முடி முதல் இரத்தம் வரை: உங்கள் உடல் சொல்லும் அபாய சிக்னல்கள் என்ன?

அடர்த்தியான முடி மற்றும் அடர்த்தியான இரத்தம் - கவனிக்க வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள்!
Hair - Blood | ஆரோக்கியம்
Hair - Blood | ஆரோக்கியம்AI Image
Updated on

உங்கள் முடி தண்ணீர் மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை வேகமாக உறிஞ்சுகிறதா? ஆனால் அதே சமயத்தில் விரைவில் வறண்டு விடுகிறதா? எளிதில் பஞ்சு போல் வீங்கி விடுகிறதா?. அடிக்கடி உடைந்து விடுகிறதா? பொலிவை இழந்து விடுகிறதா?. அப்படியானால் நீங்கள் முடி போராசிஸ் பற்றி கேள்விப் பட்டிருக்கலாம். உண்மையில் அதற்கு என்ன அர்த்தம்?

போரோசிடி என்பது முடியானது தண்ணீர், ஈரப்பதம் மற்றும் முடி பராமரிப்பு பொருட்களை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும் திறன் ஆகும். இது முக்கியமாக முடியின் வெளிப்புற பாதுகாப்பு க்யூட்டிகிள் நிலைமையைப் பொறுத்தது‌. இதை ஒவ்வொரு முடியையும் மூடியிருக்கும் சிறிய நுண்ணிய செதில்கள் (scales) போல் கற்பனை செய்யலாம். அவை ஆரோக்கியமாகவும் , நெருக்கமாகவும் இருந்தால்தான் முடி ஈரப்பதத்தை சிறப்பாகத் தக்கவைத்துக் கொள்ள முடியும். இவை சேதமடைந்து அதிகமாக திறந்து விட்டால் முடி தண்ணீரை விரைவாக இழந்து பலவீனமாகும்; எளிதில் சேதமடையக் கூடியதாகவும் ஆகிவிடும்.

Hair  | ஆரோக்கியம்
Hair | ஆரோக்கியம்AI Image

போரோசிடியில் மூன்று வகை உண்டு

  • குறைந்த போரோசிடி

இந்த நிலையில் க்யுட்டிகிள் மிக இறுக்கமாக இருக்கும். முடி நனைவதற்கும்,பொருட்களை உறிஞ்சுவதற்கும் அதிக நேரம் எடுக்கலாம்.

  • மீடியம் போரோசிடி

ஈரப்பதத்தை உறிஞ்சுவதும்,தக்க வைத்துக் கொள்வதும் சமநிலையில் இருக்கும்.

  • அதிக போரோசிடி

இந்த வகையில் க்யூட்டிகிள் அதிகமாக திறந்திருக்கும். அல்லது சேதமடைந்த நிலையில் இருக்கும். முடி ஈரப்பதத்தை வேகமாக உறிஞ்சும். அதே சமயத்தில் அதே வேகத்தில் இழந்துவிடும்.

க்யூட்டிகிள் ஏன் சேதமடைகிறது?

பல காரணங்கள் உள்ளன

  • அடிக்கடி ஹேர் ட்ரையர் பயன்படுத்துவது,

  • ஸ்ட்ரெய்ட்ஸ் மற்றும் கலர் போன்ற வெப்ப சாதனங்கள் பயன்படுத்துவது.

  • முடிக்கு டை அடித்தல்

  • அதிக சூரிய ஒளி பாதிப்பு

  • கடுமையான ரசாயனம் பொருட்கள்

  • மிக இறுக்கமான முடி ஸ்டைல்கள்

  • சில முடி நோய்கள்

முடியை மேம்படுத்த வழிகள்:

வெப்ப சேதத்தை குறைக்கவும். வெப்ப பாதுகாப்பு பயன்படுத்துங்கள்

சரியான கண்டீஷனர் மற்றும் ஹேர் மாஸ்க் பயன் படுத்தவும். இவை உராய்வை குறைத்து ஈரப்பதத்தை மேம்படுத்தும்.

முடிபாதுகாப்பு பொருட்களை தேர்வு செய்யவும்‌'

உதாரணமாக கண்டீஷனிங் சிலிகோன்கள், அமினோ அமிலங்கள், ஹைட்ரோலைஸ்டு புரதங்கள்

சேதமடைந்த நுனிகளை வெட்டவும்.

தலை நோய்க்கு சிகிச்சை பெறுங்கள். முடியின் வெளிப்புற பகுதி உயிரற்ற நார்களால் ஆனது. பெரும்பாலான சிகிச்சைகள் முடியை பாதுகாப்பாகவும் , மென்மையாகவும் தோற்றத்தை மேம்படுத்த மட்டுமே உதவுகின்றன. முடியை உள்ளிருந்து உயிர்ப்பிக்க முடியாது‌.

