உடல் பருமனால் அவதியா? கருப்புக்கு பதில் வெள்ளைக்கு மாறலாமே?!

வெள்ளை மிளகில் உள்ள 10 ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
white pepper
white pepperImg credit: AI Image
Published on

கருப்பு மிளகைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அதன் சகோதரனான வெள்ளை மிளகு (White Pepper) பற்றி பலருக்கும் தெரிவதில்லை. சமையலறையில் ஒரு சுவைப்பொருளாகத் தொடங்கி புற்றுநோய் தடுப்பு வரை இதன் நன்மைகள் நீண்டு கொண்டே செல்கிறது.

வெள்ளை மிளகின் ஆரோக்கிய நன்மைகள்:

  • வெள்ளை மிளகு செரிமானத்தை எளிதாக்கும். இதிலுள்ள பைப்பரின், செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இது ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

  • மூட்டு வலிக்கான சிகிச்சையில் வெள்ளை மிளகு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மிளகை மையாக அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பற்று போட்டால் மூட்டு வலி குணமாகும்.

  • இது தோல் சுருக்கங்களைத் தடுக்கவும், கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்கவும், சருமம் தொங்குவதைத் தடுக்கவும், சரும வறட்சியை நீக்கவும், சருமத்தின் உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கவும் உதவுகிறது.

  • வெள்ளை மிளகு அறிவாற்றல், மூளை செயல்பாடுகளை மேம்படுத்தவும், மூளை செல்கள் சிதைவதைத் தடுக்கவும் உதவுகிறது.

  • இதில் அதிகமாக காணப்படுகின்ற பைபரின் வலி நிவாரணியாகவும் உள்ளது. இது உடலில் வீக்கத்தைக் குறைத்து, வலியைக் குறைக்கிறது.

  • வயிற்றுப்புண் வராமல் தடுக்க வெள்ளை மிளகு பயன்படுகிறது. மேலும் வயிற்றில் பாக்டீரியா உருவாவதை தடுக்கிறது.

  • வெள்ளை மிளகு, உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உடலில் நல்ல கொலஸ்ட்ராலை பராமரிக்கவும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
நடிகர் மம்மூட்டிக்கு வந்த பாதிப்பு - வாசனை, சுவை தெரியவில்லையா? இதோ முழு விவரம்!
white pepper
  • வெள்ளை மிளகினை தயிருடன் கலந்து உச்சந்தலையில் தடவி, முப்பது நிமிடங்கள் வைத்திருந்த பின்னர் கூந்தலை கழுவ வேண்டும், இவ்வாறு செய்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வெள்ளை மிளகு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் முடி வளர்ச்சியும் மேம்படுகிறது.

  • வெள்ளை மிளகினை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் சக்தி வெள்ளை மிளகுக்கு உண்டு.

  • வெள்ளை மிளகில் உள்ள கேப்சைசின், இன்று உலகளவில் பல ஆண்களை பாதிக்கக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

- ஆர்.பிரசன்னா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com