வெங்காயத்தாளின் மேற்பகுதியானது பச்சையாகவும் அடிப்பகுதி வெள்ளையாகவும் இருக்கும். வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி 2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெங்காயத் தாளானது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என்ன பலவாறு அழைக்கப்படுகிறது. இது சாம்பார் வெங்காயம், பல்லாரி, பூண்டு குடும்பத்தை சேர்ந்த கீரையாகும்.
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் எனும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
மேலும், கண் நோய் மற்றும் கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.
வெங்காயத்தாள் ரத்தத்தில் காணப்படும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மற்றும் உடலின் குளுக்கோஸ் தன்மையை அதிகரிக்கிறது.
வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது.
வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கவும், அதனால் உண்டாகும் இதய அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
வெங்காயத்தாள் மற்றும் வெங்காய பூவை அரைத்து வாயை கொப்பளித்தால் பல் வலி நீங்கும். ஈறுகள் சம்பத்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
வெங்காயத்தாளை உணவில் சேர்ப்பதால் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
வெங்காயத்தாள் பசியை தூண்டும் உணவாகவும், விரைவான சிற்றுண்டியாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
இதில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இரைப்பை அலர்ஜி அமிலத்தன்மை மலச்சிக்கல் மற்றும் பிற நிலைமைகள் உள்ளிட்ட கடுமையான செரிமான பிரச்சனைகள் இருப்பின் வெங்காயத்தாளை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், வெங்காயத் தாளில் உள்ள நார்ச்சத்துக்கள் நல்ல இயக்கத்தை எளிதாக்குகிறது. இது செரிமான அமைப்பை மிகவும் சுறுசுறுப்பாக்கும். வீங்கிய குடல்களுக்கும் உதவுகிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் காலை மற்றும் மாலை வேளையில் ஒரு நாளைக்கு இருமுறை போதுமான வெங்காயத்தாளை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். இது தவிர மதிய உணவு இரவு உணவிற்கு வெங்காயத்தாளை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
வெங்காயத்தாளில் லுடின் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. இவை இரண்டுமே கண் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
கண்களின் வீக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இது பார்வை இழப்பை ஏற்படுத்தும் கோளாறுகளை எதிர்த்து போராட வழி வகுக்கிறது.
வெங்காயத்தாளில் இயற்கையாகவே அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை சாதாரண ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
வெங்காயத்தாள் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கவும், தீங்கு விளைவிக்கும் கொழுப்பைத் குறைக்கவும் உதவுகிறது.
இதன் மூலம் இதயத்தின் தசை செயல்பாட்டையும் மேம்படுத்தலாம். கூடுதலாக பக்கவாதம் மற்றும் மாரடைப்பைக் குறைப்பதில் மிகவும் நன்மை பயக்கிறது.
குறிப்பாக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. புற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுகிறது. இதில் உள்ள பிளாவனாய்டுகள் மற்றும் அல்லைவ் சல்பைடு போன்ற பொருட்களே காரணமாகும். எனவே புற்று நோய் செல்கள் வளரக் காரணமான நொதிகளை தடுக்கிறது. அன்றாட உணவில் சேர்ப்பதால் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை குறைக்கலாம்.
சருமப் பொலிவை அதிகரிக்க, உடலில் கொலோஜன் உற்பத்திக்குக் காரணமான வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் வெங்காயத்தாளில் நிறைந்து காணப்படுகின்றன.
இதனை பொறியல் கூட்டு குழம்பு என அனைத்திலும் பயன்படுத்தலாம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)