பலாக்காய் பவுடர் பயன்பாட்டின் ஆரோக்கிய நன்மைகள்!

Health benefits of Raw Jackfruit Powder
Health benefits of Raw Jackfruit Powder
Published on

லாக்காய் பவுடர் (Raw Jackfruit Powder) பல வகையான ஊட்டச்சத்துக்களை அளிக்கக்கூடிய ஓர் உன்னதமான உணவாக சமீபத்திய கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. பழுக்காத பச்சை நிற பலாக்காயை வெட்டி நன்றாகக் காய வைத்து அரைத்து இப்பவுடரைத் தயாரிக்கலாம். நாம் உட்கொள்ளும் எல்லா வகையான உணவுகளுடனும் இதை சேர்த்து உண்ணலாம். பலாக்காய் பவுடரிலிருந்து கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இதிலுள்ள பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தானது மிகச் சிறந்த முறையில் கல்லீரல் மீது படர்ந்திருக்கும் (Fatty Liver) கொழுப்புகளை நீக்க உதவும். இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவும். பெக்ட்டினிலிருந்து அதிகபட்ச பலனை அடைய ஒரு டீஸ்பூன் பலாக்காய் பவுடரை தண்ணீரில் கலந்து அருந்தலாம். அல்லது மூன்று டீஸ்பூன் பலாக்காய் பவுடரை  அரிசி மாவு, சிறு தானிய மாவு  அல்லது முழு கோதுமை மாவுடன் கலந்து ரொட்டி போன்ற டிபன் வகையறாக்கள் செய்து உண்ணலாம்.

சூப், கறி மற்றும் ஸ்டூ (Stew) போன்றவற்றிலும் அவ்வுணவுகள் கெட்டித்தன்மை பெறவும், அவற்றில் நார்ச்சத்து அதிகரிக்கவும் சேர்த்துக் கொள்ளலாம். பிரட், மஃப்பின், பான்கேக் மற்றும் தேனுடன் கலந்து வீட்டிலேயே எனர்ஜி பார் தயாரிக்கவும் இந்தப் பவுடரை உபயோகிக்கலாம். இது செரிமானம் சிறப்பாக நடைபெறவும் திருப்தியுற்ற உணர்வு பெறவும் உதவி புரியும். பலாக்காய் பவுடரில் வைட்டமின் C, B காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற கனிமச் சத்துக்களும் உள்ளன.

இதையும் படியுங்கள்:
பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் உபயோகங்கள்!
Health benefits of Raw Jackfruit Powder

பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்க உதவும். அதன் மூலம் இதய இரத்த நாளங்கள் கோளாறின்றி சிறப்பாக செயல்புரிய முடியும். இதிலுள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயராமல் பாதுகாக்கவும், உடலுக்கு தொடர்ந்து சக்தி அளிக்கவும் உதவும். பலாக்காய் பவுடர் க்ளூட்டன் ஃபிரீயான உணவாதலால் இது க்ளூட்டன் சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் மற்றும் சீலியாக் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் உண்பதற்கு ஏற்ற உணவாகிறது. இது குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாகிறது.

இயற்கையாகவே இது குறைந்த கலோரி அளவு மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து கொண்ட உணவாகையால் எடைப் பராமரிப்பில் கவனம் கொண்டுள்ளவர்களுக்கு ஏற்றது. இது மலச்சிக்கல் நீங்கவும் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவும். ஒவ்வொரு 100 கிராம் பலாக்காய் பவுடரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் விவரம்:

இதையும் படியுங்கள்:
இரவு நேரத்தில் ஜாதிக்காய் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் 7 நன்மைகள்!
Health benefits of Raw Jackfruit Powder

கலோரி 150 to 160 kcal., கார்போஹைட்ரேட்ஸ் 35 முதல் 40 கிராம், கரைக்கூடிய நார்ச்சத்து 5 முதல் 8 கிராம், புரோட்டீன் 2 முதல் 3 கிராம், கொழுப்புச் சத்து 0.5 முதல் 1 கிராம், பொட்டாசியம் 400 முதல் 500 மில்லி கிராம். 50 கிராம் அரிசி, கோதுமை மற்றும் மில்லட் மாவுகளில் இருக்கும் நார்ச்சத்து 30 கிராம் பலாக்காய் பவுடரில் உள்ளது.

அளவுக்கு அதிகமாக இதை உட்கொள்வது வாய்வு பிரச்னை, வயிறு வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற கோளாறுகள் உண்டாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். பலாப்பழ அலர்ஜி உள்ளவர்கள் பேட்ச் டெஸ்ட் (Patch test) பண்ணிக்கொண்டு ஒவ்வாமையின் அறிகுறி இல்லையென்றால் மட்டுமே இதை உட்கொள்ளலாம். உயர் இரத்த அழுத்தம் மற்றும் டயாபெட் நோய் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்பே இதைப் பயன்படுத்த முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com