், குமட்டல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.
கர்ப்பமாக உள்ளவர்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் இந்த இலைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மேலும் இந்த இலைகளை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வது நல்லது.