மேற்கூறியவற்றை கவனத்தில் வைத்து முடிக்கு பயன்படுத்தும் பொருட்களில் கவனமாக இருங்கள்.

Blood | ஆரோக்கியம்
Blood | ஆரோக்கியம்

பாலிசிதீமியா வேரா என்றால் என்ன தெரியுமா?

நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா? தலைவலி உள்ளதா? அல்லது  உடல் அரிப்பு உள்ளதா‌?

இதற்கெல்லாம் காரணம் உங்கள் இரத்தம் தடிமனாவதுதான். இதை thick blood disease என்பர். இந்த நிலையில் இரத்தம் உறைதல் ஏற்படும்‌. இதை நன்கு கவனிக்காவிட்டால் பிரச்னை ஏற்படும். இந்த மாதிரி இரத்தம் அடர்த்தியாவதைத்தான் பாலிசிதீமீயா வேரா என்று மருத்துவத்தில் கூறப்படுகிறது.

இதற்கான காரணங்கள்

போன் மாரோவில் அதிக இரத்தச் சிவப்பு அணுக்கள் உருவாகும் போது பாலிசிதீமியா வேரா நிலை ஏற்படும்'

இது இரத்த உறைதலை ஏற்படுத்தும்

தீராத தலைவலி, சோர்வு மற்றும் அரிப்பு போன்றவை அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்தலாம்.

நம் உடலில் இரத்தம் அதிக அழுத்தமாக இருக்கும்போது இந்த பாலிசிதீயனமியா வேரா நிலை ஏற்படுகிறது‌.

அதிக அளவு சிவப்பு அணுக்களின் உற்பத்தி இரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும். இதனால் இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இல்லாமல் பிரச்னை ஏற்படும்.  இந்த பாலிசிதீமியா வேரா 'மெதுவாக வளரும் இரத்தப் புற்றுநோய்' என்றும் கூறப்படுகிறது. இது ப்ளேட்லெட்டையும் பாதிக்கிறது.

இதையும் படியுங்கள்:
பாதம் முதல் கூந்தல் வரை 9 - ஹென்னா ஃப்ளோரல் ஆயில்: 'HAIR'கான ஹெல்த்தி டானிக்!
Hair - Blood | ஆரோக்கியம்

போன் மாரோ செயல்பாடு (போன் marrow)

இரத்த அணுக்களின் தொழிற்சாலையாக எலும்பு மாரோ செயல்படுகிறது.  இது மிக வேகமாக இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும்போது இரத்தம் அடர்த்தியாக  ஆகிறது

நீங்கள் சோர்வாக வரும் மற்றும் தலைவலியாலும் அவதிப்பட்டாலோ அல்லது பார்வை மங்கலாக ஆனாலோ உடனே பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் இந்த நிலைமை ஏற்படும்போது மூளைக்கு சரியான பிராணவாயு கிடைக்காது. மேலும் இரத்தம் அடர்த்தியாக ஆவதால் ஒருசிலருக்கு மரத்துப்போன தன்மை உடலில் கைகளிலும் கால்களிலும் ஏற்படலாம்.

சிலருக்கு காரணமில்லாமல் இரத்தம் வெளியேறலாம்.  இந்த பிரச்னைகளை உடனடியாக கவனிக்க வேண்டும் . இது மரபு வழியாக வருவதாக கூட அறியப்படுகிறது‌. உங்கள் உடலில் இரத்தம் அடர்த்தியாகும் போது இரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இதனால் நம் உடல் பாகங்களுக்கு பிராணவாயு செல்வது தடைபடும்‌

நீங்கள் கவனிக்க வேண்டியவை

  • இரத்தம் உறைதல்

  • மாரடைப்பு

  • பக்கவாதம்

மேற்கூறிய பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற் கொள்ள வேண்டும். இரத்த சம்பந்த மருத்துவர்களிடம் நீங்கள் உடலை பரிசோதித்து இந்த  பாலிசிதீமியா வேரா பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்‌

இதை அலட்சியமாக கவனிக்காவிட்டால் இரத்த அடர்த்தியால் ஏற்படும் ஆக்சிஜன் தடையால் இதயப் பிரச்னைகள் மற்றும் பக்கவாதத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.

இதையும் படியுங்கள்:
மூளையோட சூப்பர் செக்யூரிட்டி சிஸ்டம் -Blood Brain Barrier எப்படி வேலை செய்யுதுனு பார்ப்போமா?
Hair - Blood | ஆரோக்கியம்
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com