
இலங்கையில் நீரழிவு நோயை, சீனி நோய் மற்றும் சக்கரை நோய் என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இதை 'சைலண்ட் கில்லர்' அதாவது நோய் இருந்து சிகிச்சை எடுக்க வில்லை என்றால் உயிர் போவது நிச்சயம்.
உடலில் இன்சுலின் சரியாக சுரக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சக்கரை நோய் வந்தே தீரும். இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் சக்கரை அளவை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
இந்த நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஒன்றும் இல்லை. எனவே 40 வயதை தாண்டியவர்கள் குறைந்தது 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் சக்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
அப்படி சக்கரை ரத்தத்தில் இருந்தால் முறையான சிகிச்சை செய்ய வேண்டும். உலகில் இந்தியாவில் சக்கரை நோய் உள்ளவர்கள் அதிகம்.
நோய் இருப்பதை உறுதி செய்தால் நீரழிவு ஸ்பெஷலிஸ்ட் கொடுக்கும் மாத்திரைகளை முறையாக எடுத்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சக்கரையின் அளவு கட்டுப்படுத்தபடும்.
இந்த நோய் உள்ளவர்களுக்கு பசி அதிகம் எடுக்கும். எப்போதும் போல் 3 வேளை சாப்பிட கூடாது. கொஞ்சம் கொஞ்சமாக 5 வேளைகள் சாப்பிடலாம். இவர்களுக்கு என்று பாஸ்மதி அரிசி உள்ளிட்ட 4 வகையான அரிசிகள் உள்ளன. இவர்கள் உணவிற்கு பதிலாக நிறைய காய்கறி, பழம் சாப்பிடலாம்.
ஆம், நார் சத்து உள்ளவற்றை தைரியமாக சாப்பிடலாம். இனிப்பு உள்ள எந்த உணவும் சாப்பிட கூடாது. பிறகு தினமும் ஒரு அரை மணி நேரம் வாக்கிங் போகலாம். மேலும் ஒரு 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யலாம். நோயாளிகளுக்கு அதிக பசி எடுக்கும் என்பதால் அவர் சாப்பிட கூடிய உணவு வகைகள் வீட்டில் எப்போதும் இருக்க வேண்டும்.
சக்கரை நோயுடன் பலருக்கு உயர் ரத்த அழுத்தம் நோய் வருகிறது. இது சக்கரை குறைந்தால் மட்டுமே நார்மல் ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். விருந்துகளில் நன்கு வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு மாத்திரை ஒன்று அதிகம் எடுத்து கொள்ளலாம் என்று இருக்க கூடாது.
மாத்திரை சாப்பிட ஆரம்பித்த பிறகு வாரம் ஒரு முறை ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் நீரழிவு மாத்திரைகள் சரியா என்று கண்காணிக்க முடியும்.
சக்கரை குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும். இது மிகவும் அவசியம். பிறகு வேறு ஏதாவது நோயிற்காக டாக்டரை பார்க்க போனால் கட்டாயம் டாக்டரிடம் தங்களுக்கு நீரழிவு நோய் இருப்பதையும் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளையும் கட்டாயமாக காட்ட வேண்டும்.
நோய் வந்து விட்டதே என்று மனம் கலங்காமல் மாத்திரைகளை சாப்பிட்டு, சிறிது சிறிதாக உணவை எடுத்துக் கொண்டால் கட்டாயம் நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
சாப்பிடாமல் எடுக்கும் ரத்த பரிசோதனையில் சக்கரை அளவு நிச்சயமாக100 க்கு கீழே இருக்க வேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து மீண்டும் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். அது 200 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இறுதியாக ரத்த பரிசோதனை அவசியம். சக்கரை நோய் இருந்தால் மாத்திரைகளை தவறாமல் சாப்பிட வேண்டும். பிறகு உடற்பயிற்சி, யோகா, நடை பயிற்சி (வாக்கிங்) செய்தால் நிச்சயமாக நாம் நம் ரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்!
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)