1. பூண்டை உரித்து லேசாக வதக்கி, தேனில் ஊற வைத்து சாப்பிட வயிறு சம்பந்தமான கோளாறுகள் அறவே நீங்கி விடும்.
2. முள்ளங்கியுடன் சிறிது உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு, பூண்டு, தக்காளி ஒன்று சேர்த்து வதக்கி துவையல் அரைத்து டிபனுக்கு தொட்டு சாப்பிட எலும்பு பலம்பெறும்.
3. வெற்றிலை இரண்டுடன் ஐந்து மிளகு, ஒரு சொட்டு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி போய்விடும்.
4. சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத்தொல்லை விலகும்.
5. மணத்தக்காளிக் கீரை, பருப்புக் கீரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குறையும்.
6. காலையில் வெறும் வயிற்றில் சீரகத்தண்ணீர் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
7. வாய்ப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு கேரட் சாறு ஒரு சிறந்த மருந்து போல் செயல்படும்.
8. தர்பூசணி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது.
9. மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும். ரத்தம் சுத்தம் அடையும்.
10. பாகற்காய் சாறோடு, சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை நோய் நீங்கும். குடல் புழுக்கள் மடியும்.
11. இளநீர் உடல் சூட்டை தணிக்கும். உடலை சீராக வைத்துக்கொள்ள உதவும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
12. விளாம்பழத்துடன் பனங்கற்கண்டை கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் நீங்கி விடும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)